August 25, 2018

அமைச்சர் ஹலீமின் தாராள மனசு - முகவர்களினால் ஏமாற்றப்பட்ட 15 பேருக்கு ஹஜ்செய்ய உயரிய வாய்ப்புக்கிட்டியது (படங்கள்)


2017ம் ஆண்டு ஹஜ் கடமைக்கு செல்வதற்காக தனக்கு இருந்த ஒரே ஒரு மீன் படகையும் விற்று விட்டு பணத்தை ஹஜ் முகவர் ஒருவரினால் கொடுத்து கடைசி நேரத்தில் ஏமாற்றப்பட்ட பேருவளையைச் சேர்ந்த ஒரு வயோதிபர் இம்முறை புனித ஹஜ் கடமைக்காக வந்த போது மினா கூடாரத்தில் அவரை முஸ்லிம் கலாச்சார அமைச்சர் M H அப்துல் ஹலீம் அவர்களின் பிரத்தியேக செயலாளர் அல்ஹாஜ் பாஹிம் ஹாஷிம், அமைச்சின் அதிகாரிகள் மற்றும் ஹஜ் கமிட்டி உறுப்பினர்கள் ஹாஜிகளின் நலம் விசாரிக்கச் சென்றபோது சந்தித்தனர்.

மேலும் இதுபோன்று சென்ற வருடம் இறுதிக்கட்டத்தில்சில ஹஜ் முகவர்களால் ஏமற்றப்பட்ட ஹாஜிகள் 15 பேருக்கு  முஸ்லீம் கலாச்சார அமைச்சர்  M H அப்துல் ஹலீம் அவர்களுடைய வேண்டுகோளுக்கிணங்க முஸ்லிம் கலாச்சார அமைச்சின் மூலம் பயன ஒழுங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டு அந்த 15 ஹாஜிகளுக்கும் அமைச்சினால் ஹஜ் செல்வதற்கான இலவச விமான டிக்கட் பெற்றுக் கொடுக்கப்பட்டது.


2 கருத்துரைகள்:

Post a Comment