Header Ads



லவ்ஹுல் மஹ்ஃபூல் (பாதுகாக்கப்பட்ட ஏடு)

"தகவல்" ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பைவிட இன்று இதன் விளக்கம் வித்தியாசமாக இருக்கிறது. விஞ்ஞானிகள் தகவல் தொடர்பான விதிகளை (theory) உருவாக்கி கொண்டிருக்கிறார்கள். சமூக விஞ்ஞானிகள் "தகவல் தொழிநுட்ப யுகத்தை" பற்றி பேசுகிறார்கள். தகவல் இன்று மனிதனுக்கு தேவையான ஒன்றாக மாறி வருகிறது.

பிரபஞ்சம் மற்றும் வாழ்கை ஆகிய இரண்டின்; துவக்கத்தோடும் தகவல் சம்பந்தப்பட்டு இருப்பதன் காரணமாகவே நவீன காலத்தில் இந்த கொள்கை முக்கியத்துவம் பெறுகிறது. இன்றைய விஞ்ஞானிகள் இந்த பிரபஞ்சம் பொருள்) – சக்தி– தகவல் ஆகியவற்றை கொண்டு உருவானது என்கின்றனர். இதன் மூலம் 19ம்நூற்றாண்டில் பரிணாம வளர்ச்சி கொள்கைவாதிகளின் கூற்றான இந்த பிரபஞ்சம் பொருள் மற்றும் சக்தி ஆகிய இரண்டை மாத்திரம் கொண்டு உருவானது என்ற கொள்கை மறைந்து போனது.

ஆகவே இதன் பொருள் என்ன ?

இதை டீ. என். ஏ கொண்டு விளக்குவோம். நமது உடலிலுள்ள அனைத்து செல்களும் அல்லது கலன்களும் டீ. என். ஏ யிலுள்ள இரட்டை பின்னல் வடிவமைப்பிலுள்ள மரபணு தகவல்களுக்கு அமையவே தொழிற்படுகின்றன. நமது உடலை உருவாக்கியுள்ள கோடிக்கணக்கான செல்கள் ஒவ்வொன்றும் தனக்கென டீ. என். ஏ வைத்துள்ளது. நமது உடலில் நடைபெறும் அனைத்து தொழிற்பாடுகளும் இந்த பெரும் அணுவில் அணுக்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. நமது உடலுக்கு தேவையான புதிய புரதத்தை உருவாக்க எமது உடலிலுள்ள செல்கள் டீ. என். ஏ யில் பதிவு செய்யப்பட்டுள்ள புரத குறியீடுகள் உபயோகிக்கின்றன. டீ. என். ஏ யில் தகவல்கள் நிறைந்து காணப்படுகின்றன. நீங்கள் அதை எழுத முற்பட்டால்- சுமார் 900 கலைகளஞ்சியங்கள் தேவைப்படும்.

டீ. என். ஏ எவ்வாறு உருவாக்கப்பட்டுள்ளது ? 50 ஆண்டுகளுக்கு முன்பு விஞ்ஞானிகள் இரசாயன ரீதியில் ஒன்றோடு ஒன்று பிணைந்துள்ள நியுக்கிலியோடைட் என்று கூறப்படும் நியுக்கிலிக் ஆசிட் கொண்டே டீ. என். ஏ உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறியிருப்பார்கள். வேறு வகையில் விளக்குவதானால் அவர்கள் டீ. என். ஏ யிலுள்ள பொருட்களை மட்டுமே பட்டியலிட்டிப்பார்கள். இன்று விஞ்ஞானிகளின் கூற்று வேறு விதமாக இருக்கிறது.. டீ. என். ஏ ஆனது அணுக்கள் இ சிற்றணுக்கள்) இரசாயன பிணைப்புகள் மற்றும் மிக முக்கியமாக, தகவல்கள். உள்ளடக்கியது என்று கூறுகிறார்கள்.

இதை ஒரு புத்தகத்திற்கு ஒப்பிடலாம். ஒரு புத்தகமானது கடதாசி, மை கொண்டு மட்டுமே உருவானது என்று கூறுவது தவறாகும். இவற்றோடு தகவல்களும் சேரும் போதே உண்மையான புத்தகமாக கருத முடியும். ஒரு கலைகளஞ்சியத்தை)யான zmdkeiowihwi என்று எழுதப்பட்ட ஒரு புத்தகத்திலிருந்து பிரித்து காட்டுவது அதிலுள்ள தகவல்களேயாகும். இவை இரண்டிலும் கடதாசி மை ஆகியவை சம்பந்தப்பட்ட போதிலும் ஒன்றில் தகவல்கள் உள்ளன. ஒன்றில் தகவல்கள் இல்லை. ஆகவே அந்த புத்தகத்தின் நூலாசிரியர் தகவல்களேயாகும். அதனால் டீ. என். ஏ உள்ளே வைக்கப்பட்டுள்ள தகவல்களை வைத்தது மிகவும் மதிநுட்பமுள்ள ஒருவன் என்பதை மறுக்க முடியாது.

தகவல் கோட்பாடானது பரிணாம வளர்ச்சி கோட்பாடை அழித்து விட்டது

இந்த உண்மை கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம் டார்வினின் பரிணாம வளர்ச்சி தத்துவமும் இயற்கை விதி தத்துவங்களும், அதனால் வலுவூட்டப்பட்ட இயற்கை நியதிகளும் முடிவிற்கு வந்தன. காரணம் அனைத்து உயிரினங்களும் பொருளை கொண்டு மட்டுமே உருவானது என்றும் மரபணு தகவல்கள் தற்செயலாக உருவானது என்பது இயற்கை நியதியை ஆதரிப்பவர்களின் கூற்றாகும். இவர்களின் வாதம் புத்தகம் உருவான பின் கடதாசி மற்றும் மை இரண்டும் வெவ்வேறு சந்தர்பங்களில் இணைந்தன என்று சொல்வதை போலுள்ளது.

இயற்கை நியதி கோட்பாடானது "சுருக்கும் விதி" யை ஆதரிக்கிறது. அதாவது தகவல்களை சுருக்கி இறுதியாக பொருளின் நிலைக்கு கொண்டு வரலாம் என வாதிடுகிறது. இதனால் தான் இயற்கை நியதி ஆதரிப்பவர்கள் பொருள்) தவிர்ந்து வேறு எங்கும் தகவல்களை தேட தேவையில்லை என்று கூறுகிறார்கள். இந்த வாதம் பிழை என நிரூபிக்கப்பட்டுள்ளது. இயற்கை நியதி ஆதரிப்பவர்களும் இந்த உண்மையை ஏற்க தொடங்கிவிட்டனர்.பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை மிக தீவிரமாக ஆதரிக்கும் ஜார்ஜ்

சீ வில்லியம் அனைத்தையும் பொருள் வடிவில் காணும், இயற்கை நியதி சுருக்க கோட்பாடு) கோட்பாட்டின் பிழைகள் என்ற கட்டுரையை 1995 ஆண்டு எழுதினார். பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை ஆதரிக்கும் உயிரியல் விஞ்ஞானிகள் அவர்கள் இரண்டு அல்லது அதற்கு அதிகமான இணையமுடியாத வெவ்வேறு காரணிகள் இருப்பதை உணர தவறிவிட்டார்கள். இந்த இரண்டு காரணிகளும் ஒருபோதும் எந்த சூழ்நிலையிலும் முன்பு கூறப்பட்ட சுருக்கும் விதியை கொண்டு இணைய முடியாது ……… மரபணு) தகவல்களின் கோர்வையே தவிர அது ஒரு பொருளல்ல. உயிரியலில் நீங்கள் மரபணு அல்லது ஜினோடைப் அல்லது ஜீன் பூல் என்று கூறுவதெல்லாம் தகவல்களை குறிக்குமே தவிர பொருளையல்ல. தகவல்கள் மற்றும் பொருள் ஆகிய முரண்பட்ட இரண்டு; வெவ்வேறு தொழிற்பாடுடைய காரணிகள் இருக்கின்றன. அவை இரண்டும் அவற்றின் தன்மையை கொண்டு தனித்தனியாகவே ஆராய வேண்டியுள்ளது. 1

கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் விஞ்ஞானத்தில் முதுநிலை பட்டம் பெற்றவரும் பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை விமர்சிப்பவருமான ஸ்டீபன். சீ. மேயர் ஒரு பேட்டியின் போது,

நான் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கும் போது இரண்டு கணணி குறுந்தட்டுகளை கையில் எடுத்து கொள்வேன். அதில் ஒன்றில் மென்பொருள் இருக்கும். மற்ற தட்டில் ஒன்றும் இருக்காது " இந்த இரண்டிலுள்ள தகவல்களை தவிர எடையில் என்ன வித்தியாசம் உள்ளது" என்று கேட்பேன். விடை பூஜியம். ஓன்றுமில்லை. தகவல் இருந்த போதிலும் எந்த வித்தியாசமும் இல்லை. அதற்கு காரணம் தகவல்கள் என்பது எடையற்ற ஒன்று. தகவல்கள் என்பது பொருள் அல்ல.

ஆகவே, அதன் ஆரம்பத்தை எவ்வாறு இயற்கை நியதி விளக்கங்ளை கொண்டு விளக்க முடியும் ? அதன் ஆரம்பத்தை எவ்வாறு பொருளை கொண்டு விளக்க முடியும்? இது பரிணாம வளர்ச்சி கோட்பாட்டுக்கு மிகப்பெரும் சவாலாக இருக்கிறது.

19 நூற்றாண்டில் விஞ்ஞானத்தில் பொருள் சக்தி ஆகிய இரண்டு அடிப்படை காரணிகள் இருப்பதாக நினைத்தோம்.  21 நூற்றாண்டின் ஆரம்பத்தில் தகவல்கள் என்ற முன்றாவது அடிப்படை காரணி இருப்பதை ஏற்று கொள்கிறோம். அதை பொருளாக குறைத்து மதிப்பிட முடியாது. அதை சக்தியாகவும் குறைத்து மதிப்பிட முடியாது.

20 நூற்றாண்டில் தகவல்களை பொருள் நிலைக்கு குறைப்பதற்காக முன்வைக்கப்பட்ட - உயிரியலின் தோற்றம் - தன்னை தானே ஒழுங்குபடுத்தி கொண்ட பொருள் - இயற்கை கோட்பாடுகளின் உதவி கொண்டு உயிரினங்களின் மரபணு தகவல்களை விளக்க முற்பட்ட பரிணாம வளர்ச்சியின் உயிரியல் கொள்கை - ஆகிய கோட்பாடுகள் அனைத்தும் தோல்வி அடைந்தன. பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை விமர்சிப்பவரான பிலிப் ஜான்ஸன் எழுதுகிறார்

உயிரியலில் ஒவ்வொரு நிலையிலும் தகவல் மற்றும் பொருள் ஆகிய இரண்டு தன்மைகள் காணப்படுகின்றன. தகவல்கள் பொருளால் உருவாக்கப்பட்டது என்று நினைக்கும் விஞ்ஞானிகள் தகவலின் உண்மை நிலையை காண தவறுகிறார்கள். ஆனால் இவை பக்க சார்பற்ற சிந்தனைக்கு முன்னால் தோற்றுபோகும்.

ஜான்ஸன் கூறுகிறார் "தகவல் என்பது பொருளல்ல. அவை பொருளில் பதிக்கப்பட்ட ஒன்று. அது வேறு எங்கிருந்தோ இருந்து வருகிறது. ஒரு மதிநுட்பமான ……. ஜெர்மன் பௌதீக மற்றும் தொழிநுட்ப மையத்தின் பேராசிரியரும் நிர்வாகியுமான டாக்டர் வேர்னர் கிட் இந்த கருத்தை ஆமோதிக்கிறார்.தகவல் குறியீடுகள் கோர்கப்பட்ட விதத்தில் பொருள் சாராத மதிநுட்பமான ஒன்று ஈடுபட்டுள்ளது. ஒரு பொருளால் ஒருபோதும் தகவல் குறியீடுகளை உருவாக்க முடியாது. எமது ஆய்வின் அடிப்படையில் ஒவ்வொரு தகவல்களையும் ஆராய்ந்து பார்தால் தன்னிச்சையாக செயல்பட கூடிய மிகவும் மதிநுட்பமான ஒருவனின் அறிவார்ந்த செயல்பாடு என்பதை விளங்கி கொள்ளலாம். ஒரு பொருளால் தகவல்களை உருவாக்க முடியும் என்று சொல்லக்கூடிய எந்த ஒரு விதியோ அல்லது செயல்பாடோ அல்லது தொடர் நிகழ்வுகளோ இல்லை.

நாம் மேலே குறிப்பிட்டதை போன்று கடதாசிஇ மை, தகவல்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதே புத்தகம். இந்த புத்தகத்தின் தகவல்கள் நூலாசிரியர் எண்ணமேயாகும்.

இந்த எண்ணம் முன்னறே தோன்றி மற்ற பொருட்கள் எவ்வாறு உபயோகப்படுத்த பட வேண்டும் தீர்மானிக்கிறது. முதலில் ஒரு நூலாசிரியர் புத்தகம் எழுத முன்னர் அவரது எண்ணத்தில் புத்தகம் தோன்றுகிறது. பின்னர் நூலாசிரியர் அந்த எண்ணத்திற்கு தர்க்க ரீதியான காரணங்களை ஏற்படுத்தி வாக்கியங்களை அமைக்கிறார். இரண்டாவது நிலையாக அவரது எண்ணத்திற்கு பொருள் வடிவம் கொடுக்கிறார். கணணி உதவி கொண்டு அவரது எண்ணத்திலுள்ள தகவல்களுக்கு எழுத்து வடிவம் கொடுக்கிறார். பின்பு இந்த எழுத்துகள் அச்சகத்திற்கு சென்று புத்தக வடிவை பெறுகிறது.

ஒரு பொருள் தகவல்களை உள்ளடக்கியிருந்தால் அந்த தகவல்களை நன்கு அறிந்த ஒருவனால் அந்த பொருள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது என்று விளங்கி கொள்ளலாம். முதலில் ஒரு அறிவு பிறகு அந்த அறிவுக்கு சொந்தக்காரன் அந்த தகவல்களை பொருளாக மாற்றி அவ்வாறே வடிவம் கொடுக்கப்படுகிறது.

பொருளுக்கு முன்னால் அறிவு இருந்தது

ஆகவே பரிணாம வளர்ச்சி சித்தாந்தவாதிகள் சொல்வதை போன்று பொருள் தகவல்களை உருவாக்க முடியாது. தகவல்களின் ஆதாரம் பொருளன்று மாறாக மிக ஈடு இணையற்ற மதிநுட்பமான ஒரு அறிவு. இந்த அறிவு பொருள் உருவாகுவதற்கு முன்னால் இருந்தது. இந்த அறிவு முழு பிரபஞ்சத்தையும் படைத்து உருகொடுத்து ஒழுங்கு படுத்தியது. இந்த முடிவிற்கு வர விஞ்ஞானத்தின் உயிரியல் துறை மட்டும் காரணமல்ல. 20 நூற்றாண்டின் வானியலும் (யளவசழெஅல) பௌதீகவியலும் (astrnomy) அவற்றுக்கிடையில் காணப்படும் அதிசயக்கத்தக்க ஒற்றுமையும் வடிவமைப்பைம் சுட்டிகாட்டுகிறது. அதாவது இந்த பிரபஞ்சம் தோன்றுவதற்கு முன்னால் ஒரு மிகப்பெரும் அறிவு ஒன்று இருந்து அதை படைத்து என்பதை சுட்டிக்காட்டுகிறது.

மசசூசேட் தொழிநுட்ப மையம் போன்ற பல்கலைகழகங்களில் உயிரியல்) மற்றும் பௌதீகவியல்; கற்றவரும் இறைவனின் விஞ்ஞானம் என்ற நூலின் ஆசிரியருமான இஸ்ரேலிய விஞ்ஞானி கெரால்ட் சுரூடர் இந்த விடயத்தில் சில முக்கிய தகவல்களை தருகிறார். அவரது இறைவனின் மறைவான முகம் : விஞ்ஞானம் உண்மைகளை அறிவிக்கிறது என்ற நூலில் உயிரியல் மற்றும் பௌதீகவியல் கண்டுள்ள முடிவை விளக்குகிறார்:

இந்த பிரபஞ்சத்தை ஒற்ற மனசாட்சயுள்ளஇ மதிநுட்பமான அறிவு ஒன்று சூழ்ந்துள்ளது. நுண் அணுக்களின் தன்மைகளை ஆராய்ந்து வரும் விஞ்ஞானம் எம்மை ஒரு புதிய விடயத்தை நோக்கி இட்டு சென்றுள்ளது. அதாவது உயிர் வாழும் அனைத்தும் இந்த மகத்தான அறிவின் வெளிப்பாடாகும். ஆய்வு கூடங்களில் பரீட்சித்து பார்ததில் முதலில் தகவல்கள் சக்தியாக மாறி பொருளாக உருவெடுத்தது என்பது தெளிவாகிறது. ஓவ்வொரு பொருளும் -அணுவிலிருந்து மனிதன் வரை ஒவ்வொரு நிலைகனிலும் தகவல்களை பிரதிபலிக்கிறது.

கெரால்ட் சுரூடர் பொருத்தவறையில் இன்றைய நவீன விஞ்ஞானமும் மதமும் ஒரு பொதுவான உண்மையில் சந்திக்கின்றன. இது படைப்பு பற்றிய உண்மையாகும். பல நூற்றாண்டுகளாக மதங்கள் மனித குலத்திற்கு போதித்தவகைகளை இன்றைய விஞ்ஞானம் இப்போதுதான் கண்டுபிடிக்கிறது.

லவ்ஹுல் மஹ்ஃபூல் (பாதுகாக்கப்பட்ட ஏடு)

இதுவரை நாம் பிரபஞ்சம் மற்றும் உயிரினங்களின் தோற்றம் பற்றிய விஞ்ஞானத்தின் முடிவுகளை பாhத்;தோம். அதாவது இந்த பிரபஞ்சமும் உயிரினங்களும் அனைத்திற்கும் முன்னால் இருந்த மிகப்பெரும் தகவல்களை கொண்டே படைக்கப்பட்டன.

இந்த நவீன விஞ்ஞான முடிவானது 14 நூற்றாண்களுக்கு முன்னால் அருளப்பட்ட குர்ஆனின் வசனங்களோடு ஒத்துபோவது வியப்பாக இருக்கிறது. மக்களுக்கு நல்லுபதேசமாக அனுப்பப்பட்ட குர்ஆனில் இந்த பிரபஞ்சம் படைக்கப்படுவதற்கு முன்னால் லவ்ஹுல் மஹ்ஃபூல் (பாதுகாக்கப்பட்ட ஏடு) இருந்தது என்றும் அதில் பிரபஞ்சத்தின் அனைத்து படைப்புகளை பற்றியும் அனைத்து நிகழ்வுகளை பற்றியும் அதில் எழுதப்பட்டுள்ளது என்று இறைவன் கூறுகிறான்.

லவ்ஹுல் மஹ்ஃபூல்  பாதுகாக்கப்பட்டதாகும் (மஹ்ஃபூல்). ஆகவே அதிலுள்ளவற்றை அழிக்கவோ மாசுபடுத்தவோ முடியாது.. குர்ஆன் இதை "உம்முல் கிதாப்" (புத்தகங்களின் தாய்) - "கிதாபுன் ஹாபிலூன்" (அனைத்தும் பாதுகாக்கப்பட்ட புத்தகம்) – கிதாபின் மக்நூன் (மிகவும் பாதுகாக்கப்பட்ட புத்தகம்) அல்லது புத்தகம் போன்ற பல பெயர்களில் அழைக்கிறது. மனிதன் முகம் கொடுக்கும் அனைத்தை பற்றியும் கூறப்படுவதால் அதை கிதாபின் மின் கப்லி (கட்டளை புத்தகம்) என்றும் அழைக்கப்படுகிறது.

இறைவன் பல வசனங்களில் லவ்ஹுல் மஹ்ஃபூல் பற்றி குறிப்பிடுகிறான். முதலில் அந்த புத்தகத்திலிருந்து ஒன்றுமே மறையாது.

"அவனிடமே மறைவானவற்றின் திறவு கோல்கள் இருக்கின்றன. அவற்றை அவனன்றி எவரும் அறியார். மேலும் கரையிலும் கடலிலும் உள்ளவற்றையெல்லாம் அவன் அறிவான், அவன் அறியாமல் ஓர் இலையும் உதிர்வதில்லை. பூமியின் (ஆழத்தில் அடர்ந்த) இருள்களில் கிடக்கும் சிறு வித்தும், பசுமையானதும், உலர்ந்ததும் (எந்தப் பொருளும்) தெளிவான (அவனுடைய) பதிவேட்டில் இல்லாமலில்லை." (6:59)

ஒரு வசனத்தில் உலகிலுள்ள அனைத்து உயிரினங்கள் பற்றியும் லவ்ஹுல் மஹ்ஃபூல்  குறிப்பிடப்பட்டுள்ளது என்று இறைவன் குறிப்பிடுகிறான:

"பூமியில் ஊர்ந்து திரியும் பிராணிகளும், தம் இரு இறக்கைகளால் பறக்கும் பறவைகளும் உங்களைப் போன்ற இனமேயன்றி வேறில்லை, (இவற்றில்) எதையும் (நம் பதிவுப்) புத்தகத்தில் நாம் குறிப்பிடாமல் விட்டு விடவில்லை, இன்னும் அவை யாவும் அவற்றின் இறைவனிடம் ஒன்றுசேர்க்கப்படும்." (6:38)

இன்னொறு வசனத்தில் வானம் பூமி மற்றும் பிரபஞ்சத்திலுள்ள அனைத்து உயிரினங்கள் மற்றும் படைப்பினங்கள் பற்றியும் இறைவனுக்கு தெரியும் என்றும் அவை லவ்ஹுல் மஹ்ஃபூலில் பதியப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது:

நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும், 'குர்ஆனிலிருந்து நீங்கள் எதை ஓதினாலும், நீங்கள் எந்தக் காரியத்தை செய்தாலும், நீங்கள் அவற்றில் ஈடுபட்டிருக்கும்போது நாம் கவனிக்காமல் இருப்பதில்லை. பூமியிலோ, வானத்திலோ உள்ளவற்றில் ஓர் அணுவளவும் (நபியே!) உம் இறைவனுக்குத் (தெரியாமல்) மறைத்து விடுவதில்லை. இதை விடச் சிறயதாயினும் அல்லது பெரிதாயினும் விளக்கமான அவன் புத்தகத்தில் பதிவு செய்யப்படாமல் இல்லை.. (10:61)

லவ்ஹுல் மஹ்ஃபூலில் மனிதனை பற்றி அனைத்து தகவல்களும் உள்ளது. மேலும்அனைத்து மக்களினதும் மரபணு குறியீடுகளும் அவர்களின் இலக்குகளும் (destiny) அதிலுள்ளன.50:2 எனினும்: அவர்களிலிருந்தே, அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் ஒருவர் வந்ததைப் பற்றி அவர்கள் ஆச்சரியப்படுகின்றனர், ஆகவே, காஃபிர்கள் கூறுகிறார்கள்: 'இது ஓர் ஆச்சரியமான விஷயமேயாகும்."

50:3 'நாம் மரணமடைந்து மண்ணாகி விட்டாலு(ம் உயிர் கொடுத்து எழுப்பப்படுவோ)மா? இப்படி மீள்வது (சாத்தியமில்லாத) தொலைவானது" (என்றும் அவர்கள் கூறுகின்றனர்).

50:4 (மரணத்திற்குப் பின்) அவர்களிலிருந்து (அவர்கள் உடலை) பூமி எந்த அளவு குறைத்திருக்கின்றதோ அதைத் திட்டமாக நாம் அறிந்திருக்கின்றோம், நம்மிடம் (யாவும் பதிக்கப் பெற்று) பாதுகாக்கப்பட்ட ஏடு இருக்கிறது.

லவ்ஹுல் மஹ்ஃபூலிலுள்ள இறைவனின் வசனங்கள் முடிவற்றது என்று கீழுள்ள வசனம் கூறுகிறது.

"மேலும், நிச்சயமாக இப்பூமியிலுள்ள மரங்கள் யாவும் எழுது கோல்களாகவும், கடல் (நீர் முழுதும்) அதனுடன் கூட மற்றும் ஏழு கடல்கள் அதிகமாக்கப்பட்டு (மையாக) இருந்த போதிலும், அல்லாஹ்வின் (புகழ்) வார்த்தைகள் முடிவுறா, நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், ஞானம் மிக்கோன்." (31:27)

முடிவுரை

மார்க்கம் மனிதர்களுக்கு சொல்வதையே இன்றைய நவீன விஞ்ஞான கண்டுபிடிப்புகளும் நிரூபிக்கின்றன என்பதை இந்த கட்டுரை மூலம் விளங்கிகொள்ளலாம். விஞ்ஞானத்தின் மீது பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை ஆதரிப்பவர்கள் புகுத்திய கோட்பாட்பாடுகளை விஞ்ஞானமே நிராகரித்து விட்டது.

தகவல்கள் பற்றிய நவீன விஞ்ஞானத்தின் முடிவானது 1000 வருட காலம் நிலவிய குழப்பங்களுக்கு யாருடைய வாதம் சரியென்பதை விளகக்கிறது. இந்த குழப்பம் மதத்துக்கும் இயற்கை நியதி சிந்தனையாளர்களுக்குமிடையே சர்ச்சையாகும். பொருளுக்கு ஆரம்பமில்லை என்றும் பொருளுக்கு முன்பு ஒன்றும் இருக்கவில்லை என்பது இயற்கை சிந்தனையாளார்களின் வாதமாகும். ஆனால் இதற்கு மாறாக பொருளுக்கு முன்பு இறைவன் இருந்தான் என்றும் அந்த பொருள் இறைவனின் எல்லையற்ற அறிவால் படைக்கப்பட்டு நிருவகிக்கப்படுகிறது என்று மதம் கூறுகிறது.

வரலாற்றின் தொடக்கத்திலிருந்தே யூத கிறிஸ்தவ இஸ்லாம் போன்ற மதங்களால் போதிக்கப்பட்ட இந்த உண்மை - விஞ்ஞான ரீதியிலும் நிரூபிக்கப்பட்டுள்ளதானது முன்னால் நாஸ்திகர்கள் யுகம் (post atheist age) என்று ஒன்று வர இருப்பதற்கான அடையாளமாகும.; இறைவன் உண்மையாகவே இருக்கிறான் என்றும் அவன் அனைத்தையும் அறிந்தவன் என்பதையும் மனித இனம் உணர தொடங்கியுள்ளது. குர்ஆனிலிருந்து ஓர் நினைவூட்டல் :


"நிச்சயமாக அல்லாஹ் வானத்திலும், பூமியிலும் உள்ளவற்றை நன்கறிகிறான் என்பதை நீர் அறியவில்லையா? நிச்சயமாக இவை(யெல்லாம்) ஒரு புத்தகத்தில் (பதிவு செய்யப்பட்டு) இருக்கின்றன. நிச்சயமாக இது அல்லாஹ்வுக்கு மிகவும் சுலபமானது." (22:70)

'Jazaakallaahu khairan" கட்டுரையாசிரியர்: Harun yahya

ஆய்விற்கு உதவிய நூல்கள்.

(1) George C. Williams. The Third Culture: Beyond the Scientific Revolution. (ed. John Brockman). New York, Simon & Schuster, 1995, pp. 42-43
(2) Stephen Meyer, "Why Can't Biological Information Originate Through a Materialistic Process", Unlocking the Mystery of Life, DVD, Produced by Illustra Media, 2002
(3) Phillip Johnson, The Wedge of Truth: Splitting the Foundations of Naturalism , Intervarsity Press, Illinois, 2000, p. 123
(4) Werner Gitt. In the Beginning Was Information. CLV, Bielefeld, Germany, pp. 107, 141
(5) Gerald Schroeder, The Hidden Face of God, Touchstone, New York, 2001, p. xi

2 comments:

Powered by Blogger.