Header Ads



தண்ணீர் கேட்டு அழும், 2 வயது குழந்தை - வினோத நோயினால் பாதிப்பு

பாலுக்கு அழும் குழந்தைகளைப் பற்றியே நாம் அதிகம் கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் தண்ணீர் கேட்டு அழும் குழந்தை பற்றிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

கண்டி மாவட்டத்தில் மினிபே பிரதேசத்தைச் சேர்ந்த 2 வயதும் 3 மாதங்களான குழந்தைக்கே இந்த வினோத நோய் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நெதுல் என்ற இந்த சிறுவன் தனது உடம்பிலுள்ள வெப்பத்தை தணிப்பதற்காக தண்ணீர் தொடர்ந்து கேட்டு அழுவதாக தெரிவிக்கப்படுகிறது.

எக்டோடர்மல் டிஸ்ப்லேசியா என்ற நோயினாலே இந்த சிறுவன் பாதிக்கப்பட்டுள்ளார். உலகளாவிய ரீதியில் சுமார் 7000 பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 150 க்கும் மேற்பட்ட அறிகுறிகள் காணப்படும் எனவும் முடி, பற்கள் மற்றும் நகங்கள் அசாதாரண நிலையில் காணப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சிறுவனின் உடலில் வியர்வை சுரப்பிகள் இல்லாமையினால் உடலின் வெப்பநிலை காரணமாக சிறுவனுக்கு அதிக நீர் தேவைப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

வாழ்நாள் முழுவதும் இந்த சிறிய நெதுலுக்கு சிகிச்சை தேவை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

No comments

Powered by Blogger.