Header Ads



முஸ்­லிம்கள் எப்­போதும் நாட்­டுக்கு, ஒரு சுமை­யாக இருக்­கக்­கூ­டாது - இம்­தியாஸ்

(ஏ.எல்.எம்.சத்தார்)

நாட்­டுக்கு நல்­லன செய்­வ­தற்குப் பதி­லாக நாட்­டி­லி­ருந்து எதை­யா­வது பிடுங்­கி­யெ­டுத்துக் கொள்ளவே எங்­களில் பெரும்­பா­லானோர் பழக்­கப்­பட்­டுள்­ளார்கள். முஸ்­லிம்கள் என்ற வகையில் நாம் எப்­போதும் நாட்­டுக்குப் பார­மாக இருப்­பதை விடுத்து நாட்­டுக்கு எம்­மா­லான பங்­க­ளிப்­பு­களைச் செய்­யக்­கூ­டி­ய­வர்­க­ளாக நாம் எங்­களைப் பழக்­கப்­ப­டுத்­திக்­கொள்ள வேண்டும் என்று தேசிய ஊடக மத்­திய நிலையத் தலை­வரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான இம்­தியாஸ் பாக்கீர் மாக்கார் கூறினார்.

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்­னணி கிளைகள் அகில இலங்கை ரீதியில் புன­ர­மைப்புச் செய்­யப்­பட்டு வரு­கின்­றன. அந்த வகையில் கம்­பஹா மாவட்­டத்தில் இடம்­பெற்ற மாநாட்டில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அதில் இம்­தியாஸ் பாக்கீர் மாக்கார் தொடர்ந்தும் கூறி­ய­தா­வது;

"எங்கள் எதிர்­கால வாலிப சந்­த­தி­யினர் நீங்­கள்தான். பணி­வான வாலிப சமூகம் எங்­க­ளுக்குத் தேவை. அத­னா­லேயே இங்கு உங்­களைக் கூட்­டி­யுள்ளோம். ஊழல் மோசடி நட­வ­டிக்­கை­க­ளுக்கு வாலிப சமூ­கத்தில் எப்­போதும் எதி­ரா­ன­வர்­கள்தான். நல்­லி­ணக்கம், ஒரு­மைப்­பாடு குறித்து உங்கள் மீதும் மேலான பொறுப்­புக்கள் உள்­ளன. உங்­க­ளது இளமைத் துடிப்­பினை அவற்­றுக்­காக அர்ப்­ப­ணிப்புச் செய்­வ­தற்­கான காலம் இப்­போது உத­ய­மா­கி­யுள்­ளது. எமது நாட்டு முஸ்லிம் சமூ­கத்தின் எதிர்­கால கன­வுகள் குறித்த சிந்­தனை உங்­க­ளிடம் இருப்­பதை நாம் அறிவோம். அதனை நன­வாக்­கிக்­கொள்ள நாம் உங்­களை ஆசிர்­வ­திக்­கிறோம். முஸ்­லிம்கள் எப்­போதும் நாட்­டுக்கு ஒரு சுமை­யாக இருக்­கக்­கூ­டாது. நாட்­டி­லி­ருந்து எதையும் கேட்டுப் பெற்­றுக்­கொள்­ளாது நாட்­டுக்கு எம்­மா­லான நன்­மை­களைப் புரி­வோ­ரா­கவும் பிற­ருக்கு உத­விகள் செய்­வோ­ரா­கவும் நாம் எங்­களை உரு­வாக்கிக் கொள்­ள­வேண்டும். வாலி­பர்கள் என்ற வகையில் இந்த சவாலை நீங்கள் ஏற்­க­வேண்டும். இப்­போது நீங்கள் இந்த இடத்­திலே ஒன்று திரண்­டி­ருப்­பது பொன்­னான நேரத்தை அர்ப்­ப­ணித்­தி­ருப்­பது உங்­க­ளுக்கு எதையும் பெற்றுக் கொள்­வ­தற்­கல்ல. சமூ­கத்தின் நன்மை கரு­தியே வந்­தி­ருக்­கி­றீர்கள். இத்­த­கைய சிந்­த­னை­யோடு மாத்­தி­ரம்தான் சமூ­கத்­துக்­க­ாகவும் நாட்­டுக்­கா­கவும் பணி­களை எங்­களால் முன்­னெ­டுத்துச் செல்­ல­மு­டியும். ஆனால் இன்னும் முஸ்லிம் சமூ­கத்­துக்கு மத்­தியில் பிற்­போக்கு சிந்­த­னை­யுள்ளோர் சிலர் இருக்­கவே செய்­கின்­றனர். இத்­த­கையோர் இதர எல்லா சமூ­கங்­க­ளிலும் காணப்­ப­டு­வது உண்மை. இத்­த­கைய பிற்­போக்கு எண்­ணங்­களை வாலி­பர்கள் என்ற வகையில் உங்­களால் மாற்­றி­ய­மைக்­க­மு­டியும்.

முஸ்லிம் லீக் அமைப்­புக்கு உன்­ன­த­மான வர­லா­றொன்­றுள்­ளது. இதற்கு முன்­னோ­டி­க­ளாக டாக்டர் கலீல், ரி.பி.ஜாயா, பதி­யுத்தீன் முஹ்மூத், எனது தந்­தை­யான பாக்ககிர் மாக்கார் போன்ற தலை­வர்கள் நாட்டை முன்­னி­லைப்­ப­டுத்தி பணி­யாற்­றி­யுள்­ளார்கள். கட்­சியை, நிறங்­களை ஒருபுறம் ஒதுக்­கி­விட்டு சேவை செய்­துள்­ளார்கள். அந்த வர­லாற்­றோடு மட்டும் நாம் திருப்­தி­ப­்பட­மு­டி­யாது. அந்த எம் முன்­னோ­டிகள் நடந்­து­கொண்ட செயற்­ப­டுத்­திய நற்­பண்­பு­களை நாம் முன்­மா­தி­ரி­யாகக் கொண்டு உழைக்­கக்­கூ­டிய ஒரு சமூ­க­மாக, அறி­வுக்கு முன்­னு­ரிமை கொடுக்கக் கூடிய சிறந்­த­தொரு சமூ­க­மொன்றைக் கட்­டி­யெ­ழுப்ப வேண்டும்.

நாம் கம்­ப­ஹா­வுக்கு வரு­வ­தற்கு முன்னர் மன்­னா­ருக்கு சென்றோம். மொன­ரா­க­லைக்குப் போனோம், யாழ்ப்­பா­ணத்­துக்கும் விஜயம் செய்தோம். இத்தகைய சகல மாவட்டங்களிலும் எமது செயற்பாடுகள் மிகவும் வெற்றிகரமாக நடந்தேறின. அதன்படி உங்களது எதிர்காலத் திட்டங்களும் சிறப்பாக கைகூடும் என்பதை என்னால் உணரமுடிகிறது. முன்னாள் தலைவர்களில் ஒருவர் என் வகையில் இவ்விடயம் குறித்து நான் உளப்பூரிப்படைகிறேன்" என்று தனது மகிழ்ச்சியையும் அவர் வெளியிட்டார்.
-Vidivelli

2 comments:

  1. Gentleman politician. Well said. All sri lankan should follow it.

    ReplyDelete
  2. Today we Muslims have opportunistic politicians who led our society to a situation we are facing now.Muslim communal parties for yheir own end sacrificed our community
    Results are clear We cannot do business and our economical social religious activities
    effected . We are going to realise one day.
    Our fate can be changed by gentleman politicians like Hon Bakeer Marker.
    We Muslims needs leaders like him it is paramount importance today

    ReplyDelete

Powered by Blogger.