Header Ads



24 ஆம் திகதி, முஸ்லிம்களுக்கு காத்திருக்கும் ஆபத்து


எல்லை நிர்ணய அறிக்கையை நாடாளுமன்றம் இந்த மாதம் அங்கீகரித்தால், ஆறு மாகாண சபைகளுக்கான தேர்தலை எதிர்வரும் 2019 ஜனவரி மாதம் நடத்த முடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

மாகாண சபைத் தேர்தல் தொகுதிகள் தொடர்பான எல்லை வரம்பு அறிக்கை எதிர்வரும் 24ஆம் நாள் நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்த நிலையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அதேவேளை, நேற்று நாடாளுமன்றக் கட்ட்டத் தொகுதியில் நடந்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 

மாகாண சபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டத்தையும், எல்லை நிர்ணய அறிக்கையையும் நாடாளுமன்றம் அங்கீகரித்தால் மாத்திரமே, அடுத்த ஆண்டு ஜனவரியில் மாகாண சபைகளுக்கான  தேர்தலை நடத்த முடியும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த எல்லை நிர்ணய அறிக்கையானது முஸ்லிம் பிரசேங்களை கூறுபோடும் வகையில் அமைந்திருப்பதாக ஏற்கனவே பலத்த கண்டனங்கள் வெளியாகியிருந்தன. அத்துடன் இதனடிப்படையில் தேர்தல் நடத்தினால் முஸ்லிம் பிரதிநிதித்துவம் பாதியாக குறையுமெனவும் கவலை வெளியிடப்பட்டிருந்தது.

அத்துடன் புதிய முறையில் தேர்தலை நடத்துவதற்கு பாராளுமன்றம் அங்கீகரித்தால் முஸ்லிம் பிரதிநிதித்துவம் இன்னும்இன்னும் குறையும் துர்ப்பாக்கியNமு ஏற்படும்.

இந்நிலையில் எதிர்வரும் 24 ஆம் திகதி முஸ்லிம் சமூகத்திற்கும், முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் முக்கியத்துவமிக்க நாளாக அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.