August 29, 2018

ஞானசாரரை பிக்­கு­வாகக் கரு­த­மு­டி­யாது, பொதுபல சேனாவின் பாதை தவறானது - முன்னாள் தலைவர்

பௌத்த போத­னை­களில் ஈடு­படும் பிக்­கு­மார்­க­ளுக்கு போதிய பயிற்­சிகள் வழங்­கப்­பட வேண்டும். எத்­த­கைய பயிற்சித் தெளி­வு­க­ளு­மின்றி  போத­னைகள் புரியும் போதே குள­று­ப­டி­களும் பிரச்­சி­னை­களும்  எழு­கின்­றன.  ஏழு, எட்டு வரு­டங்கள் சமயப் படிப்பு பெற்ற பின்­னரே பள்­ளி­வா­சல்­களில் சமயத் தலை­வர்கள்  அமர்த்­தப்­ப­டு­கி­றார்கள். இதே முறைமை எங்கள் மத்­தியில் இல்லை. இதனை நாமும் கொண்டு வர வேண்டும் என்று தெஹி­வளை, நெதி­மாலை கலா­சார மத்­திய நிலைய அதி­பதி கிரம விம­ல­ஜோதி தேரர் தெரி­வித்­துள்ளார்.

பொது­பல சேனா அமைப்பின் ஆரம்பத் தலை­வ­ரா­க­வி­ருந்து கருத்து வேற்­று­மையால் அதி­லி­ருந்து விலகி தற்­போது சுய­மாக இயங்கி வரும் கிரம விம­ல­ஜோதி தேரரை ராவய சிங்­கள ஊடகம் பேட்டி கண்டு வின­விய போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­யுள்ளார்.

அவர் தொடர்ந்தும் கூறி­ய­தா­வது,

என்னால் ஏதும் தவ­றுகள் வெளிப்­பட்டு விடுமோ என்ற பீதி­யிலே நான் இப்­போது பௌத்த போத­னை­களில் ஈடு­ப­டு­வ­தில்லை. வாய்க்கு வந்­த­வா­றெல்லாம் போதனை செய்ய முடி­யாது. திரி­பி­டயை (பௌத்த கிரந்தம்) சரி­யாகப் புரிந்து கொள்­ளாது புத்­த­பெ­ருமான் அப்­படிச் சொல்­லி­யி­ருப்பார் இப்­படி சொல்­லி­யி­ருப்பார் என்று விளக்கம் கொடுப்­பது தவறு.

ஞான­சார தேரரை பிர­தான பிக்­குத்­த­லை­வ­ராக ஏற்றுக் கொள்­வோரும் எங்கள் மத்­தியில் காணப்­ப­டு­கி­றார்­களே! இது குறித்து நீங்கள் என்ன கரு­து­கி­றீர்கள் என்று ஊட­க­வி­ய­லாளர் எழுப்­பிய கேள்­விக்கு தேரர் பதி­ல­ளிக்­கையில்;

அவரை பிர­தம பிக்­கு­வாகக் கரு­த­மு­டி­யாது. ஒரு சில சந்­தர்ப்­பங்­களில் ஏதும் பிரச்­சி­னைக்கு இவர் முகம் கொடுத்துப் பேசும்­போது எமது இளைய பிக்­கு­மார்கள், இவர் தான் நாட்­டுக்­காக கலா­சா­ரத்தைப் பாது­காக்கும் தலைவர் என்று எடை­போட்டுக் கொள்­கி­றார்கள். இவர் குறித்து மேலி­டங்­க­ளி­லி­ருந்து பேசா­தி­ருப்­பதால் தான்  இளையோர் மத்­தியில்  இப்­படி தவ­றாக எடை போடப்­பட்­டுள்­ளது. அவ்­வ­ளவு தான் ஞான­சார தேர­ருக்கு பொது­பல சேனாவை முன்­னெ­டுத்­த­வர்கள் தானே இத்­த­கைய மதிப்பைக் கொடுத்து கொண்­டி­ருக்­கி­றார்கள் அல்­லவா? என்று எழு­ப்­பப்பட்ட வினா­வுக்கு அளிக்­கப்­பட்ட பதிலில்,

நானும் அந்த அமைப்பில் இருந்தேன். அவர்கள் பய­ணிக்கும் பாதை தவறு என்­பதை உணர்ந்து கொண்­ட­போது நான் அதி­லி­ருந்து ஒதுங்­கிக்­கொண்டேன். ஒரு சிலரால் பிக்­குமார் தூண்­டப்­பட்­டார்கள் என்­பது தெரி­ய­வில்லை. ஆனால் நான் இப்­போது அதில் ஈடு­ப­டு­வ­தில்லை. எமக்­கென்று பிர­தான அமைப்­பொன்று இருக்­கையில் சிறு­சிறு அமைப்­புக்கள் அவ­சி­யப்­ப­டாது.

பிக்­குகள் நாட்டின் சட்­டத்­திற்­குட்­ப­டா­த­வர்­களா? என்று வின­வப்­பட்­ட­போது,

இல்லை, இல்லை நாட்டின் அரச சட்­டத்­திற்கு கீழ்­ப­டியும் படியே புத்­த­பெ­ருமான் போதனை செய்­துள்ளார். பிக்­குகள் தமது கௌர­வங்­களைப் பேணி நடந்தால் அரச சட்­டத்­திற்கு மேலேதான் அவர்கள் இருப்­பார்கள். இதனை விடுத்து சட்­டத்தை மீறு­வதில் தான் பிரச்­சி­னையே எழு­கி­றது.

 பௌத்த கலா­சார பணி­களில் எப்­போது ஈடு­பாடு காட்ட ஆரம்­பித்­தீர்கள்?

1975 ஆம் ஆண்­டி­லி­ருந்து நான் வெளி­நாட்­டிலே தான் இருந்து வந்தேன். அப்­போது நான் எதிர்­பார்க்­கா­த­வாறு பணம் என்னை வந்­த­டைந்­தது. 1989 ஆம் ஆண்­டாகும் போது 75 கோடி ரூபா அளவில் என் கையி­ருப்பில் இருந்­தது. அப்­ப­ணத்­துடன் நான் நாடு திரும்பி மற்­று­மொரு பிக்­கு­வையும் இணைத்துக் கொண்டு தெஹி­வளை, நெதி­மா­லையில் வெளி­நாட்­ட­வர்­க­ளுக்­கான தியான நிலையம் ஒன்றை நிறு­வினேன். பௌத்தம் தொடர்­பான ஆங்­கில நூல் எதுவும் எமது நாட்டில் இல்­லாத நிலையில் மலே­ஷியா, இந்­தியா நாடு­க­ளுக்குச் சென்று அங்­கி­ருந்து சில பௌத்த நூல்­களை எடுத்து வந்து இங்கு வைத்தோம். பின்னர் 92 ஆம் ஆண்டில் பஸ் வண்டியொன்றை அமர்த்தி நடமாடும் பௌத்த நூலக சேவையொன்றை ஆரம்பித்து வந்தேன். தொடர்ந்து 93 ஆம் ஆண்டு முதல் பொது நூலகத்திலும் கலாபவன நிலையத்திலும் பௌத்த கலாசார கண்காட்சிகளை என்னிடமிருந்து பணத்தை செலவு செய்து நடத்தி வந்தே என் பணி தொடர்கிறது என்றார்.

-Vidivelli

0 கருத்துரைகள்:

Post a Comment