August 13, 2018

காதி நீதி­மன்­றங்­களை தவ­றாக எடை­போடுகிறார்கள், இரவு 12 மணிக்கும் Call எடுக்கிறார்கள்

சிலர் காதி நீதி­மன்­றங்­களை தவ­றாக எடை­போட்டுக் கொண்­டி­ருக்­கி­றார்கள். எமக்குத் தேவை­யா­ன­வற்றை காதி நீதி மன்­றங்கள் மூலம் எந்த நேரத்­திலும் நொடிப் பொழுதில் சாதித்துக் கொள்­ளலாம் என்று சிலர் எண்­ணு­கின்­றார்கள். ஆனால் இது முற்­றிலும் தவ­றா­ன­தாகும். ஏனைய நீதி­மன்­றங்­களைப் போன்று காதி நீதி­மன்­றமும் ஒரு நீதி­மன்றம் என்­பதை முஸ்­லிம்கள் கவத்­திற்­கொள்ள வேண்­டு­மென்று குரு­நாகல் காதி நீதி­மன்­றத்தின் காதி நீதி­பதி பீ. எம். பாரூக் தெரி­வித்தார்.

காதி நீதி­மன்­றங்கள்  முன்­னெ­டுக்கும் செயற்­பா­டுகள் தொடர்­பாக பொது­மக்­க­ளுக்குத் தெளி­வு­ப­டுத்தும் கூட்டம் குரு­நாகல் பொத்­து­ஹெ­ரவில் காதி நீதி­மன்ற அலு­வ­ல­கத்தில் இடம் பெற்­ற­போதே அவர்  இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்து உரை­யாற்­றும்­போது,

காதி நீதி­மன்ற நீதி­ப­திகள் மார்க்­கத்­திற்கு முர­ணில்­லாத வகையில் சட்­டத்தைப் பேணி தீர்ப்­புக்­கூறக் கடமைப் பட்­டுள்­ளார்கள். அதற்­கென நடை­முறை உள்­ளது. சிலர் இரவு 12 மணிக்கும் தொலை­பேசி மூலம் தொடர்­பு­கொண்டு தம்மைச் சார்ந்து அந்­நிய பெண் ஒரு­வரை அல்­லது தாம் காத­லித்த ஒரு­வரைத் திரு­மணம் செய்ய காதி நீதி­ப­தி­யிடம் வொலி தேவை என்று அடம்­பி­டிக்­கி­றார்கள். ஆனால் அவர்கள் நினைத்­த­வாறு அது உன­டி­யாகச் செய்­யக்­கூ­டிய காரி­ய­மல்ல. வொலி தேவைப்­படும் மண­வாளி காதி நீதி­மன்­ற­மொன்றில் முதலில் முறைப்­பாடு செய்து அது தீர விசா­ரிக்­கப்­பட்டு தீர்ப்புக் கூறி­யபின் பத்து நாட்கள் கழிந்த பின்பே வொலிஅனு­மதி கொடுக்­கலாம். இந்த நிய­தியை எவ­ராலும் மீற­மு­டி­யாது.

அதே போன்று, இரண்­டா­வது அல்­லது அதற்கு மேற்­பட்ட திரு­மண­ங்கள் செய்ய விரும்­பு­வோ­ருக்கும் ஒழுங்­கு­மு­றைகள் உண்டு. அவ்­வாறு செய்ய விரும்பும் ஒருவர் தமது முதல் மனைவி வசிக்கும் பகுதி காதி நீதி­மன்றில் முறைப்­படி விண்­ணப்­பிக்க வேண்டும். அவ்­விண்­ணப்பம் காதி நீதி­ப­தி­யினால் பரி­சீ­லிக்­கப்­பட்டு ஏற்­றுக்­கொள்ளக் கூடி­ய­தாயின் அவ்­விண்­ணப்பம் அவரால் முதல் மனை­விக்கும் தானும் தனது முதல் மனைவி மற்றும் புதி­தாக திரு­மணம் செய்ய விரும்பும் மண­வாளி ஆகியோர் வாழும் பகுதி பள்­ளி­வா­சல்­க­ளுக்கும் அனுப்­பப்­பட்டு 30 நாட்கள் கழித்த பின்­னர்தான் அவர் இரண்­டா­வது அல்­லது அதற்கு மேற்­பட்ட திரு­ம­ணங்கள் செய்­வ­தற்கு அனு­மதி கொடுக்­கப்­படும்.

இவ்­வா­றின்றி தான் ஓர் ஆண் மகன் தானே, தனக்கு நான்கு திரு­ம­ணங்கள் புரி­யலாம் என்ற இறு­மாப்­புடன் நினைத்த பொழு­தெல்லாம் அவ்­வாறு செய்ய முடி­யாது. இதனை பள்ளி வாசல்­களின் நிர்­வா­கத்­தி­னர்­களும், ஜமாத்­தி­னரும் கவ­னத்திற் கொள்ள வேண்டும்.

சில முஸ்லிம் பதி­வா­ளர்கள் இதற்கு மாறாகச் செயற்­பட்டு திடீர் திரு­ம­ணங்கள் செய்து வைக்­கி­றார்கள். இது ஹரா­மாகும். இவர்கள் பற்றி எச்­ச­ரிக்­கை­யாக இருக்க வேண்டும் எனவும் முஸ்­லிம்கள் ஏனைய நீதி மன்­றங்­க­ளுக்கு கௌரவம் கொடுத்து அமை­தி­யா­கவும், மரி­யா­தை­யா­கவும் நடந்து கொள்­ளப்­ப­ழகிக் கொள்ள வேண்டும்.

எடுத்­த­வற்றுக் கெல்லாம் காதி நீதி­மன்றம் செல்­வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். அதே­போன்று ஒரு காதி நீதி­ப­தியின் தீர்ப்பைத் தன்னால் ஏற்­றுக்­கொள்ள முடி­யா­விட்டால் அது­பற்றி விமர்­சிப்­பதைத் தவிர்த்து தகுந்த கார­ணங்­க­ளுடன் காதிகள்  மேல் முறை­யீடு மன்றில் பொது­மக்கள் மேன்­மு­றை­யீடு செய்­யலாம் என்­பதை பொது­மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்றார்.

வழக்­குகள் சம்­பந்­த­மாக காதி நீதி­ப­தி­களை தனிப்­பட்ட முறையில் சந்­திப்­பதோ, தொலை­பேசி மூலம் தொடர்பு கொள்­வதோ, நன்­கொ­டைகள் வழங்­கு­வ­தற்கு முற்­ப­டு­வதோ தண்­ட­னைக்­கு­ரிய குற்­றங்­க­ளாகும். இவ்­வி­ட­யங்கள் பற்றி குரு­நாகல் நீதிப்­பி­ரிவு பள்­ளி­வா­சல்­க­ளுக்கு அறி­விக்க ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர் மேலும் தெரிவித்தார்.

-Vidivelli

0 கருத்துரைகள்:

Post a Comment