Header Ads



பராக்கிரமபாகு மன்னனின் அமைச்சரவையில் 4 முஸ்லிம்கள் அமைச்சர்களாக இருந்திருக்கின்றார்கள் - ஹிஸ்புல்லாஹ்

1050 வருடங்களுக்கு முன்னர் பராக்கிரமபாகு மன்னன் இந்த நாட்டை ஆட்சி செய்தபோது அவரது அமைச்சரவையிலே 16 அமைச்சர்கள் இருந்திருக்கிறார்கள் அதிலே நான்கு பேர் முஸ்லிம்கள் இருந்திருக்கிறார்கள் இந்த வரலாற்றை யாரும் மறைக்கவும் முடியாது மறுக்கவும் என இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

மருதமுனை ஷாஹூல் ஹமிது ஷாஜஹான் எழுதிய கண்டி இராச்சியத்தின் சுதந்திரத்திற்காக 1804ஆம் ஆண்டில் போராடி உயிர்நீத்த மருதமுனையைச் சேர்ந்த 'அனிஸ் லெப்பையின் வரலாறு' நூல் வெளியீடு சனிக்கிழமை(25-08-2018)மருதமுனை அல்-மதீனா வித்தியாலய மண்டபத்தில்இங்கு பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பதில் நீதிபதியும்,சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஏ.எம்.பதறுத்தீன் தலைமையில் நடைபெற்ற இந்த நூல் வெளியீட்டு விழாவில் இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நூலின் முதல் பிரதியை நூலாசிரியரிடமிருந்து பெற்றுக்கொண்டார்.இங்கு முன்னாள் உயர் கல்வி பிரதியமைச்சர் மயோன் முஸ்தபா,உலமா கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் உள்ளீட்ட பலர் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.

இராஜாங்க அமைச்சர் இங்க மேலும் உரையாற்றுகையில் :-அனிஸ் லெப்பையின் வரலாற்றை ஷாஹூல் ஹமிது ஷாஜஹான்  நூலாக வெளிக் கொண்டு வந்திருப்பது ஒரு முக்கிய அம்சமாகும்.எமது சமூகத்தில் இருக்கின்ற பெரிய பிரச்சினை எமது வரலாறுகளைத் தொலைத்துவிடுவது.முஸ்லிம் சமூகம் எங்களுடைய  வரலாற்றை பாதுகாப்பதற்கு தவறிவிட்டோம்.அதனால் அமைச்சர் சம்பிக்க ரணவக்க பத்து ஆண்டுகளுக்கு முன்பே தனது நூலிலே முஸ்லிம்களுக்கு நூறு வருட வரலாறு கூடக்கிடையாது என்று குறிப்பிட்டிருக்கின்றார்.

பேராசிரியர் வித்தியாராச்சி கூட தனது உரையிலே முஸ்லிம்களுக்கு நூறு வருட வரலாறு கூடக்கிடையாது ஆகவே அவர்கள் இந்த நாட்டிலே வாழமுடியும் உரிமைகேட்க முடியாது என்று அருடைய உரையொன்றிலே சொல்லியிருக்கின்றார்.அதே போன்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க அடிக்கடி தனது உரைகளிலே குறிப்பிட்டு வருகின்றார்.

முஸ்லிம்களின் வரலாறு தொடர்பில் சிங்கள பௌத்த மக்களை குறை சொல்ல முடியாது அவர்களுக்கு முஸ்லிம்களின் வரலாறு தெரியாது.குறிப்பாக இளம் சந்ததிக்குத் தெரியாது.பௌத்த வரலாறு கண்டியிலே நூதனசாலை அமைக்கப்பட்டு கிட்டத்தட்ட 200 வருடங்களாக பாதுகாக்கப்பட்டு வருகின்றது.பௌத்த மக்கள் இலங்கையில் 2500 வருடங்களாக வாழ்ந்து வருகின்ற வரலாறு பதியப்பட்டிருக்கின்றது.

அதேபோன்றுதான் யாழ்ப்பாணம் நல்லூரிலே தமிழ்மக்களின் வரலாற்றைச் சொல்கின்ற நூதனசாலை இருக்கின்றது.அங்கு தமிழ் மக்கள் கிட்டத்தட்ட2000 ஆண்டுகளாக வாழ்ந்த ஆட்சிசெய்த வரலாறுகள் பதியப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றது.துரதிஷ்ட வசமாக நமது முஸ்லிம் சமூகம் முஸ்லிம்களுடைய வாழ்க்கை வரலாற்றைப் பாதுகாக்கத்தவறிவிட்டனர்.


ஆகவேதான் ஏதாவது ஒரு இடத்திலே முஸ்லிம்களுடைய வரலாறு பாதுகாக்கப்;பட வேண்டும் என்று தீர்மானித்து பல கஷ்டங்கள் சிரமங்கள் துன்பங்கள் பட்டு முஸ்லிம்கள் இந்த நாட்டிலே 1000 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து ஆட்சிசெய்து வருகின்றார்கள் என்ற வரலாற்றை அடையளங்கண்டு பல பேராசிரியர்கள் ஊடாக அதனை உறுதிப்படுத்தி காத்தான்குடியில் நூதனசாலையாக உருவாக்கி வைத்திருக்கின்றோம்.

இந்த சந்தர்ப்பத்திலே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நன்றி சொல்ல வேண்டும் அவர்தான் முஸ்லிம்களுக்கான இந்த நூதன சாலையை அமைப்பதற்கு அங்கீகாரம் தந்து அதற்கான நிதியாக 200மில்லியன் ரூபாய்களையும் ஒதுக்கித்தந்தவர்.அமைச்சரவைப் பத்திரத்தையும் சமர்ப்பித்து அமைச்சரவை அதை அரசாங்கத்தின் நூதன சாலையாக அங்கீகரித்து இலங்கை தொல்பொருள் திணைக்களத்திடம் ஒப்படைத்து அது தொல்பொருள் திணைக்களத்தின் நூதனசாலையாக மாற்றியவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷதான்.

அப்போழுது எல்லாவல மித்தானநதத்தேரர்.அவர் தொல்nhருள் திணைக்ளத்தின் சக்கரவத்தி தொல்nhருள் பற்றி அதிகம் படித்தவர்.அவர் வந்த கடுமையாக வாதிட்டார்.அப்போது தொல்பொருள் திணைக்களங்களுக்கு அமைச்சராக இருந்த ஜகத் பாலசூரிய ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்தார் அதற்கு என்னையும் அழைத்திருந்தார்கள் அந்தக் கூட்டத்திற்கு எல்லாவல  மித்தானநதத்தேரரும் வந்திருந்தார் அவர் அங்கு கடுமையாக வாதிட்டார் இது எல்லாம் பொய் முஸ்லிம்களுக்கு இலங்கையில் எந்த வரலாறும் கிடையாது இதை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று.

நான் அவர்களுக்குச் சொன்னேன் இருக்கின்ற ஆவணங்களை விசாரித்து ஆராயுங்கள் ஆறு மாதம் காலம் தருகின்றேன்.நீங்கள் சரியென்று சொன்னால் எற்றுக்கொள்வோம் பிழையென்று சொன்னால் நீக்கிவிடுவோம் நூதன சாலை அமைத்து ஆறு மாதங்கள் மூடப்பட்டுவிட்டது.அதன் பின்னர் பொரசிரியர்கள் பலர் வந்து அய்வு செய்தார்கள் குறிப்பாக நான் ஒரு அவணத்தைக் கொடுத்திருந்தேன்.

1050 வருடங்களுக்கு முன்னர் பராக்கிரமபாகு மன்னன் இந்த நாட்டை ஆட்சி செய்தபோது அவரது அமைச்சரவையிலே 16 அமைச்சர்கள் இருந்திருக்கிறார்கள் அதிலே நான்கு பேர் முஸ்லிம்கள் இருந்திருக்கிறார்கள் விவசாய அமைச்சர்,வர்த்தக அமைச்சர்,வெளிநாட்டு அமைச்சர்.சுகாதார அமைச்சர் என நான்கு முஸ்லிம்கள் இருந்திருக்கின்றார்கள்.அந்த அமைச்ரவையிலே முஸ்லிம்கள் மட்டும்தான் தலையிலே தொப்பியணிந்து மேலாடை அணித்து சப்பாத்தும் அணிந்த செல்ல முடியும் வேறுயாரும் மன்னருக்கு முன்னால் இவ்வாறு செல்ல முடியாது.அந்த ஆதாரத்தைத் தேடிக்கண்டு பிடித்தேன்.

இந்த ஆவணங்கள் எல்லாவற்றையும் ஆராய்ந்த பின்னர்தான் எல்லாவணங்களையும் சரியென்று தொல்பொருள் திணைக்களம் ஏற்றுக் கொண்டது.இதன்பின்னர்தான் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த நூதன சாலையை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.இப்போது காத்தான்குடியிலே இரக்கின்ற இந்த நூலகம் அரசாங்கச் சொத்தாகும்.எனத் தெரிவித்தார்.

6 comments:

  1. (நபியே!) இன்னும், “சத்தியம் வந்தது; அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியமானது அழிந்து போவதேயாகும்” என்று கூறுவீராக.
    (அல்குர்ஆன் : 17:81)
    www.tamililquran.com

    ReplyDelete
  2. Well done by t minister 4 t muslims of SL.

    ReplyDelete
  3. We highly appreciated your hard work, till our community do not know the worth of this.

    ReplyDelete
  4. இலங்கையின் அதிகாரபூர்வ வரலாற்று நூலான மகாவம்சத்தின் படி முஸ்லிம்கள் இலங்கைக்கு வந்ததே 350 ஆண்டுகளுக்கு முன்னர் தான். இது பாடப்புத்திலேயே உள்ளதே.


    ReplyDelete
  5. Ajan இஸ்லாம் இலங்கைக்கு வருவதற்கு முன்பே சோனகர் இலங்கையில் வாழ்ந்த வரலாறு உண்டு. மாகாவம்சம் சொல்கிறது ஆரியர்கள் இலங்கைக்கு வந்த போது இலங்கையில் இயக்கர் நாகர் சோனகர் என தமிழ்சமூகங்கள் வாழ்ந்ததாகவும் இன்னொறு இடத்தில் சோனகருடன் ஒற்றுமையாக வாழ்ந்ததாகவும் 2500 வருட பழமைவாய்ந்த மகாவம்சம் சொல்கிறது. திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் கோயிலில் பிறசமூக பெயர்களுடன் ஈழம் மற்றும் சோனகர் பெயர்களும் பதியப்பட்டுள்ளன! காயல்பட்டினத்தில் பழைய பெயர் சோனகபட்டினமாகும்.

    ReplyDelete
  6. Great Sir
    Please work more for our community.

    ReplyDelete

Powered by Blogger.