August 18, 2018

"முஸ்லிம்க‌ளிட‌ம் பிர‌பா க‌ணேச‌ன், ப‌கிர‌ங்க‌மாக‌ ம‌ன்னிப்பு கேட்க‌ வேண்டும்"

வ‌ன்னி மாவ‌ட்ட‌த்தின் ப‌ல ப‌குதிக‌ளில் முஸ்லிம் அமைச்ச‌ர்க‌ள் வெளி மாவ‌ட்ட‌த்திலிருந்து கொண்டு வ‌ர‌ப்ப‌ட்டு குடியேற்றப்ப‌டுகிறார்க‌ள் என‌ முன்னாள் பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர் பிர‌பா க‌ணேச‌ன் இன‌வாத‌மாக‌ கூறியிருப்ப‌தை உல‌மா க‌ட்சி க‌டுமையாக‌ க‌ண்டித்திருப்ப‌துட‌ன்    அவ்வாறு வெளி மாவ‌ட்ட‌த்திலிருந்து வ‌ந்த‌ முஸ்லிம்க‌ளாயின் அவ‌ர்க‌ள் எந்த‌ மாவ‌ட்ட‌த்திலிருந்து வ‌ந்த‌வ‌ர்க‌ள் என்ப‌தை அந்த‌ மாவ‌ட்ட‌த்தின் கிராம‌ சேவ‌க‌ரின் அத்தாட்சியுட‌ன் நிரூபிக்க‌ முடியுமா என‌வும் ச‌வால் விடுத்துள்ள‌து.

இது ப‌ற்றி உல‌மா க‌ட்சியின் த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்த‌தாவ‌து,

பிர‌பா க‌ணேச‌ன் த‌ன‌து வாக்கு வ‌ங்கியை அதிக‌ரித்துக்கொள்வ‌த‌ற்காக‌ அடிக்க‌டி முஸ்லிம்க‌ளுகெதிரான‌ இன‌வாத‌ க‌ருத்துக்க‌ளை முன் வைத்து வ‌ருகிறார்.

வ‌ட‌மாகாண‌த்தை சேர்ந்த‌ முஸ்லிம் அமைச்ச‌ர்க‌ள் த‌ம‌து முஸ்லிம் வாக்குக‌ளை அதிக‌ரிப்ப‌த‌ற்காக‌ வெளிமாவ‌ட்ட‌த்து முஸ்லிம்க‌ளை குடியேற்றுகிறார்க‌ள் என்ப‌த‌ன் மூல‌ம் இவ‌ர் அமைச்ச‌ர் ரிசாத் ப‌தியுதீனை குறி வைத்துள்ளார்.

நாய்க்கு எங்கு அடிப‌ட்டாலும் காலை தூக்கிக்கொண்டு க‌த்துவ‌து போல் இன‌வாதிக‌ள் ப‌ல‌ருக்கு ரிசாத் ப‌தியுதீன் மீது குற்ற‌ம் சாட்டுவ‌தே வ‌ழ‌க்க‌மாகிவிட்ட‌து.

பிர‌பா க‌ணேச‌னின் இக்கூற்றான‌து இதுவெல்லாம் தெரியாம‌ல் அர‌சு இருக்கின்ற‌தா என்ற‌ ரீதியில்  அர‌சாங்க‌த்தை கேவ‌ல‌ப்ப‌டித்துகின்ற வார்த்தை பிர‌யோக‌ம் என்ப‌து ம‌ட்டும‌ல்ல‌ நாட்டின் அர‌ச‌ நிர்வாக‌ம் ப‌ற்றிய‌ இவ‌ரின் அறிவ‌ற்ற‌ பேச்சுமாகும். 

ஒருவ‌ர் த‌ன‌து மாவ‌ட்ட‌த்திலிருந்து இன்னொரு மாவ‌ட்ட‌த்துக்கு சென்று குடியேறும் போது அவ‌ர் முன்பு வாழ்ந்த‌ மாவ‌ட்ட‌த்தின் ஊரில் உள்ள‌ கிராம‌ சேவ‌க‌ரிட‌மிருந்து அத்தாட்சி க‌டித‌ம் பெற்றே புதிய‌ கிராம‌ சேவ‌க‌ரிட‌ம் ப‌திய‌ முடியும் என்ற‌ ச‌ட்ட‌ம் கூட‌ தெரியாத‌ சிறு பிள்ளையாக‌ பிர‌பா க‌ணேச‌ன் இருக்கின்றார்.

அது ம‌ட்டும‌ல்லாம‌ல் முன்ன‌ர் இருந்த‌ ப‌குதியில் வாக்காள‌ராக‌ ப‌திந்திருந்தால் புதிய‌ ப‌குதியின் வாக்காள‌ராக‌ ப‌திய‌ வேண்டுமாயின் முன்பிருந்த‌ வாக்காள‌ர் ப‌ட்டிய‌லில் த‌ம‌து பெய‌ரை நீக்கிய‌பின்பே புதிய‌ மாவ‌ட்ட‌த்தின் வாக்காள‌ராக‌ ப‌திய‌ முடியும். 

அந்த‌ வ‌கையில் ஏற்க‌ன‌வே வ‌ட‌க்கில் வாழ்ந்து புலிக‌ளினால் அனைத்தும் கொள்ளைய‌டிக்க‌ப்ப‌ட்டு வெளியேற்ற‌ப்ப‌ட்டு அக‌திக‌ளாகி வெளி மாவ‌ட்ட‌ங்க‌ளில் த‌ங்கிய‌ முஸ்லிம் குடும்ப‌ங்க‌ளை சேர்ந்தோர் அல்லாத‌ வெளிமாவ‌ட்ட‌த்திலிருந்து முஸ்லிம்க‌ள் வ‌ன்னிக்கு அமைச்ச‌ரினால் கொண்டு வ‌ர‌ப்ப‌ட்டிருந்தால்   நிச்ச‌ய‌ம் அவ‌ர்க‌ள் ப‌ற்றி கிராம‌ அலுவ‌ல‌ர்க‌ளிட‌மும் தேர்த‌ல் திணைக்க‌ள‌த்திலும் த‌க‌வ‌ல் இருக்கும் என்ப‌தால் அவ்வாறு அக‌திக‌ள் குடும்ப‌ம் அல்லாத‌ வேறு யார் அமைச்ச‌ரால் குடியேற்ற‌ப்ப‌ட்டுள்ளார் என்ப‌தை பிர‌பா க‌ணேச‌ன் ப‌கிர‌ங்க‌மாக‌ நிரூபிப்பாரா என்று சவால் விடுகிறோம்.

பிர‌பா க‌ணேச‌னின் குடும்ப‌ம் கூட‌ ம‌லைய‌க‌த்திலிருந்து   கொழும்பு மாவ‌ட்ட‌த்தில்  குடியேறிய‌வ‌ர்க‌ள்தான் என்ப‌தை அவ‌ர் ம‌ற‌க்க‌ கூடாது. ஒருவ‌ர் எந்த‌ மாவ‌ட்ட‌த்திலும் குடியேறி வாழ‌ நாட்டின்  ச‌ட்ட‌ம் இட‌ம் கொடுக்கிற‌து. ஆனால் ப‌லாத்கார‌மாக‌ குடியேற்ற‌ம் ந‌ட‌க்குமாயின் இல‌குவாக‌ அத‌னை நிரூபிக்க‌ முடியும் என்ப‌தால் பிர‌பா இவ‌ற்றை ஒரு மாத‌ கால‌த்துள்  ப‌கிர‌ங்க‌மாக‌  நிரூபிக்க‌ வேண்டும் அல்ல‌து த‌ன‌து இன‌வாத‌ அறிக்கைக்காக‌ முஸ்லிம்க‌ளிட‌ம்  ப‌கிர‌ங்க‌மாக‌ ம‌ன்னிப்பு கேட்க‌ வேண்டும் என‌ உல‌மா க‌ட்சி கேட்டுக்கொள்கிற‌து.

7 கருத்துரைகள்:

Praba ganesan is 100 right. There are 100thousa ds of muslim settlements must ve evacuated

மனோ கணேசன் கருத்து உண்மையானது.

புலிகளால்வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் அணைவரும் ஏற்கனவே NPC யால் குடியேற்ற பட்டுவிட்டார்கள்.

மெளலவி உங்கள் கருத்து முற்றிலும் உண்மை.

He is racist politician. He should prove it before saying it. MR is really great for putting an end to terrorism in the country. Now there are many racists.

அரசியலில் தன் அன்னநிற்க்கே முதுகில் குத்தியவன் தேவையேற்பட்டால் நாளை தன் வீட்டு பெண்களையே கூட்டியும் கொடுப்பான் தமிழனை பயங்கரவாதியென்றும் சொல்வான்

Tiger terrorists and racists are still alive.. we should be alert..

Post a Comment