August 12, 2018

"ஜாமிஆ நளீமிய்யா பற்றி, ஜப்னா முஸ்லிம் இணையத்தின் பொறுப்பு துறத்தல்..."


அஸ்ஸலாமு அலைக்கும்...!

ஜப்னா முஸ்லிம் இணையத்தில் கடந்த 10.08.2018 அன்று ஷைக் பட்டதாரிகளா..?  அரபு சேர் பட்டதாரிகளா..?? என்ற தலைப்பில் http://www.jaffnamuslim.com/2018/08/blog-post_153.html சகோதரர் ஸாஹிர் ஹுஸைன் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார்.

குறித்த கட்டுரை, முஸ்லிம் சமூகத்தில் பல வாதப்பிரதி வாதங்களை ஏற்படுத்தியதை நாம் அறிவோம்.

ஜப்னா முஸ்லிம் இணையம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து அது, ஜாமீஆ நளீமிய்யா பற்றிய பல செய்திகளை, கட்டுரைகளை வெளியிட்டுள்ளது. அதன் விரிவுரையாளர்களின் கட்டுரைகளை தாராளமாக பிரசுரித்துள்ளது. பல நளீமிக்களுடன் மிக சுமூக உறவும் இன்றுவரை ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு தொடருகிறது.

மேலும் நளீமிய்யா பற்றியும், அங்கு படித்த, படிக்கின்றவர்கள் மற்றும் படித்துக் கொடுக்கின்றவர்கள் குறித்தும் இதுவரை ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு மிகுந்த மரியாதையும், மதிப்பும் இருந்து வருகிறது.

எனினும் தற்போது மேற்சொன்ன கட்டுரையை பதிவேற்றி 3 நாட்கள் ஆகிவிட்ட நிலையில்,  ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு இன்று 12.08.2018 சட்டத்தரணி ஒருவரிடமிருந்து ஈமெயில் மூலமாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அதாவது மேற்குறித்த அந்தக் கட்டுரையை ஜப்னா முஸ்லிம் இணையத்திலிருந்து முற்றாக அகற்ற வேண்டும் என்பதாகும்.

முதலில் அந்த சட்டத்தரணிக்கும், வாசகர்களுக்கும் ஒரு விடயத்தை மிகத்தெளிவாக சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

அதாவது ஜப்னா முஸ்லிம் இணையம் என்பது, தொழில்சார் ஊடகத் தகைமைகளுடன், ஊடகநெறிகளை கடைபிடித்து, சுயாதீனமாக செயற்படும் முஸ்லிம் சமூகம் சார் ஒரு இணையத்தளமாகும்.

ஜப்னா  முஸ்லிம் இணையம் பதிவேற்றும் கட்டுரையிலோ அல்லது செய்தியிலோ உங்களுக்கு உடன்பாடு இல்லையாயின், அதனை நீங்கள் வாசகர் உரிமையின் கீழ் மறுக்கலாம் அல்லது நிராகரிக்கலாம். 

அத்துடன் உங்கள் மறுப்பையும், நிராகரிப்பையும் நீங்கள் உத்தியோகபூர்வமாக ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு அனுப்பி வைப்பீர்களாயின் அதனை முன்னுரிமை அடிப்படையில் பதிவேற்றவும் நாங்கள் தயாராகவுள்ளோம்.

பிழையும், தவறும் எமது பக்கமாயின் பகிரங்க மன்னிப்புக் கேட்கவும் நாம் தயாராக இருக்கிறோம்.

இதற்கு மேலதிகமாக ஜப்னா முஸ்லிம் இணையத்தின் கீழ் பகுதியில் முக்கிய குறிப்பு என்ற தலைப்பிட்டு jaffna muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. என்றும் சுட்டிக்காட்டியுள்ளோம்.

www.jaffnamuslim.com

அத்துடன் குறித்த கட்டுரை சரியா பிழையா என்று தீர்மானிக்க ஜப்னா முஸ்லிம் இணையம் நீதிமன்றமோ அல்லது அதன் ஆசிரியர் நீதிபதியோ அல்ல.

இதுவே இலங்கை முஸ்லிம் சமூகத்தின் அதீத நம்பிக்கையைப் பெற்ற, ஜப்னா முஸ்லிம்  இணையத்தின் நிலைப்பாடு ஆகும்.

பிரதம ஆசிரியர்

ஜப்னா முஸ்லிம் இணையம்

12.08.2018

20 கருத்துரைகள்:

First of all,
Islamic ethics in journalism is to know the truth and fact and spread the news ..
All what Bro Zakir said is wrong misconceptions about Naleemiah and it's academic credits..
A group of world class scholars such as Shikh Abu Hassan Ali Nadawi; Prof. Kurshid Ahmad ; and many more leading Islamic scholars said Jamilah is a like beacon of education in Sri Lanka ..see all testimony about Naleemiah..
The syllabus of Naleemiah is designed by some leading Islamic scholars and Naleemiah teachers far better than university lecturers in Sri Lanka .
Far better than Arabic colleges teachers ..
The context of Naleemiah syllabus is more advanced ..
Yet; idiot such as Zakir to come up with false allegation is morally wrong and legally JM is responsible for its publication..
JM should have experts to varify religious news .
Yet you have not done it .
So; make a public apoplogy from Muslim community and Naleemiah.
It would be your moral duty now .

Yes,very good.
Congrats to J M

"முஃமின்களே! ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள்;

(இல்லையேல்) அறியாமையினால் (குற்ற மற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்;

பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள்."
(அல்குர்ஆன் : 49:6)

ஒருவர் பிறிதொருவரைப் பற்றிய செய்தியை மூன்றாவது நபருக்கு தெரிவிக்கும்போது கடைப்பிடிக்க வேண்டியதையே மேற்கண்ட வசனம் நமக்கு அறிவுறுத்துகிறது.

அது தனி நபராக இருக்கலாம் அல்லது செய்தி நிறுவனங்களின் பொறுப்பாளர்களாக  இருக்கலாம். செய்தியின் நம்பகத் தன்மையை ஊர்ஜிதம் செய்து கொள்ளுமாறே நம்மைக் பணிக்கிறது.

பொதுவாக தீயவர்கள் பரப்பும் பொய்யான செய்திகளால் அப்பாவிகள் பாதிக்கப்படக் கூடாது என்றும் அவ்வாறு செய்தால் வருந்த வேண்டி வரும் என்றும் எச்சரிக்கிறது.

முஸ்லிம்களைப் பொறுத்த வரையில் இந்த வழிகாட்டல்ளை நாம் அனைவரும் கடைப்பிடிப்போமாக.

அத்துடன், முஸ்லிம்கள் தமக்குள் வாதித்துச் சண்டையிட்டுக் கொள்ளவும் பிரிவினைகளை உருவாக்கவும் 'முஸ்லிம் பெயரில்'  ஏனையோர் ஊடகங்களில் முயல்வது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும்.

ஊடகங்களை நமக்கு இம்மையிலும் மறுமையிலும் நன்மை தரக்கூடியவிதமாக - நல்லறிவைப் பெறுவதற்கும் அதனை ஏனையோருக்கு எத்திவைப்பதற்கும்  பயன்படுத்திக் கொள்வதே புத்திசாலித்தனமாகும்.

நமது விரல்களிலிருந்து வெளியாகும் ஒவ்வொரு எழுத்துக்கள் பற்றியும் நாம் கேட்கப்படுவோம் என்பதை நாம்  மறக்காதிருப்போமாக.

(லுஃக்மான் தம் புதல்வரிடம்) என் அருமை மகனே! (நன்மையோ, தீமையோ) அது ஒரு கடுகின் வித்து அளவே எடையுள்ளது ஆயினும்; அது கற்பாறைக்குள் இருந்தாலும் அல்லது வானங்களில் இருந்தாலும், அல்லது பூமிக்குள்ளே இருந்தாலும் அல்லாஹ் அதையும் (வெளியே) கொண்டு வருவான்; நிச்சயமாக அல்லாஹ் நுண்ணறிவு மிக்கவன்; (ஒவ்வொன்றின் அந்தரங்கத்தையும்) நன்கறிபவன்.
(அல்குர்ஆன் : 31:16)

Appa etha patri katturai eluthinalum neenka publish pannuwinka athuku peyar uudaha tharmam

இவ்வாக்கதிற்கு " சொல்ல மறந்த கதை" என்றே தலைப்பு இட்டிருக்கலாம், அப்படி பலரின் மனதில் தேங்கி கிடந்து யாரிடம் போய் இந்த அநியாயத்தை கூறுவதென்று விழி பிதிங்கிய அப்பாவி இலங்கை முஸ்லிம்களின் சோகக்கதைதான் இது.
இதில் எந்த தவரும் இல்லை, எந்த பொய்யுமில்லை. சொல்ல வேண்டிய இடமென்றால் இதுவே சிறந்த இடம். இப்படியான பொது வலை தளங்களில் கருத்திட்டே பல அமைப்புக்கள் தங்களை சீர் செய்துகொண்ட வரலாற்ரை நாம் இங்கு நினைவுகொள்ளலும் வேண்டும்.
இவர்களின் வீணான கல்விக்கு ஏழை பெற்றோர்கள் ஏழு வருடங்கள் செலவளிப்பதும் இருதியில் அந்த ஏழை, பாமர பெற்றோர்கள் தன் தனயன் தான் கற்றது என்னவென்ரே தெறியாமல் உயிர் இழப்பதும், அவர்கள் எதிர்ப்பார்த்த இரைவனின் திருப்பொருத்தமும் கிடைக்காதவர்களாக இறைவனிடம் செல்லுவதும் அநியாயமே!
ஜப்னா முஸ்லிமுக்கு மிக்க நன்றி இதனை ஆக்கியோனாகிய ஸாகிர் ஹுஸைனுக்கும் நன்றி.
இனியாவது நளீமிக்கள் உண்மையானதை கற்று உண்மையானதை சமுகத்திற்கு எடுத்து சொல்ல வேண்டும் என்று இவ்வண்ணம் அப்பாவி மக்கள் சார்பாக வேண்டுகிறோம்.

இவர்களின் கற்ற இஸ்லாத்திற்கும் இன்றைய அறபுலகம் பின்பற்றும் நவீன இஸ்லாத்திற்கும் வேறுபாடே இல்லை என்பதும் உண்மை.

Still need further clarification of the impact on society by the news published here.

O don't think anyone needs to worry about that article. Some Islamic organisations are against the worldly education while some promote useful knowledge in the Islamic way. Every group have short comings and misguided ways..

jafnamuslim இணையத்தளத்துக்கு ஒரு பணிவான வேண்டுகோள்:

தயவு செய்து நீங்கள் சமூகத்துக்கு ஊடக பனி செய்யும் நன்னோக்கு உள்ளவர்களாக இருந்தால் இந்தப் பதிவை அகற்றவேண்டும். ஏனெனில் இது ஒரு சிலரின் குறைகளுக்காக முழு நிறுவனத்தையும் அதில் கல்விகற்ற நல்ல தாயீக்களையும் பாதிக்கும் காழ்ப்புணர்ச்சியுடன் கூடிய பதிவு. தயவு செய்து அல்லாஹ்வை பயந்து உங்கள் பணியை மேற்கொள்ளவும்

நாங்கள் என்றும் ஜப்னா முஸ்லிம் பக்கமே உண்மையை எவர் சொன்னாலும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் ஒருசில நபர்களுக்கு இல்லை. அதன் பிரதிபலிப்பு தான் இது. எவருக்கும் பயப்படாமல் உண்மையான நிலைப்பாட்டை சொன்ன ஜப்னா முஸ்லிம் பிரதம ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.

This comment has been removed by the author.

SINCE 2007 JAFFNA MUSLIM HAS BEEN DOING A GREAT JOB FOR MUSLIM COMMUNITIES IN SRI LANKA AND ABROAD. IT IS STARTED WITH A SINGLE PERSON. HE HAS BEEN DOING IT AS A VOLUNTARY SERVICE AND HE DOES NOT EXPECT ANY HELP OR SUPPORT FROM ANY ONE. INDEED, HE HAS HELPED MANY FAMILIES FROM ANY FINANCIAL SUPPORT HE GOT FROM ANY ADVERT, HIS SERVICE SHOULD BE APPRECIATED....
AS A MISTAKE HE MAY HAVE PUBLISHED THAT ARTICLE ABOUT NALEEMIAH BY MISTAKE.. ALL NALEEMIAH BOYS SHOULD HAVE BIG HEARTS TO FORGIVE THIS. IT IS NOT FAULT OF JAFFNA MUSLIM BUT IT IS MISTAKE OF THE WRITER WHO WRONG WITH A BAD INTENTION..
THE ENTIRE SRI LANKAN MUSLIM COMMUNITY KNOWS WHAT KIND OF SERVICE NALEEMIAH HAS BEEN DOING AND WHAT KIND OF PEOPLE TODAY SRI LANKA NEED..
TODAY, IN THIS COMPLICATED DIGITAL AGE OF TECHNOLOGY ... TO PREACH ISLAM TO WIDER COMMUNITY WE NEED PEOPLE WITH DEEP KNOWLEDGE IN ISLAM AND WORLDLY SCIENCES.. TODAY TO PRESENT ISLAM, THE KNOWLEDGE OF THIS WORLD IS A MUST.. TO TALK ABOUT ECONOMIC AND FINANCIAL PROBABLES, DEEP KNOWLEDGE IN ECONOMICS IS A MUST ... TO SPEAK ABOUT GEOPOLITICS, KNOWLEDGE OF POLITICS IS A MUST, LIKEWISE ALL OTHER AREAS OF KNOWLEDGE,, THE PROBLEMS OF SOME PEOPLE IS THAT THEY KNOW ABOUT DIN BUT DO NOT KNOW ABOUT MODERN SCIENCES.. THEY FIND IT DIFFICULT TO RELATE DIN INTO WORLD .. THAT IS WHY NALEEMIAH IS ESTABLISHED TO RELATE DIN WITH WORLD THROUGH BOTH BRANCH OF KNOWLEDGE.. IS IT A PROBLEM... THESE CLERICS SHOULD SEEK ADVICE FROM LEARNED PEOPLE ABOUT THIS ISSUE. .. IF IT IS HARAM TO LEARN ABOUT THIS WORLD AND DIN AT ONCE..

Cant hide the truth. Jaffna Muslim is correct

JAFFNA MUSLIM அண்மைகாலமாக இஸ்லாமிய பிரசார அமைப்பொன்றின் ஊது குழலாக செயல் படுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது . தரமற்ற காழ்ப்புணர்ச்சியை , வளர்க்கும் செய்திகள் , நடுநிலையான வாசகர்களை இழந்துவிட கூடும் , நளீமியா அரபு சேர்மாரையா உண்டாக்குறது .? மடத்தனமான எண்ணம் . அந்த சேர்மாரும் அரச தர சான்றிதழோடு , வந்தவர்கள் நாட்டில் அரச உயர் பதவிகளில் , சர்வதேச பதவிகளில் இலங்கை முஸ்லிம்களை முன்னுக்கு அனுப்பிய ஒரே இஸ்லாமிய கலாசாலை நளீமி , -துன்யா ஆகிறா ,கல்வி என்று பிரித்துப்பார்க்கும் மேதாவிகள் , முஸ்லீம் கல்விக்கு தடையாக இருகிறார்கள் , கேவலம் இப்படியான வர்கள் முஸ்லீம் தலைமை யை ஆக்கிரமித்துஇருப்பது , .தலைமைக்கு பங்கம் வருமோ என்ற அச்சம் , இது போன்ற பதிவுகள் ,.இவை இன்னிம் வரும் ,

அதற்காக கண்ட கழுதையெல்லாம் எழுதுவீங்களோ..jaffna Muslim.

ஜப்னா முஸ்லீம் இணையத்தளம் என்பது எழுத்தாளர்களினதும், கலைஞர்களினதும், கவிஞர்களினதும் மற்றும் படைப்பாளிகளினதும் படைப்புகளுக்கு முன்னுரிமை அளித்து வருவது போன்றே வாசகர்களிடையே இன, மத, மொழி, நிறம், மற்றும் சாதி பாராது சகலரினதும் கருத்துக்களுக்கு முதலிடம் அளிக்கின்றது . என்பதே உண்மை .காலம் கடந்த சிந்தனை கொண்ட கட்டுரை மறுப்பாளரும் .மின்னஞ்சல் மூலம் ஜப்னா முஸ்லீம் இணையத்தள நிருவாக்கத்திடம்
(லெட்டர் ஒப் டிமாண்ட்) கோரிக்கை கடிதம் அனுப்பிய சட்டத்தரணியும் இந்த இணையத்தை ஒருபோதும் பயன் படுத்தி இருக்க மாட்டார்கள் என்பது இதிலிந்து தெளிவாகிறது (கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் ) என்பது இவர்களுக்கு மிகவும் பொருந்தும் .

நளீமிகள் மற்ற இயக்கங்கள், நிறுவனங்களை விமர்சனம் செய்வதில்லையா? . இதே போன்று தான் மற்றவர்களும் பாதிக்கப்படுவார்கள்.

Once again you proof your honesty. Congratulation JAFFNA MUSLIM.
What you mentioned in above post is 100% correct.I thing this is the right time to the head of the department of the Jaamia Nalaamia to take into consideration of their academic syllabus.

This comment has been removed by the author.

JM proves again and again that they are not ready to adopt the norms and protocols recommended by Islam, in relation to media culture. Al-Quran emphasizes to verify the authenticity of any news prior to taking further moves to spread the same. JM should understand that the disclaimer notices repudiating the complete responsibility to a person involved is not necessarily be an exoneration of JM’s moral responsibility, though it is a coverage under existing legal structure, since JM is an identical media, serving for the course of Islam. Hence, it would be greatly appreciated, if JM come up with a strong strategy to become a role model in the media industry, publishing “authenticated and verified news alone” whereby enlightening the public and providing them a proper awareness, regardless of the background sources. May Allah SWT accept our good deeds and forgive our misdeeds.

Post a Comment