August 14, 2018

இலங்கையில் காதியானிகளின் வஞ்சகத் திட்டம், முஸ்லிம்களின் ஈமான் சூரையாடப்படுமா..?

இலங்கை நாட்டில் அஹ்மதிய்யாஹ் எனும் காதியானிகள் முஸ்லிம் அல்லாத பாராளுமன்ற உறுப்பினர்கள் மத குருமார்கள், பொது நூலகங்கள் அரசாங்க பாடசாலை பிரதி நிதிகள் என முக்கியஸ்தர்களை சந்தித்து தாமே உண்மையான முஸ்லிம்கள் தாம் உலக சமாதானத்திற்காக போராடும் ஜமாஅத் என்று கூறி மாற்றுமதத்தவர்களிம் இடம் பிடிக்க பல முயற்சிகளை செய்து வருகின்றனர்.

அவ்வாரான சந்திப்புக்களில் பின் வரும் சில புத்தகங்களையும் அன்பளிப்பு செய்து வருகின்றனர்:
1. அல் குர்ஆன் சிங்கள மொழி பெயர்ப்பு - அஹ்மதிய்யாஹ் ஜமாஅத்தினரால் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களின் அடிப்படை கொள்கைக்கு மாற்றமாக செய்யப்பட்ட குர்ஆன் மொழிப் பெயர்ப்புப் பிரதி
2. உலக நெருக்கடியும் அமைதிக்கான வழிமுறையும் (World Crisis and the Pathway to Peace) (மிர்ஸா மஸ்ரூர்)
இவர்களுடைய செயற்பாடுகள் மிகவும் முற்றி விட்டது. அனைத்து முஸ்லிம்களும் மிகவும் கவணமாக இருக்கவேண்டும். இலங்கை முஸ்லிககளின் ஈமானுக்கு இவர்கள் கென்சரை ஏற்படுத்த பாரிய முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர்.
முஸ்லிம்களாகிய நாம் இப்போது என்ன செய்யவேண்டும்
1. RRT எனப்படும் முஸ்லிம் சட்டத்தரனிகளின் ஒரு அமைப்பினால் வெளியிடப்பட்ட 
(COMPILATION OF HISTORICAL DECLARTIONS SRI LANKAN AND (GLOBOL MUSLIMS ON QAADIYANISM) 

காதியனிகள் பற்றி தேசிய மற்றும் சர்வதேச முஸ்லிம்கள் வரலாறு நெடுகிலும் மேற்கொண்ட தீர்மானங்களின் தொகுப்பை பெற்று மக்கள் மயப்படுத்துவது.

இத்தொகுப்பின் ஆரம்பத்தில் காதியானிகள் பற்றி சட்டத்தரனி பாயிஸ் முஸ்தபா அவர்களும் இலங்கை முஸ்லிம் சட்டத்தரணிகள் ஒன்றியமும் (MUSLIM LAWYERS ASSOCIATION) 

வழங்கிய கருத்துரையிலிருந்து  பின் வரும் விடயம் கட்டாயம் இங்கு  கூறப்பட வேண்டும் என நினைக்கின்றேன்.
சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா அவர்கள் காதியானிகள் பற்றி கருத்து தெரிவிக்கும் பொழுது; இஸ்லாத்தின் அடிப்படை சட்டங்களுக்கு முரணான கொள்கையுடைய மிர்ஸா குலாம் அஹ்மத் என்பவரை இவர் ஒரு முஸ்லிம் அல்ல என்று முற்றாக நிராகரித்துள்ளார்இ மிர்ஸா குலாம் அஹ்மத் இறுதி நபித்துவத்தை மறுத்தது மட்டுமல்லாமல் தன்னை ஒரு நபி என்றும் தன்னையே வாக்களிக்கப்பட்ட ஈஸா என்றும் தானே மஹ்தி என்றும் காலத்திற்கு காலம் ஒன்றுக்கொன்று முரணான பிரகடனங்களை வெளியிட்டுள்ளார்.

இதே இடிப்படையில் இலங்கையின் சட்டத்தரணிகளும் அவர்களுடன் தொடர்பான இலங்கை முஸ்லிம் சட்டத்தரணிகளின் சங்கமும் ஏகோபித்த கருத்தாக காதியானிகள் முஸ்லிம்கள் அல்லர் என்றும் வலியுறுத்தியுள்ளமை இங்கு கவனிக்கத் தக்கதாகும்.

அத்துடன் காதியானிகளை மார்க்கக் கடமைகளைச் செய்வாற்காக பள்ளிவாசல்களுக்கு அனுமதிக்கக் கூடாது.

முஸ்லிம் என்ற வகையில் ஒரு முஸ்லிமுக்கு உரிமையான பிரதி நிதித்துவத்தை காதியானிகளுக்கு வழங்க முடியாது.

ஒரு முஸ்லிம் இருக்கவேண்டிய பதவியில் காதியானி ஒருவர் இருக்க முடியாது.

என்ற கருத்துக்களை இலங்கை முஸ்லிம் சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

2. நாம் எமது உரையாடல்களில் காதியானிகளின் தீய கொள்கைப் பற்றியும் அவர்களின் தந்திர நடவடிக்கைப் பற்றியும் பகிர்ந்துக் கொள்ள வேண்டும்.

3. இதுவரை காலமாக காதியானிகளினால் சந்திக்கப்பட்ட மற்று மதத்வர்களை இனங்கண்டு RRT அமைப்பின் தொகுப்பை வழங்குதல்.

4. பொதுவாக பிற ஊர்களில் திருமண பந்தங்களை மேற்கொள்ள இருப்பவர்கள் குறித்த மணமகன் அல்லது மணமகள்  பற்றி அவ்வூர் மஸ்ஜிதின் சான்றிதழை பெற்றுக் கொள்ள வேண்டும். குறிப்பாக நீர்கொழும்பு பஸ்யாலஇ புத்தளம்இ  பாணதுரஇ போன்ற காதியானிகள் செறிந்து வாழும் இடங்களில் திருமண பந்தங்களை ஏற்படுத்திக் கொள்ள இருப்பவர்கள் இப்பிரதேச மஸ்ஜித்களை தொடர்ப்புகொண்டு அக்குடும்பத்தின் விபரங்களை பெற்றுக் கொண்டு அவர்களை முஸ்லிம்களா அல்லது காதியானிகளா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். ஏனெனில் காதியானிகள் முஸ்லிம்கள் அல்லர் என்று  மார்க்கத் தீர்ப்பு வழங்கப்படடிருப்பதால் காதியானிகளை திருமணம் செய்வது முஸ்லிம்களுக்கு ஆகுமானதல்ல.

5. ஆலிம்கள் மஸ்ஜித் நிர்வாகிகள் மற்றும் துறைசார்ந்தோர் இணைந்து காதியானிகள் மேற்கொள்ளும் போலிப் பிரச்சாரங்களில் முஸ்லிம்கள் சிக்கிக்கொள்ளாது இருக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதேவேளை அவர்கள் முஸ்லிம் சமூகத்திற்குள் ஊடுருவும் வழிகளை அடையாளம் கண்டு அவற்றை தடுக்க முயற்சிக்க வேண்டும்.

அபூ ஹபீப்

3 கருத்துரைகள்:

Qadianis or any other sects will keep emerging as long as Muslims are divided as Sunni, Shia, Ambali, Hanafi, Shafi etc. Why not we call ourselves Muslims and follow only the Quran and Sunnah? We have so many Muslims organizations and Umbrella organization saying all other organizations come under them, what have they done to eliminate poverty and homelessness among the Muslims, establishing proper schools and colleges as we are far behind in education. Quran Madarasas are not the only requirement. We waste all our time to argue who is a better Muslim while we see hundreds of Muslims beg outside mosques like a show piece for non-Muslims on Fridays.

இக்கட்டுரையை வெளியிட்ட சகோ. அபூஹபீபிடம் சில விளக்கங்களை எதிர்பார்க்கின்றோம். அதாவது நீங்கள் கூறுவது போல் காதியானிகளிடம் கவனமாக நடந்து கொள்ளுமாறு கேட்டுள்ளீர்கள் சரி.
1. காதியானிகள் எனப்படுவோரை சாதாரணமாக அடையாளம் காண்பது எவ்வாறு? அவர்கள் நெற்றியில் லேபல் ஒட்டிக்கொண்டிருப்பாள்ளோ? அவங்களுடைய அங்க அடையாளங்கள் என்ன? என்பதை குறிப்பிடவில்லை. எம்மைப் போன்ற சாமான்ய முஸ்லிம்கள் எவ்வாறு அவர்களை எடையாளம் காண்பது?
2. இலங்கை முஸ்லிம்களின் மார்க ரீதியான ஏக தலைமைத்துவம் ACJU வின் இந்த காதியானிகள் சம்பந்தமான எச்சரிக்கை விளக்கங்கள் எவற்றையும் இந்த கட்டுரையில் காணோம்.
3. நீங்கள் இங்கு குறிப்பிட்டுள்ள Muslim Lawyers Association என்பது இலங்கை முஸ்லிம்களை இஸ்லாமிய மார்க் ரீதியா வளிகாட்டல் தலைவர்களா?
4. சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா காதியானிகள் பற்றி வெளிட்டுள்ள கருத்தை குறிப்பிட்டிருக்கிறர்கள். சகோ. பாயிஸ் முஸ்தபா எந்த இஸ்லாமிய பல்கலக்கழகத்தில் பட்டம் பெற்று, அல் குர்ஆனை எத்தனை தடவை மணனமிட்டு இலங்கை முஸ்லிம்களுக்கு வழிகாட்ட முன் வந்துள்ளார். அவர் ஒரு சட்டத்தரணியாக இருந்து வெறும் உண்மையை கொண்டே (பொய்யே உரைக்காமல்) எத்தனை வழக்குகளை வென்று உள்ளார் என்பதை அவர் உறுதி செய்வாரா?

ஆகவே, உங்கள் கட்டுரையில் இறுதிப் பந்தியில் குறிப்பிட்டவாறு இலங்கை முஸ்லிம் சமூகத்தை மார்க ரீதியாக பாதுகாக்க அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா வின் வழிகாட்டல் களையும் அறிவுரைகளையும் பெற்று இவ்வாறான விழிப்புணர்பு கட்டுரைகளை வெளியிடுவீராயின் சிறப்பாக இருக்கும் என்பது வாசகர் எமது கருத்தாகும்.

They are working secretly for a long time ..

It's is time for ACJU to monitor and check their work among Sunni communities ...they work day and night to convert Muslim into their ideaology so we need to see it carefully...
Make some arawsreness among us ..
Publish books saying just wrong ideas organise some conference on them ..
Create a team of experts form us to counter..
ACJU do not have a creative mind to do ..
They are good to know fatwas of some madhabs..
Sorry that do not fit to guide Muslim community today

Post a Comment