Header Ads



"மைத்­தி­ரி­பால மூல­மா­க, பிர­த­ம­ராகவுள்ள மஹிந்த"

அடுத்த தமிழ் சிங்­கள புத்­தாண்­டுக்கு முன்னர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் மூல­மா­கவே மஹிந்த ராஜபக்க்ஸ பிர­த­ம­ராவார் என்று பொது எதி­ரணி உறுப்பினர் டிலான் பெரேரா தெரி­வித்தார்.

அத்துடன் தற்­போ­தைய பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை ஆட்­சியில் இருந்து வெளி­யேற்றி மீண்டும் எமது தனி அர­சாங்­கத்தை அமைப்போம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க முன்­வைக்கும் எந்த அர­சியல் தீர்வு யோச­னை­க­ளையும் பெரும்­பான்மை மக்கள் நம்ப மாட்­டார்கள். மைத்­திரி – மஹிந்த இணைந்து முன்­னெ­டுக்கும் தீர்வு நகர்­வு­க­ளி­லேயே நம்­பிக்கை ஏற்­படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அர­சாங்­கத்தை வீழ்த்த பொது எதி­ர­ணி­யாக நாம் முன்­னெ­டுத்­துள்ள போராட்டம் வெற்­றி­ய­டைந்­துள்­ள­துடன் அடுத்த கட்­டங்­களில் நாம் முன்­னெ­டுக்கும் போரட்­டங்­க­ளுக்கு இது நல்­ல­தொரு ஆரம்­ப­மாக அமையும் என்றும் டிலான் தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரி மத்­திய வங்கி பிணை­முறி ஊழல் குற்­ற­வா­ளி­களை இன்னும் தண்­டிக்­க­வில்லை, புதிய அர­சியல் அமைப்பு திருட்­டுத்­த­ன­மாக முன்­னெ­டுக்­க­பட்டு வரு­கின்­றது. மக்­களின் வாழ்­வா­தார பிரச்­சி­னைகள் அதி­க­ரிப்பு விலை அதி­க­ரிப்பு, வரி அதி­க­ரிப்பு என்ற விட­யங்­க­ளுக்கு இன்­னமும் தீர்­வினை பெற்றுக் கொடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் அடுத்த தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மூலமாகவே மஹிந்த ராஜபக்ஸ பிரதமராவார். அது உறுதியாக நடைபெறும். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியாக நாம் மீண்டும் ஒன்றிணைந்து ஐக்கிய தேசியக் கட்சியை எதிர்க்கட்சியாக்குவோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

3 comments:

  1. இந்த கிழவன்கள் இல்லாமல் நாட்டுல வேற யாரும் படித்த மக்கள் இல்லையப்பா??

    ReplyDelete
  2. கற்பனையில் அல்லது ஊக்கச் 'சத்துக்கள் எடுத்த மயக்கத்தில் வௌிவரும் வௌிப்பாடுகள். ஆனால் சட்டவிரோதமாக அல்லது கள்ளத்தனமாக வௌிநாட்டு பணியக்த்திக்கு பொறுப்பான அமைச்சராக இருந்தபோது களவாடிய கோடிக்கணக்கான பணத்துக்கும் என்ன நடந்தது அரச சொத்துக்களைச்சூறையாடிய செயலும் நீதிமன்றத்துக்குச் சென்று அப்பாவி பணிப் பெண்களின் பணத்துக்கு நீதியும் நியாயமும் கிடைக்க வேண்டும் என்பதும் பொதுமக்களின் வேண்டுகோள்/

    ReplyDelete
  3. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

    "நீங்கள் ஆட்சிப் பதவியை அடைய பேராசைப்படுகின்றீர்கள். ஆனால், மறுமை நாளில் அதற்காக வருத்தப்படுவீர்கள்.

    பாலூட்டுபவை (தாம் சுகங்)களிலேயே பதவி(ப் பால்) தான் இன்பமானது.

    பாலை மறக்க வைப்ப(தன் துன்பத்)திலேயே பதவி(ப் பாலை நிறுத்துவது)தான் மோசமானது."

    அறிவிப்பவர் அபூ ஹுரைரா(ரலி) ஸஹீஹ் புஹாரி ஹதீஸ் எண் 7148

    ReplyDelete

Powered by Blogger.