August 21, 2018

துருக்­கிக்கு 15 பில்­லியன் டொலர்களை வழங்குகிறது கட்டார்

கட்­டாரும் துருக்கி மத்­திய வங்­கியும் பணப் பரி­மாற்ற உடன்­ப­டிக்­கை­யொன்றில் கைச்­சாத்­திட்­டுள்­ளன. டோஹா, துருக்­கிக்கு 15 பில்­லியன் அமெ­ரிக்க டொலர் நிதி­யு­தவி வழங்­கு­வ­தாக உறு­தி­ய­ளித்து பல நாட்கள் கடந்த பின்னர் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை கட்டார் மத்­திய வங்கி அவ்­வ­றி­வித்­தலை வெளி­யிட்­டது.

இரு மத்­திய வங்­கி­க­ளி­னதும் பணிப்­பா­ளர்­களால் கையொப்­ப­மி­டப்­பட்ட இவ்­வு­டன்­ப­டிக்கை இரு பக்க நாணயப் பரி­மாற்ற வழி­யினை ஏற்­ப­டுத்தும், இதன் மூலம் துருக்­கியின்  நாணயம் பல­ம­டையும்.

ஆகஸ்ட் மாத ஆரம்­பத்­தி­லி­ருந்து அமெ­ரிக்க டொல­ருக்கு எதி­ரான துருக்­கிய லீராவின் பெறு­மதி சுமார் 30 வீதம் வீழ்ச்­சி­ய­டைந்­தது. அமெ­ரிக்க மத­கு­ரு­வான அன்ரூ புருட்சன் துருக்­கியில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளமை அங்­கா­ராவின் வொஷிங்­ட­னு­ட­னான எதிர்­கால நட்­பு­ற­வினை சந்­தே­கத்­திற்­கி­ட­மாக்­கி­யுள்­ளது.

துருக்­கியில் நேரடி முத­லீ­டு­களை மேற்­கொள்­ளப்­போ­வ­தாக கட்டார் அறி­வித்­துள்­ள­மையை ஐக்­கிய அரபு அமீ­ர­கத்தின் வெளி­நாட்­ட­லு­வல்கள் இரா­ஜாங்க அமைச்சர் அன்வர் கர்காஷ் கடந்த வெள்­ளிக்­கி­ழமை கடு­மை­யாகச் சாடி­யி­ருந்தார்.

பரஸ்­பர ஒத்­து­ழைப்­பினை பலப்­ப­டுத்தும் நோக்கில் கட்டார் அமீர் 'பணி நிமித்­த­மான' விஜ­ய­மொன்றை மேற்­கொண்டு துருக்­கியை வந்­த­டைந்தார். பல்­வேறு துறை­க­ளிலும் இரு நாடு­க­ளுக்கும் இடை­யே­யான தற்­போ­துள்ள தந்­தி­ரோ­பாயப் பிணைப்­புக்­களை மேலும் விரி­வாக்­கு­வ­தற்­கான வழிவகைகள் மற்றும் இரு தரப்பு உற­வுகள் தொடர்பில் துருக்­கிய ஜனா­தி­பதி தையிப் அதுர்­கா­னுடன் ஷெய்க் தமீம் 'பிரத்­தி­யேக' சந்­திப்பில் கலந்­து­ரை­யா­டினார்.

இந்த சந்­திப்­பின்­போது துருக்­கிய நிதிச் சந்­தை­யிலும் வங்­கி­க­ளிலும் 15 பில்­லியன் அமெ­ரிக்க டொலர் நேரடி முத­லீ­டு­களை மேற்­கொள்­ளப்­போ­வ­தாக கட்டார் உறு­தி­ய­ளித்­தாக துருக்­கிய அதி­கா­ரிகள் தெரி­வித்­தனர்.

அமெ­ரிக்க டொல­ருக்கு எதி­ராக துருக்­கிய தேசிய நாண­ய­மான லீராவின் பெறு­மதி மிகக் குறைந்த பெறு­மதி நிலையில் பதி­வா­கி­யி­ருப்­ப­தி­லி­ருந்து மீள­வ­தற்கு இந்த அறி­விப்பு உதவும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.  கட்டார் முத­லீடு தொடர்பில் அறி­வித்த மறு நாள் லீராவின் பெறு­மதி நான்கு வீதத்தால் அதி­க­ரித்­தது.

துருக்­கிய இரா­ணுவத் தளத்­தி­னையும் துருக்­கியப் படை­யி­ன­ரையும் தனது மண்ணில் தொடர்ந்து வைத்திருப்பதற்காக கட்டார் வலுக்கட்டாயமாக முதலீடு செய்வதற்கான வாக்குறுதியை வழங்கியுள்ளதாக 'ஆய்வாளர்கள்' தெரிவித்ததாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவூதி அரேபியாவுக்கு நெருக்கமான ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

7 கருத்துரைகள்:

கட்டாருக்கு எதிராக பொருளாதார தடைவிதிக்க வேண்டும்

mr ajan antony appadiya sandosam valvadaram tede qatar ponavargal ellam terumbavendiyaduthan

அன்டனி உன்ர பிரபாகரன்ட சொத்தையா கொடுக்கினம்..

@saleem, அமேரிக்க-மேற்கு நாடுகளின் தலைமையின் கீழ் முழு உலகமே பயங்கரவாத்திற்கு எதிராக போராடும் போது எப்படி கட்டார் இப்படி பண உதவி செய்ய முடியும்?


Ajan, loooosup payalatam

Ajan உனக்கு முடியுமானால் அநீதி நடக்கும் போது வாய் மூடியாவது இரு. அதற்கு support பண்ணாமல் இரு .இல்லை என்றால் இறைவனின் தண்டனை உண்னையும் அழித்து உண் சந்தியையும் நடுத்தெருவில் கொண்டு வந்து விட்டு விடும்.

Post a Comment