Header Ads



பாங்கோசை மீது முறைப்பாடு செய்த, பௌத்த பெண்ணுக்கு 18 மாத சிறை

தனது வீட்டுக்கு அருகில் உள்ள பள்ளிவாசலில் ஒலிக்கு பாங்கு ஒலி அதிக சத்தம் கொண்டது என முறையிட்ட பெண் ஒருவருக்கு இந்தோனேசியாவில் 18 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மெதன் நகரைச் சேர்ந்த சீன பூர்வீகத்தை கொண்ட 44 வயது பெளத்த மதப் பெண்ணான அவர் இஸ்லாம் மதத்தை அவமதித்ததாக குற்றங்காணப்பட்டுள்ளார். அவரை நீதிமன்றத்தில் இருந்து கையில் விளங்கிட்டு அழைத்துச் செல்லும்போது அழுதபடி காணப்பட்டார்.

மிலியானா என்று மாத்திரம் அறியப்பட்ட அந்தப் பெண் 2016 ஆம் ஆண்டு இந்த முறைப்பாட்டை செய்ததை அடுத்து ஏற்பட்ட கலவரத்தில் டன்ஜுங் பலாங் தீவில் குறைந்தது 14 பெளத்த தேவாலயங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

இந்த தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்போவதாக மிலியானாவின் வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார். இந்த தீர்ப்பை மாற்றும்படி சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.

உலகின் மிகப்பெரிய முஸ்லிம் மக்கள் தொகை வாழும் இந்தோனேசியாவில் உள்ள சுமார் 800,000 பள்ளிவாசல்களில் வழிபாடுகள் மற்றும் நீண்ட பிரசங்கங்களுக்கு ஒலிபெருக்கியை பயன்படுத்துவதை தவிர்ப்பதற்கு 2015 ஆம் ஆண்டு பரிசீலனை ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

6 comments:

  1. இச் செய்தி உண்மையெனில்,
    தீர்ப்புக்கள் திருத்தப்படலாம்:
    கோயில்களை கொளுத்தியவர்களே
    கொடிய தண்டனைக்கு உரியவர்கள்,
    முறையாக முறைப்பாடு செய்தவரல்ல.

    ReplyDelete
  2. Thank you Mr. Suhaib Jamaldeen.

    ReplyDelete
  3. Islam doesn't teach anyone to burn the places of worship, or to kill civilians even at war. Why shouldn't the government of Indonesia punish everyone involved in the act of destruction rather than the ones went to court for what she felt was disturbing her? She has the right to express her opinion, and the law could grant her what she demanded or dismiss her case altogether. Why imprisonment?

    ReplyDelete
  4. She doesn't sound like made any mistakes. those who went ahead and rioted should be brought to books. Indonesia may be a muslim majority country that does't mean the minority can be ill treated. this applies universally.

    ReplyDelete
  5. this is unwanted news here........

    ReplyDelete

Powered by Blogger.