Header Ads



முஸ்லிம் கட்சிகள், இனத்தை விற்று அர­சியல் செய்யக்கூடாது - இது பைசரின் உபதேசம்

மாகாண சபைத் தேர்தல் புதிய முறை­மையை நான் எதிர்க்­க­வில்லை. மாகாண சபைத் தேர்தல் தொகுதி எல்லை நிர்­ணய அறிக்­கை­யையே நான் எதிர்த்தேன். தொடர்ந்தும் புதிய தேர்தல் முறை­மை­யையே ஆத­ரிக்­கிறேன். எல்லை நிர்­ணய அறிக்­கையை சமர்ப்­பித்து அதை நான் எதிர்த்­த­தா­கவும், அதனால் நான் பதவி விலக வேண்டும் என்றும் சிலர் கூறு­கி­றார்கள். எல்லை நிர்­ணய அறிக்கை நான் தயா­ரித்­தது அல்ல. அந்த அறிக்­கைக்கும் எனக்கும் தொடர்­பில்லை என மாகாண சபைகள், உள்­ளூ­ராட்சி மற்றும் விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் பைசர் முஸ்­தபா தெரி­வித்தார்.

மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில் தெரி­வித்­த­தா­வது;

“2015 ஆம் ஆண்டு தேர்­த­லின்­போது ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் விருப்பு வாக்கு முறையை இல்­லாமற் செய்து தொகு­தி­வா­ரி­யான கலப்பு தேர்தல் முறை­மையை அறி­மு­கப்­ப­டுத்­து­வ­தாக உறு­தி­ய­ளித்­தார்கள். அந்த உறு­தியே நடை­மு­றைக்கு வந்­துள்­ளது.

சிறு­பான்மைக் கட்­சிகள் குறிப்­பாக முஸ்லிம் அர­சியல் கட்­சிகள் புதிய தேர்தல் முறை­மையை எதிர்க்­கின்­றன. முஸ்லிம் கட்­சிகள் தனி­யாக போட்­டி­யிட்டால் பிர­தி­நி­தித்­துவம் பெற்­றுக்­கொள்ள முடி­யாது என்­பதால் பெரும்­பான்மைக் கட்­சி­களின் மிதி­ப­ல­கையில் ஏறி அர­சியல் செய்­கின்­றன. இனத்தை விற்று அர­சியல் செய்ய வேண்டாம் என நான் அவர்­களைக் கேட்டுக் கொள்­கிறேன்.

மாகாண சபை தொகுதி எல்லை நிர்­ண­யத்தில் குறை­பா­டுகள் இருக்­கின்­றன. அந்தக் குறை­பா­டு­களை நிவர்த்தி செய்­து­கொள்ள முடியும். அதற்­கா­கவே பிர­தமர் தலை­மையில் குழு­வொன்று நிய­மிக்­கப்­ப­ட­வுள்­ளது. அக்­கு­ழு­வுக்கு குறை­பா­டு­களை முறை­யிட்டு தீர்த்­துக்­கொள்­ளுங்கள்.

எல்லை நிர்­ணய அறிக்­கையை நான் ஒரு கார­ணத்­திற்­கா­கவே எதிர்த்தேன். பல் தொகுதி உரு­வாக்­கப்­பட வேண்டும் என்று விதியில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தாலும் எந்­த­வொரு பல் தொகு­தியும் உரு­வாக்­கப்­ப­ட­வில்லை. இது சிறு­பான்­மை­யி­ன­ருக்கு இழைக்­கப்­பட்­டுள்ள அநீ­தி­யாகும்.

மாகாண சபைத் தேர்தல் தொகுதி எல்லை நிர்­ணய அறிக்கை குறிப்­பிட்ட குழு­வினால் என்­னிடம் சமர்ப்­பிக்­கப்­பட்­டதும் அர­சியல் கட்­சி­களின் தலை­வர்­க­ளி­னது கருத்­து­க­ளையும் பெற்­றுக்­கொண்டு அவற்றை உள்­ள­டக்­கு­வது தொடர்பில் ஆலோ­சனை கோரினேன். ஆனால் குழு அதற்கு இணக்கம் தெரி­விக்­க­வில்லை. எல்லை நிர்­ணய ஆணைக்­குழு மீது எனக்கு எந்த அதி­கா­ர­மு­மில்லை.

எனக்கு வழங்­கப்­பட்­டி­ருந்த சட்ட வரம்­பு­க­ளின்­படி அறிக்கை கிடைத்து 14 நாட்­க­ளுக்குள் பாரா­ளு­மன்றில் சமர்ப்­பித்தேன். (மார்ச் 2 ஆம் திகதி) பின்பு மார்ச் 21 இல் விவா­தத்­துக்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டது என்­றாலும் அர­சியல் கட்­சிகள் விவா­தத்­துக்கு எடுத்­துக்­கொள்­வதைத் தடுத்து கலந்­து­ரை­யா­டல்­களை நடத்துவதாகத் தெரிவித்தன.

ஆனால் 6 மாதங்களாக கட்சித் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியும் பலன் ஏற்படவில்லை. இதனையடுத்தே கடந்த 24 ஆம் திகதி அறிக்கை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இன்று எனக்கு எதிராக பலர் விரல் நீட்டுகிறார்கள்” என்றார்.

3 comments:

  1. Yes you are 100% correct.There should never be a communal politics which brought destruction to Muslims than benefit.It is Muslim congress and Ashraff brought communal politics which paved the way to emerge dangerous anti Muslim parties such as BBS,Hela Urumaya and rawana Balaya.

    Before Muslim congress we had all the rights But now we are loosing one by one.Mr. Ashraff is not great leader because great leaders have vision to see the future but he could not see the impending destruction because of his action.He understood it too late and after the damage is done.So soon after he felt,change the name to secular party.Now it is all over and we are in danger.

    Another factor which Mr. Ashraff failed to notice is that SLFP is formed on the basis of anti minority and racist party which he resuscitated by allying with With Chandrika.Had not Ashraff supported SLFP that anti Muslim party would not have consolidate their power and present anti Muslim leaders such as Srisena,Gothabaya and Mahinda would have been nothing.

    If he acted neutrally without allying with any party and ministerial post as do Tamil parties fight for only their right not for the post,there would not have been such dangerous situation as of now for Muslims.

    So Muslims must go for all out war against Vote businessman that Ashraff brought that Mr. Hakeem and his party that doing business with Muslims votes and finish communal politics.

    ReplyDelete
  2. Dear Imthiyas you cannot put the whole blame to Ashraff. Please read the history. SL Muslim have been attacked since 1948 before SLMC born.

    Anagariga Darmapal he put the seeds for anti Muslim policy in Sri Lanka and Banda he installed the Sinhala only phenomena. And the subsequent addition of JHU and his leader Champika are big devil on the soil of Sri Lanka.

    The worst scenario is some Mushroom Muslim politicians came to do politics, all these facts, including the defeat of LTT fuel the current anti Muslim sensation.

    Please don't just blame Ashraff, also I am not the supporter of SLMC.

    ReplyDelete
  3. The question is WHY?
    The Sri Lanka Muslim Community and its POLITICIANS should stand before a “MIRROR” and ask the question WHY? Let us face REALITY and the TRUTH (YATHAARTHAM).
    1. We Muslims are known for NOT leading the Muslim (Islamic Way of Life) bestowed by our belief and FAITH.
    2. We are (especially) the POLITICIANS) are NOT UNITED.
    3. We (especially the POLITICIANS) are DISHONEST, DECEPTIVE, SELFISH and CROOKED.
    4. Our dealings are NOT CLEAN with other Communities.
    5. We have BETRAYED the political leaders of the country who are so much loved by the MAJORITY SINHALA PEOPLE.
    6. We are ARROGANT and EXTRAVAGANT in our day to day life.
    7. We are SELF CENTERED and NOT COMMUNITY MIMDED.
    8. WE are OPPRTUNISTIC, especially in POLITICS. Our Muslim Politicians have back-stabbed the most loved Sinhala leaders like the former President after STOOGING to him and his siblings and politically destroyed them which the Buddhist, especially the Monks despite.
    9. We will “buy” anyone by our ill earned money power to get our things done, even against our community and its members.
    10. We practice the CULTURE of SMUGGLING and dealing in DRUGS as normal business though it is banned in ISLAM, and we think going to Mecca (making UMMRAH) purifies us from those SINS.
    Good for Minister Faizer Musthapa. I feel sorry for the MOST deceptive, unscrupulous and arrogant Muslim politician who has turned out to be a joker in parliament and to the media when it comes PROVINCIAL ELECTIONS THIS TIME. Now Faizer Musthapa has gained enough political sins to be thrown into hell, Insha Allah. By the way - you all must be knowing what a "chameleon" is? THAT IS FAIZER MUSTHAPA.
    Noor Nizam.
    Peace and Political Activist, Political Communications Researcher, SLFP Stalwart and Convener - "The Muslim Voice"

    ReplyDelete

Powered by Blogger.