August 12, 2018

'அளுத்கமை இன்றிரவு எரியும்' மிரட்டினான் ஞானசாரர், அடிபணிந்த பசில், உதவிய சம்பிக்க

அளுத்கம தர்காநகர் முஸ்லிம் வெறுப்பு கலவரத்தில் ஈடுபட்ட தேரோக்கள் அடங்கலான காடையர் கும்பலொன்றை பொலிஸார் கைது செய்திருந்தனர்.

இரவில் கொளுத்திய தீ எரிந்த தணலும், சாம்பலாகிப்போன கோடிக்கணக்கான உடமைகளிலிருந்து வெளிப்பட்ட புகையும் மறையும் முன்னரே காலையில் வந்த ஞானசார அடைத்து வைக்கப்பட்ட காடையர்களை ஒரு சாட்சாத்தை போல விடுதலை செய்து கொண்டு போனார்.

‘ அப சரணய்’ என்ற நச்சு வார்த்தைகள் மூலம் முஸ்லிம் ஊர்களை கொளுத்த தூபமிட்ட ஒரு பெருங்குற்றவாளி அடுத்த நாளே அரசாங்கத்தின் உச்சபட்ச அதிகார மையம் களுத்துரை அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடாத்திக்கொண்டிருந்த கூட்டத்திற்குள் நுளைந்து தனது அடியாட்களை வெகு லாவகமாக மீட்டுச்சென்றது எப்படி?

‘அடைக்கப்பட்டிருக்கும் எங்களது ஆட்களை விடுதலை செய்யாவிட்டால் மீண்டும் அளுத்கமை இன்றிரவு எரியும்’ என்றார்! கூட்டத்திற்கு தலைமை தாங்கிய பெசில் ராஜபக்‌ஷ உட்பட அனைவரும் கல்லில் பேண்ட பூனைகள் போல உட்கார்ந்திருந்தார்கள்!

ஞானசார வெற்றியோடு திரும்பி போனார்.

அன்று அந்த இடத்திற்கு, முழு ராணுவ பாதுகாப்போடு தனது அமைச்சு வாகனத்தில் ஞானசாரவை கூட்டிவந்தவர் வேறு யாருமல்ல!

அமைச்சர் சம்பிக்க ரணவக்கதான் கூட உதய கம்மன்பிலவும் இருந்தார்.

இப்போது ஆறுவருட கடூழிய சிறைவாசம் தீர்ப்பாகிய நிலையில் ஜனாதிபதியின் மன்னிப்பிற்கான கோட்டையும் (road map) சம்பிக்க கீறத்தொடங்கிவிட்டார்.

மகாநாயக்கர்கள் வேண்டிக்கொண்டால் ஜனாதிபதி அதனைப்பற்றி பரிசீலிப்பார் என்று நேற்று சம்பிக்க தெரிவித்திருக்கும் கருத்து, நாட்டின் நீதித்துறை மீது மக்கள் வைத்திருக்கும் கடைசித்துளி நம்பிக்கையின் மீது விழுந்திருக்கும் பேரடியாகும்.

இந்த நாடு எங்கே உருப்படப்போகிறது.

Mujeeb Ibrahim

7 கருத்துரைகள்:

மறதி மிக்க நம் மக்களுக்கு அடிக்கடி  ஞாபகப்படுத்தப்பட வேண்டியவை இவை. 

நம்மில் சிலர் இன்னும் அவர்களது பின்னால் அலைவது துரதிர்ஷ்டமானது. 

ஞானசார எவ்வாறு வலியையும் இழிவையும் அனுபவிக்கிறாரோ அதேபோல் அவருக்கு உடந்தையாக இருந்த  அவரது ஏனைய சகாக்களும் அனுபவிக்க மாட்டார்கள் என்பதில் என்ன நிச்சயம்?

waste news because those people last election also support to Mahinda team so they never change why we need to worry

Uruppadum uruppadum.. if the snake come out!!!

ஐக்கிய தேசிய கட்சி ரணில் தலைமையில் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்தால் ஜானசார தேரர் போன்றவர்கள் வைக்கப்பட வேண்டிய இடத்தில் வைக்கப்படுவார்கள்.

Can u make this copy paste. Because very good massage

Ven Ganasara including extremist pre planned organised attack to Muslims with blessings of previous government . Can any Muslim deny this
With these power only following day he got freed all those involved.
If We Muslims wants to live peacefully these people punished and politicians behind all these organisations should wiped out
But its sorry to for their own agenda benefits our politicians still support them
They are not worried
Immediate need of our community is devoted leadership

முதலில் இந்த சம்பிக்க ரணவக்க அமைச்சரைக்கைது செய்து விசாரனை செய்யவேண்டும்

Post a Comment