Header Ads



வெலிக்கடை சிறைச்சாலையில் பதற்றம் - சிலருக்கு காயம்

வெலிக்கடை சிறைச்சாலையில் பெண் கைதிகள் சிலர் இன்று (20) மீண்டும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். 

ஆர்ப்பாட்டகாரர்கள் சிறைச்சாலையின் கூரையின் மீது ஏறி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

தற்போது நிலவும் அசாதாரண சூழ்நிலையால் சிறைச்சாலை அதிகாரிகள் 8 பேர் மற்றும் 3 சிறைக்கைதிகள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

இந்நிலையில் 52 சிறைக்கைதிகள் வெலிகடை சிறைச்சாலையில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

குறித்த 52 சிறைக்கைதிகளும் குருவிட்ட, காலி, போகம்பற மற்றும் களுத்துறை சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.