August 12, 2018

சவுதியில் 21 ஆம் திகதியும், இலங்கையில் 22 ஆம் திகதியும் பெருநாள்


எதிர்வரும் 21 ஆம் செவ்வாய்கிழமை சவுதி அரேபியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஹஜ் பெருநாள் கொண்டாடப்படவுள்ளது.

புனித துல் ஹஜ் மாதத்திற்கான புனித தலைப்பிறை தென்பட்டுள்ளமையினால் இம்மாதம் 22 ஆம் திகதி புனித ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட உள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் தெரிவித்துள்ளது.

கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைக் குழு பிரதித் தலைவரின் தலைமையில் நேற்று தலைப்பிறை பார்க்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிலையில் நாட்டின் பல பாகங்களிலும் தலைப்பிறை தென்பட்டமையினால் இம்மாதம் 22 ஆம் திகதி புனித ஹஜ் பெருநாளை கொண்டாடலாம் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது,

1 கருத்துரைகள்:

பார்த்தது தலைப்பிறையா அல்லது இரண்டாம் பிறையா?

Post a Comment