Header Ads



இந்தோனேசியாவிலிருந்து A/L பரீட்சையை, எழுதவுள்ள இலங்கை மாணவன்


நாடளாவிய ரீதியில் தற்போது க.பொ.த உயர்தரப் பரீட்சை  நடைபெற்றுவரும் நிலையில், இலங்கை மாணவன் ஒருவனுக்கு வெளிநாட்டில் இருந்து பரீட்சை எழுதுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளமை வரலாற்றில் இதுவே முதல் தடவையாகுமென, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

சென். பீற்றர் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் அகலங்க பீரிஸ் என்ற நீச்சல் வீரரான குறித்த மாணவன்,  ஆசிய விளையாட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக இந்தோனேசியா செல்லவுள்ள நிலையில், இம் முறை உயர்தரப் பரீட்சையில் 3 பாடங்களுக்கு அவர் அங்கிருந்தே தோற்றவுள்ளார் என அறிய முடிகிறது.

எதிர்வரும் 18 ஆம் திகதி தொடக்கம் 23 ஆம் திகதி வரை, இந்தோனேசியாவின் ஜகர்த்தா நகரில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு விழாவில் நீச்சல் போட்டியில் பங்குபற்றுவதற்காக அகலங்க பீரிஸ் இன்று (15), இந்தோனேசியா பயணமாகிறார்.

இதற்கமைய, பொது ஆங்கிலம், பொது பரிசோதனை மற்றும் கணக்கியல் ஆகிய பாடப் பரீட்சைகளுக்கு அகலங்க பீரிஸ் தோற்றவிருக்கிறார்.

பரீட்சை கண்காணிப்பு நடவடிக்கைக்காக  அதிகாரிகள் இருவர் அகலங்க பீரிஸூடன் இந்தோனேசியா செல்லவுள்ளனர். அத்தோடு இந்தோனேசியாவிலுள்ள இலங்கைக்கான உயர்ஸ்தானிகரகமும், பரீட்சை நடத்துவதற்கான ஒத்துழைப்புகளை வழங்கவுள்ளது.

பரீட்சையை இரகசியமானமுறையில்  நம் நாட்டு நேரப்படி நடத்த தீர்மானிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.