Header Ads



"ஜனாதிபதியின் தவறினாலேயே, பிரச்சனைகள் எழுந்துள்ளன"

தன்னை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி என அழைத்துக்கொள்ளும் மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டிருக்க கூடாது.

ஜனாதிபதியின் இந்த தவறான முடிவினாலேயே தற்போது எதிர்க் கட்சி தொடர்பில் பிரச்சனைகள் எழுந்துள்ளதாக ஒன்றிணைந்த எதிரணி தெரிவித்துள்ளது.

பொரளையில் உள்ள என்.எம்.பெரேரா மத்திய நிலையத்தில் இன்று -01- நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த அந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எதிர்க் கட்சித் தலைவராக உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வடக்கு மக்களின் வாக்குகளை மாத்திரமே பெற்றுக்கொண்டவர். அவர் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளையே நாடாளுமன்றில் பேசி வருகிறார் எனவும் அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.

1 comment:

  1. முன் பின் ஒன்றும் தெரியாம ஒருத்தனை கொண்டு வந்து ஆட்சியில் அமைத்தால் அப்படி தான் நாடே நாறும்.

    ReplyDelete

Powered by Blogger.