Header Ads



அப்பாவித் தனமான அறியாமை (உண்மைச் சம்பவம்)

அறியாமை காரணமாக பெண்ணொருவர் விநோதமான முறையில் விமான ரிக்கெட் பதிவு செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

இலங்கையின் தென்பகுதியை சேர்ந்த 65 வயதான பெண்ணொருவர் இவ்வாறு செய்துள்ளதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

விமானத்தில் நின்று கொண்டு பயணம் செய்வதற்காக பெண்ணொருவர் குறைந்த பணம் செலுத்தியுள்ளமை தெரிய வந்துள்ளது.

வறுமையான குடும்பத்தை சேர்ந்த பெண்ணொருவர் இந்தியாவிலுள்ள தம்பதிவ யாத்திரையில் ஈடுபட விருப்பம் கொண்டிருந்தார். இதற்காக சிறுகசிறுக பணம் சேகரித்துள்ளார்.

அதற்கமைய விமான ரிக்கெட் ஒன்றை பதிவு செய்து கொள்ள துறைசார் நிலையம் ஒன்றுக்கு சென்றுள்ளார்.

முதன்முறையாக வெளிநாட்டு பயணம் ஒன்றை மேற்கொள்ள எண்ணிய பெண்ணுக்கு அது தொடர்பான போதிய விளக்கம் இருக்கவில்லை.

விமான ரிக்கெட் குறித்து விசாரித்துள்ளார். 75 ஆயிரம் ரூபா என அதிகாரி கூறியுள்ளார். விமானத்தில் அமர்ந்து செல்வதற்காக இவ்வளவு தொகை என பெண்மணி ஆர்வமாக கேட்டுள்ளார். அதிகாரிகளின் பதிலை கேட்டவுடன், 40000 ரூபா பணத்தை அவர் செலுத்தியுள்ளார்.

ரிக்கெட்டுக்கான மீதி 30000 ரூபா பணத்தை அதிகாரிகள் கேட்டுள்ளனர். தன்னிடம் இவ்வளவு தான் பணம் உள்ளது. அரை மணித்தியாலம் விமானத்தில் நின்று கொண்டு பயணிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவரின் பதிலை கேட்டு அதிர்ந்து போன அதிகாரிகள், பெண்மணின் அறியாமையை பக்குவமாக தெளிவுபடுத்தியுள்ளனர்.

குறித்த பெண்மணியின் அறியாமையை எண்ணிய அதிகாரிகள் கவலை அடைந்ததுடன், உதவி செய்ய முடியாது என தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டு பயணம் ஒன்றை மேற்கொள்வதில் மிகவும் ஆர்வமாக இருந்த பெண்மணி, மிகுந்த ஏமாற்றத்துடன் வீட்டுக்கு சென்றுள்ளார்.

2 comments:

Powered by Blogger.