Header Ads



பேஸ்புக்கில் கவிதை பதிவிட்ட, சகோதரிக்கு 5 மாத சிறை - இஸ்ரேல் அடாவடி


பேஸ்புக்கில் பதிவிட்ட கவிதை ஒன்றுக்காக பலஸ்தீன பெண் கவிஞர் தாரீம் டடூருக்கு இஸ்ரேல் நீதிமன்றம் ஐந்து மாத சிறை தண்டனை விதித்துள்ளது.

இஸ்ரேலிய பிரஜையான 36 வயது டடூர் செவ்வாய்க்கிழமை நசரெத் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவருக்கு இந்த சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் அவர் ஏற்கனவே மூன்று ஆண்டுகள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இஸ்ரேலிய துருப்புகளுக்கும் பலஸ்தீனர்களுக்கும் இடையிலான மோதல்களை காட்டும் வீடியோவுடன் தனது கவிதையை வெளியிட்ட அந்த பெண் கவிஞர் பயங்கரவாதத்தை தூண்டியதாக கடந்த மே மாதம் குற்றங்காணப்பட்டார்.

எனினும் இந்த தீர்ப்பைக் கண்டு தான் அதிர்ச்சி அடையவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

“போராடு, எமது மக்களே அவர்களுக்கு எதிராக பேராடு” என்ற தலைப்பில் கவிதை ஒன்றை வெளியிட்ட தாரீம் டடூர் 2015 ஒக்டோபரில் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து பல மாதங்கள் சிறையில் இருந்த அவர் விடுவிக்கப்பட்ட பின் 2016 ஜனவரி தொடக்கம் வீட்டுக் காவலில் இருந்து வருகிறார்.

No comments

Powered by Blogger.