Header Ads



புத்தளம் நகர பிதாவின் கவனத்திற்கு...!

-ஐ.எல்.எம் சியாத்-

புத்தளம் பெரிய பள்ளிக்கு ளுஹர்  தொழுகைக்காக களப்பு கடற்கரை பின் பகுதி Gate பக்கம் வாகனத்தை நிறுத்தி சென்ற போது புத்தளம் நகர சபை ஊழியரால் 50/= வாகன Parking fee அறவிடப்பட்டது.

புத்தளம் பிரதேச சபை கல்பிட்டி பிரதேச சபை ஆராச்சிக்கட்டு பிரதேச சபை சிலாபம் நகர பிரதேச சபைகளில் இல்லாத ஒன்று எல்லோராலும் புகழப்படும் புத்தளம் நகர பிதாவின் கட்டுப்பாட்டில் உள்ள புத்தளம் நகரத்தில் அறவிடப்படுவது கவலையளிக்கிறது.

நகர சபை Parking களில் அறவிட்டால் பரவாயில்லை புத்தளம் நகர எல்லைக்குள் எங்கு நிறுத்தினாலும் பணம் அறவிடுவோம் என்பது நல்லதாக தெரியவில்லை.

இது விடத்தில் நகர முதல்வரும் உறுப்பினர்களும் விசேட கவனம் சொலுத்துவார்கள் என எதிர்பார்க்கிறேன்

No comments

Powered by Blogger.