Header Ads



A/L பரீட்சைக்கு தோற்றிய 79 வயது முதியவர்

இலங்கையில் 79 வயதான முதியவர் ஒருவர் இம்முறை க.பொ.த. உயர்தர பரீட்சை எழுதியுள்ளார்.

சட்டத்தரணியாகும் கனவில் 79 வயதான டியுடர் முனசிங்க உயர்தர பரீட்சை எழுதி, மாணவர்களை மட்டுமன்றி பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருப்பதற்கு கல்வி மிகவும் முக்கிய விடயம் என டியுடர் முனசிங்க தெரிவித்துள்ளார்.

களனி, லுவிஸ் மாவத்தையை சேர்ந்தவரே சட்டத்தரணியாகும் எதிர்பார்ப்பில் உயர்தர பரீட்சைக்கு முகம் கொடுத்துள்ளார்.

கடந்த 2017ஆம் ஆண்டு கலை பிரிவில் உயர்தர பரீட்சை எழுதிய அவர் இரண்டு பாடங்களில் சித்தியடைந்தார். எனினும் அவரின் முயற்சியை கைவிடாமல் நன்கு கல்வி கற்று இம்முறையும் உயர்தர பரீட்சைக்கு முகம் கொடுத்துள்ளார்.

தனது வாழ்க்கை குறித்து கூறிய முனசிங்க,

வெலிகன்ன கிராமத்தில் பிறந்தேன். அந்த பகுதியில் உள்ள பாடசாலையில் நான் ஆரம்ப கல்வியை கற்றேன். களுத்துறை, மத்துகம வீதி லேவன்துவ மகா வித்தியாலயத்தில் சாதாரண தர பரீட்சை எழுதினேன். உயர்தர பரீட்சை எழுதுவது கனவாகவே இருந்தது. அதற்கு முயற்சிகளிலேயே இருந்தேன்.

இம்முறை நான்கு பாடங்களிலும் சித்தி பெறுவதற்காக கடினமாக கற்றேன். ஆங்கிலம் கட்டயாப்பாடமாகும். ஆங்கில மொழி மற்றும் இலக்கியம், அரசியல் அறிவியல் மற்றும் இந்திய வரலாறு ஆகிய 3 பாடங்களையும் தெரிவு செய்து இம்முறை பரீட்சைக்கு முகம் கொடுத்துள்ளேன். சட்டத்தரணியாகுவதே என மிகப்பெரிய எதிர்பார்ப்பாகும். அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றி கொள்வதற்கு நான் உயர்தரத்தில் சித்தியடைவது கட்டாயமாகும். இதனாலேயே இந்த முயற்சியை எடுத்துள்ளேன்.

நான் 1939ஆம் ஆண்டு 12ஆம் மாதம் 6ஆம் திகதி பிறந்தேன். எனக்கு 4 பிள்ளைகள் உள்ளனர். எனது மூத்த மகள் பல்கலைக்கழக விரிவுரையாளராக செயற்படுகின்றார். இரண்டாவது மகள் உள்நாட்டு வருவாய் திணைக்களத்தில் பணியாற்றுகின்றார். மூன்றாவது மகன் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் முகாமையாளராக செயற்படுகின்றார். கடைசி மகன் வெளிநாட்டில் ஹொட்டல் துறையில் முக்கிய அதிகாரியாக செயற்படுகின்றார்.

கடந்த 7 வருடங்களுக்கு முன்னர் எனது மனைவி உயிரிழந்தார். அதனாலேயே நான் கல்வி வெற்றி பெற முயற்சிக்கின்றேன்...” என முனசிங்க குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. Wonderful thinking and it is a great guidance to the younger generation... thanks Mr. Munasinghe

    ReplyDelete

Powered by Blogger.