Header Ads



நடு இரவில் தேடுதலில் பங்கேற்று 16 பேரை, கைதுசெய்த பாலித தேவப்பெரும

பொலன்னறுவை, அங்கமடில்ல தேசிய பூங்காவில் புதையல் தோண்டிய வன ஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரி உட்பட 16 பேர் கைது செய்யப்பட்டடுள்ளனர்.

பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும, பொலிஸ் அதிகாரிகள் குழுவினருடன் நேற்று இரவு தேடல் நடவடிக்கையில் ஈடுபட்ட போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அங்கமடில்ல தேசியப் பூங்காவுக்கு அருகில் அம்பன் கங்கையில் சட்டவிரோதமாக மாணிக்ககல் அகழ்வில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலுக்கமைய, பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும, பொலிஸ் அதிகாரிகள் குழுவுடன் நேற்று இரவு 9 மணியளவில் அங்கமடில்ல தேசிய பூங்காவில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது அங்கிருந்த குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதுடன், சந்தேக நபர்கள் மாணிக்கக் கல் அகழ்விற்குப் பயன்படுத்திய பொருட்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இதேவேளை, சினிமா பாணியில் பொலிஸ் அதிகாரிகளுடன் இணைந்து அதிரடியாக செயற்பட்டமைக்காக பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெருமவை பலரும் பாராட்டி வருகின்றனர்.

No comments

Powered by Blogger.