Header Ads



ஜனாஸா தொழுகை நடாத்திய 7 ஆம் வகுப்பு மாணவனும், மக்தப் மத்ரசாவின் அவசியமும்...!!

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா  நடாத்தி வரும் மக்தப் நிகழ்ச்சி திட்டத்தின் ஊடாக பல்வேறு மாற்றங்களை சமூகத்தில் ஏற்படுத்தி வருகிறது அல்ஹம்துலில்லாஹ்.

இந்த வகையில் தனது பெற்றோரின் ஜனாஸா தொழுகையைக் கூட முன்நின்று நடாத்த முடியாத,மூன்றாம் தக்பீரில் மரணித்தவருக்காக செய்ய வேண்டிய நீண்ட துஆ பாடம் இல்லாத சமூகமாகமாவே நம்மில் அதிகமானவர்கள் வாழ்ந்துவருகின்றனர்

பள்ளிவாசலின் இமாம். அல்லது மௌலவி, ஹாபிஸ் என பலரை ஜனாஸா தொழுகைக்கு இமாமத் செய்ய  தேடும் நிலையை விட பிள்ளைகள் முன்நின்று தொழுகை நடாத்துவது சிறந்த விடயமாகும்..

கடந்த 2018.8.7ம் திகதி மரணித்த தனது தாயின் தாயின் ஜனாஸா தொழுகையை மாவடிப்பள்ளி ஜும்ஆ பள்ளிவாசலில் அஸர் தொழுகையின் பின்னர் தரம் 7ல் கல்விகற்கும் மக்தப் புர்காணிய்யா மாணவன் (6ம் கிதாப்) முன்நின்று இமாமத் செய்தது அனைவரினதும் உள்ளத்தை கவர்ந்ததுள்ளது. 

4 உலாமாக்கள், குடும்பத்தினர், பொது மக்கள் என பலர் பின்னால் மஃமூமாக நிற்க தைரியாமாக அந்த மாணவன் தொழுகை நாடாத்தினான்.

மக்தபில் துஆ எதற்கு? தொழுகை முறை எதற்கு?? இதல்லாம் தேவைதானா??? குர்ஆன் ஒதினால் மட்டும் போதும்தானே என்ற கீழ்த்தரமான விமர்சனங்களுக்கு இது சிறந்த பதிலாக அமையும்.

மக்தபின் வருடாந்த விழாவின் போது நாடகமாக ஒருவர் மரணித்ததில் இருந்து அடக்கம் செய்யப்படும் வரையான நிகழ்வுகளை அவ்வகுப்பு மாணவர்கள் ஏற்கனவே செய்திருந்தனர் ...

அந்நாடகத்தில் இன்ஸா அல்லாஹ் எங்களது தாய்,தந்தை மரணித்தால் நாங்கள் தொழுகை நடாத்துவோம் என்று அந்த மாணவன் கூறிய பிரகாரம் அதை செய்துகாட்டினான்..அல்ஹம்துலில்லாஹ்..

இந்நிலைக்கு இப்பிள்ளையை உருவாக்கிய அகில இலங்கை ஜம்ய்யத்துல் உலமா சபைக்கும், மாவடிப்பள்ளி நம்பிக்கையாளர் சபைக்கும்,பெற்றோர்களுக்கும் இதயம் நிறைந்த நன்றிகள்...

மௌலவி A.J.அஸ்ரப் (பலாஹி)
மக்தப்  புர்காணிய்யா.
மாவடிப்பள்ளி

5 comments:

  1. Some maktab kids are now speaking arabic and they know the tarjuma of quaran ( Small surahs ).
    surprise to see jaffna muslims publishing an article which supports ACJU. ☺

    ReplyDelete
  2. உண்மையில் வரவேற்கக் கூடிய விடயம்... இப்படியான மார்க்க கல்விதான் எமது சமூகத்திற்கு மிகவும் அத்தியவசியமானது.. ஆனால் மக்தப் கல்வி எல்லா இடங்களிலும் சிறந்த தரத்தில் உள்ளதா?? மக்தப் வகுப்புக்களை நடாத்தும் உலமாக்கள் எல்லோரும் இவ்வாறான பயிற்சிகளை வழங்குகிறார்களா? என்றால் இல்லை என்றுதான் கூறமுடியும்..

    சில இடங்களில் சாராண டியுசன் வகுப்புக்கள் போலதான் மக்தப் வகுப்புக்களும் இடம்பெறுகின்றன.. அங்கு சில பிள்ளைகளுக்கு அல்-குர்ஆனைக் கூட சரியாக ஓத முடிவதில்லை..

    எனவே இது போன்ற முன்னுதாரணங்களை வைத்து சகல மக்தப் வகுப்புக்களை நடாத்தும் உலமாக்களும் சிறந்த மார்க்க அறிவுள்ள சந்ததியினரை உருவாக்க உறுதிபூண வேண்டும்.

    ReplyDelete
  3. இக்கல்வி திட்டத்தை பாடசாலை மட்டங்களிலும் கொண்டு வரவேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.