Header Ads



ஞானசாரருக்கு நேற்று, நடந்தது என்ன..? (முழு விபரம் இணைப்பு)


பொது­பல சேனா அமைப்பின் பொதுச்­செ­ய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் நீதி­மன்றை அவ­ம­தித்­த­தாகக் கூறி  தாக்கல் செய்­யப்­பட்ட வழக்கில், அனைத்துக் குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்­பிலும் அவரை குற்­ற­வா­ளி­யாகக் கண்ட மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றம் அவ­ருக்கு 19 வருட கால சிறைத்­தண்­டனை விதித்து நேற்று

தீர்ப்­ப­ளித்­தது.  நீதி­மன்ற அவ­ம­திப்பு உள்­ளிட்ட  நான்கு குற்­றங்கள் தொடர்பில் விதிக்­கப்­பட்ட இந்த 19 வருட சிறைத் தண்­ட­னையை 6 வரு­டங்­களில் அனு­ப­விக்க இதன்­போது மேன் முறை­யீட்டு நீதி­மன்றின் தலைமை நீதி­பதி ப்ரீத்தி பத்மன் சூர­சேன மற்றும் ஷிரான் குண­ரத்ன ஆகியோர் அடங்­கிய நீதி­ப­திகள் குழு கட்­ட­ளை­யிட்­டது. இந்­நி­லையில், குற்­ற­வா­ளி­யான ஞான­சார தேரர் சுக­வீனம் கார­ண­மாக ஸ்ரீ ஜய­வர்­த­ன­புர வைத்­தி­ய­சா­லையில் 5 ஆம் இலக்க சிகிச்சை அறையில் சிகிச்சை பெறு­வ­தாக  அவ­ரது சட்­டத்­த­ரணி, ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி மனோ­கர டி சில்வா மன்­றுக்குத் தெரி­யப்­ப­டுத்­தி­ய­தை­ய­டுத்து, உட­ன­டி­யாக அங்கு சென்று அவரை பொறுப்­பேற்­கு­மாறு வெலிக்­கடை சிறை அத்­தி­யட்­ச­க­ருக்கு மேன் முறை­யீட்டு நீதி­மன்றின் தலைமை நீதி­பதி ப்ரீத்தி பத்மன் சூர­சேன மற்றும் ஷிரான் குண­ரத்ன ஆகியோர் அடங்­கிய நீதி­ப­திகள் உத்­த­ர­விட்­டனர்.

2016 ஆம் ஆண்டு ஜன­வரி 25 ஆம் திகதி ஹோமா­கம நீதிவான் நீதி­மன்றில் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் பிரகீத் எக்­னெ­லி­கொட காணா­ம­லாக்­கப்பட்­டமை தொடர்­பி­லான வழக்கு விசா­ர­ணை­களின் இடை­ந­டுவே கலகம் ஏற்­ப­டுத்தும் வண்ணம் நடந்­து­கொண்டு நீதி­மன்றை அவ­ம­தித்­த­தாக, அப்­போது ஹோமா­கம பிர­தான நீதி­வானும் தற்­போ­தைய கொழும்பு பிர­தான நீதி­வா­னு­மா­கிய ரங்க திசா­நா­யக்க ஊடாக  ஞான­சார தேர­ருக்கு எதி­ராக மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றில் முறை­யி­டப்­பட்­டி­ருந்­தது.

 இது தொடர்பில்  நீண்ட விசா­ர­ணைகள் இடம்­பெற்று வந்த நிலையில், முறைப்­பாட்­டாளர் தரப்பு, பிர­தி­வாதி தரப்பு சாட்சி விசா­ர­ணை­களும் தொகுப்­பு­ரை­களும் நிறை­வ­டைந்த நிலையில் இது­கு­றித்த வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்­கப்­பட்­டது. இவ்­வ­ழக்கின் தீர்ப்பு வழங்­கப்­ப­டு­வ­தை­யொட்டி நேற்று புதுக்­கடை உயர் நீதி­மன்ற கட்­டிடத் தொகு­திக்கு விஷேட பொலிஸ் பாது­க­பபு அளிக்­கப்­பட்­டி­ருந்­தது. கொழும்பு மத்தி சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் பாலித்த பனாமல் தெனி­யவின் நேரடிக் கண்­கா­ணிப்பில் உதவிப் பொலிஸ் அத்­தி­யட்­சகர் ஒரு­வரின் கீழ் இந்த விஷேட பாது­கா­ப்பு ஒழுங்­குகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­ததை அவ­தா­னிக்க முடிந்­தது.

முற்­பகல் 10.05 இற்கு இது­கு­றித்த வழக்கு, தீர்ப்­புக்­காக விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்ட போது, குற்றம் சாட்­டப்­பட்­டி­ருந்த ஞான­சார தேரர் சார்பில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி மனோ­கர டி சில்­வாவும் சட்­டமா அதிபர் சார்பில் அரசின் சிரேஷ்ட பிரதி சொலி­சிட்டர் ஜெனரல் ரொஹந்த அபே­சூ­ரி­யவும்  மன்றில் பிர­சன்­ன­மா­கினர்.

 இந்­நி­லையில்  வழக்­கி­லக்கம் வாசிக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து,  மேன் முறை­யீட்டு நீதி­மன்றின் தலைமை நீதி­பதி ப்ரீத்தி பத்மன் சூர­சேன  குற்­றம்­சாட்­டப்­பட்­டவர் முன்­னி­லை­யா­கா­ததை அவ­தா­னித்து அவர் எங்கே என வின­வினார்.

இந்­நி­லையில் குற்றம் சாட்­டப்­பட்ட கல­கொட அத்தே ஞான­சார தேரர், ஸ்ரீ ஜய­வர்­த­ன­புர வைத்­தி­ய­சா­லையின் 5 ஆம் இலக்க சிகிச்சை அறையில் சிகிச்சை பெறு­வ­தா­கவும், சிறு­நீ­ரகப் பிரச்­சினை தொடர்பில் அவர் இவ்­வாறு சிகிச்சை பெறு­வ­தா­கவும் மருத்­துவ அறிக்­கையை சமர்ப்­பித்து ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி மனோ­கர டி சில்வா நீதி­ப­திக்கு அறி­வித்தார். இந்­நி­லை­யி­லேயே குற்றம் சாட்­டப்­பட்­டவர் இல்­லா­ம­லேயே, அவ­ருக்கு எதி­ரான தீர்ப்பு தலைமை நீதி­பதி ப்ரீத்தி பத்மன் சூர­சே­ன­வினால் வாசிக்­கப்­பட்­டது.

அதன்­படி நீதி­மன்ற அவ­ம­திப்பு விவ­கா­ரத்தை மையப்­ப­டுத்தி சட்ட மா அதி­பரால் ஞான­சார தேர­ருக்கு எதி­ராக மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றில் முன்­வைக்­கப்­பட்­டி­ருந்த குற்றப் பத்­தி­ரி­கையில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்த நான்கு குற்­றச்­சாட்­டுக்­களும் சந்­தே­கத்­துக்கு இட­மின்றி நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக அறி­வித்த நீதி­பதி, அவர் தொடர்பில் கல­கொட அத்தே ஞான­சார தேரர் குற்­ற­வாளி என முதலில் அறி­வித்தார்.

 2016ஆம் ஆண்டு ஜன­வரி 25ஆம் திகதி அல்­லது அதனை அண்­மித்த நாளொன்றில்  ஹோமா­கம நீதிவான் நீதி­மன்றில் இடம்­பெற்ற தனக்கு சம்­பந்­தமே இல்­லாத வழக்­கொன்றில் ஆஜ­ராகி  நீதி­மன்றின் கெள­ரவம், சட்­டத்தின் ஆட்­சிக்கு சவால் விடுத்­தமை ஊடாக மன்றை அவ­ம­தித்­தமை, பீ 74/7/10 எனும் வழக்கு (எக்­னெ­லி­கொட காணா­ம­லாக்­கப்­பட்­டமை குறித்த வழக்கு) விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்­ட­போது,  அதனை வழி­ந­டாத்­திய அரச சிரேஷ்ட சட்­ட­வாதி திலீப பீரிஸை அசிங்­க­மான வார்த்தைப் பிர­யோ­கங்­களைப் பயன்­ப­டுத்தி திட்டி அவ­மா­னப்­ப­டுத்­தி­யமை,  நீதி­மன்றின் கட்­ட­ளைக்கு செவி­சாய்க்­காமை,  நீதி­மன்ற சுயா­தீனத் தன்­மைக்கு சவால் விடுத்­தமை ஆகிய குற்­றச்­சாட்­டுக்கள் அர­சி­ய­ல­மைப்பின் 105 ஆவது அத்­தி­யா­யத்­துக்கு அமை­வாக  சட்­டமா அதி­பரால்  ஞான­சார தேர­ருக்கு எதி­ராக  மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றில் சமர்ப்­பிக்­கப்­பட்­டி­ருந்­தது. இந்த நான்கு குற்­றச்­சாட்­டுக்­க­ளுமே சந்­தே­கத்­திற்­கி­ட­மின்றி நிரூ­பிக்­கப்பட்­ட­தாக மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றம் நேற்று அறி­வித்­தது.

 அதன்­படி முத­லா­வது, இரண்­டா­வது குற்­றங்கள் தொடர்பில் ஞான­சார தேர­ருக்கு  தலா 4 வருட கடூ­ழிய சிறைத் தண்­ட­னை­யையும்,  3ஆம் குற்­றத்­துக்கு 6 வருட கடூ­ழிய சிறைத் தண்­ட­னை­யையும், 4 ஆம் குற்­றத்­துக்கு 5 வருட கடூ­ழிய சிறைத் தண்­ட­னை­யு­மாக மொத்தம் 19 வருட கடூ­ழிய சிறைத்­தண்­டனை விதித்து நீதி­மன்றம் தீர்ப்­ப­ளித்­தது. அதனை 6 வரு­டங்­களில் அனு­ப­விக்­கவும் இதன்­போது நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டது.

இந்­நி­லையில் நீதி­மன்றில் குற்­ற­வா­ளி­யான ஞான­சார தேரர் ஆஜ­ரா­காத நிலையில், அவர் வைத்­தி­ய­சா­லையில் உள்­ளதை காரணம் காட்­டியும், அவர் தீர்ப்­புக்கு எதி­ராக மேன் முறை­யீடு செய்­ய­வுள்­ளதை காரணம் காட்­டியும், தண்­டனை அமுல் படுத்­த­ப்ப­டு­வதை தள்­ளி­வைக்­கு­மாறு ஞான­சார தேரரின் சார்பில் ஆஜ­ரான  ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி மனோ­கர டி சில்வா நீதி­மன்றை கோரினார். எனினும் அந்தக் கோரிக்­கையை மேன் முறை­யீட்டு நீதி­மன்றம் முழு­மை­யாக நிரா­க­ரித்­த­துடன், உட­ன­டி­யாக ஸ்ரீ ஜய­வர்­த­ன­புர வைத்­தி­ய­சா­லைக்கு சென்று ஞான­சார தேரரை சிறைச்­சாலை அதி­கா­ரிகள் பொறுப்­பேற்க வேண்­டு­மென வெலிக்­கடை சிறை அத்­தி­யட்­ச­க­ருக்கு மேன் முறை­யீட்டு நீதி­மன்றம் கட்­ட­ளை­யிட்­டது.

கடந்த 2016ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 25ஆம் திகதி ஊட­க­வி­ய­லாளர் பிரகீத் எக்­ன­லி­கொட காணா­ம­லாக்­கப்­பட்­டமை குறித்த வழக்கு நீதி­மன்­றத்தில் நடந்­த­போது,  ஞான­சார தேரர் ஹோமா­கம நீதிவான் நீதி­மன்­றுக்குள் அத்­து­மீறிப் பிர­வே­சித்­தி­ருந்தார். இதன்­போது நீதி­மன்ற வளா­கத்தில் வைத்து பிரகீத் எக்­ன­லி­கொ­டவின் மனை­வியை அச்­சு­றுத்­தி­ய­தாக ஞான­சார தேரர் மீது பொலிஸில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டது. இத­னை­விட அன்­றைய தினம் பெருந்­தொ­கை­யான பிக்­கு­க­ளுடன்  ஞான­சார தேரர் ஹோமா­கம நீதிவான் நீதி­மன்றில் உள்­நு­ழைந்து நீதிவான் ரங்க திசா­நா­யக்­கவை நோக்கி விரல் நீட்டி இரா­ணு­வத்­தி­னரை பழி­தீர்க்கும் செயற்­பா­டு­க­ளுக்கு எதிர்ப்பு தெரி­விப்­ப­தாகத் தனது குரலை உயர்த்தி அச்­சு­றுத்தல் விடுத்­தி­ருந்தார். இதனால் அன்றை தினம் முழுதும் ஹோமா­கம நீதிவான் நீதி­மன்றின் நட­வ­டிக்­கைகள் பாதிக்­கப்­பட்­டன. இத­னை­ய­டுத்து  நீதி­மன்றை அவ­ம­தித்­தமை, அரச அதி­கா­ரியின் கட­மைக்கு இடை­யூறு ஏற்­ப­டுத்­தி­யமை மற்றும்  குறித்த வழக்கின் சாட்­சி­யா­ள­ரான சந்­தியா எக்­னெ­லி­கொ­டவின் மனை­விக்கு அச்­சு­றுத்தல் விடுத்­தமை  ஆகிய குற்­றச்­சாட்­டுக்­களின் கீழ் அவரை கைது செய்­யு­மாறு  ஹோமா­கம நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டி­ருந்­தது.

இந்­நி­லையில் ஞான­சார தேரர், 2016 ஜன­வரி 26 ஆம் திகதி கைது செய்­யப்­பட்­ட­துடன் அவர்­மீது குறித்த மூன்று குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்­பிலும் தனித்­த­னி­யாக வழக்குத் தாக்கல் செய்­யப்­பட்­டது. இதில் நீதி­மன்றை அவ­ம­தித்­தமை தொடர்­பி­லான வழக்கு அப்­போ­தைய ஹோமா­கம நீதி­வானும் தற்­போது கொழும்பு மேல­திக நீதி­வா­னு­மா­கிய ரங்க திசா­நா­யக்­க­வினால் விசா­ர­ணைக்­காக மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றுக்குப் பாரப்­ப­டுத்­தப்­பட்­டது.

இதன்­போது குறித்த வழக்கை விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­வதை தவிர்க்க மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றில் ஞான­சார தேரர் சார்பில் அடிப்­படை ஆட்­சே­ப­னைகள் முன்­வைக்­கப்பட்­டி­ருந்த போதும் நீதி­மன்றம் அதனை நிரா­க­ரித்து வழக்கை விசா­ரணை செய்­தது.  இவ்­வ­ழக்கில்  சட்­டமா அதிபர் சார்பில் சிரேஷ்ட பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் ரொஹந்த அபே­சூ­ரிய ஆஜ­ரா­கி­யி­ருந்தார். ஞான­சார தேரரின் சார்பில்  சட்­டத்­த­ர­ணி­யான மனோ­கர டி சில்வா வழக்கில் முன்­னி­லை­யா­கி­யி­ருந்தார்.

 இந்­நி­லை­யி­லேயே இதன் அனைத்து சாட்சி விசா­ர­ணை­களும் நிறைவு செய்­யப்­பட்டு நேற்றுத் தீர்ப்­ப­ளிக்­கப்ப்ட்­டது.


முன்­ன­தாக  இந்த நீதி­மன்ற அவ­ம­திப்பு சம்­ப­வத்­துடன் இணைந்­த­தாக  நடந்த கடத்­தப்­பட்டு காணா­ம­லாக்­கப்­பட்­டுள்ள ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்யா எக்னெலிகொடவை ஹோமாகம நீதிவான் நீதிமன்றில் வைத்து  திட்டி அச்சுறுத்தியமை தொடர்பில் பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து ஹோமாகம பிரதான நீதிவான் உதேஷ் ரணதுங்க கடந்த ஜூன் 14 ஆம் திகதி தீர்ப்பளித்திருந்தார். அத்தண்டனையை 6 மாதங்களில் அனுபவிக்க அவர் உத்தரவிட்டிருந்தார். அத்துடன் 3000 ரூபா அபராதமும், அச்சுறுத்தப்பட்ட சந்யா எக்னெலிகொடவுக்கு 50 ஆயிரம் ரூபா நஷ்டஈடு செலுத்தவும் உத்தரவிட்ட நீதிவான், அபராதம் செலுத்தாமல் இருப்பின் மேலும் மூன்று மாதகால சிறைத் தண்டனை விதிக்கப்படும் எனவும், நஷ்டஈடு வழங்கப்படாது விடின் அத்தொகையை அபராதமாக அறவிடவும், அப்படி அபராதமாகவும் அத்தொகையை அவர் செலுத்தத் தவறினால் அது தொடர்பிலும் மூன்று மாத சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும் எனவும் எச்சரித்தார். இது தொடர்பில் ஞானசார தேரர் மேன்முறையீடு செய்துள்ள நிலையில், அதில் அவர் பிணையில் உள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
-Vidivelli

1 comment:

  1. அளவுக்கதிகமாக தண்ணி அடிச்சா!

    ReplyDelete

Powered by Blogger.