Header Ads



தலதா அத்துகோரளவின் சபதம்

எப்படியான எதிர்ப்புகளை வெளியிட்டாலும் ஒழுங்கு முறைப்படி செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமே அன்றி அதில் மாற்றங்களை செய்ய முடியாது என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

வெலிகடை சிறைச்சாலையில் பெண் கைதிகள் கூரை மீது ஏறி ஆர்ப்பாட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளமை தொடர்பில் இரத்தினபுரி, நிவித்திகலை, துத்திரிபிட்டிகம பாலத்திற்கு அடிக்கல் நாட்டிய பின்னர், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

“ கூரை மீது அல்ல எதில் ஏறினாலும் தற்போது முன்னெடுக்கப்படும் ஒழுங்கு முறைக்கு அமைய செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும். அதில் மாற்றங்களை செய்ய முடியாது.

எவருக்கும் ஆர்ப்பாட்டங்களை நடத்தும் உரிமை நாட்டில் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டங்களை நடத்தினால், முன்புபோல் துப்பாக்கிச் சூடு நடத்தப்படுவதில்லை.

சிறைச்சாலைகளுக்குள் இன்னும் சட்டவிரோத வேலைகள் நடைபெறுகின்றன என்பதை அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். இதனை நான் எப்படியாவது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவேன்” என அமைச்சர் தலதா அத்துகோரள குறிப்பிட்டுள்ளார்.

4 comments:

  1. உங்கள் பேச்சுக்கும் அமைச்சுக்கும் உள்ள மதிப்பை,  ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது  போன்று, ஞானசாரை விடயத்தில் நீங்கள் நடந்துகொள்வதன் ஊடாகவே  மக்கள் எடைபோடுவர்.

    ReplyDelete
  2. இது முக்கியமான ஒரு செய்தி தான் நீதி அமைச்சரின் அவ்வாறு தப்பி தவறியோ கடும்போக்கு தீவிரவாத ஞானசார என்பவனுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு கொடுப்பானால் இந்த பெண் சிறை கைதிகளுக்கும் கொடுக்க வேண்டும்.

    ReplyDelete
  3. mr bullbullli adu vera idu vera ivan sami yallava hhhhhhhhh

    ReplyDelete
  4. Wait and See what is going to happen.

    ReplyDelete

Powered by Blogger.