Header Ads



முஸ்லிம் தனியார் சட்ட, முரண்பாடுகளைக் களைய தீவிர முயற்சி - கொழும்பில் 110 பேர் அடங்கிய முக்கிய மாநாடு

-ARA.Fareel-

நீதி­ய­மைச்சர் தலதா அத்­து­கோ­ர­ள­விடம் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்ட திருத்த அறிக்­கையில் உள்­ள­டங்­கி­யுள்ள முன்னாள் நீதி­ய­ரசர் சலீம் மர்சூப் மற்றும் பாயிஸ்  முஸ்­தபா ஆகிய இரு தரப்­பி­ன­ருக்­கு­மி­டை­யி­லான முரண்­பா­டு­களை ஆராய்ந்து ஓர் இணக்­கப்­பாட்­டினை எய்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.பேரவை முன்­னெ­டுத்­துள்­ளது.

முன்னாள் நீதி­ய­ரசர் சலீம் மர்சூப் மற்றும் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி பாயிஸ் முஸ்­தபா ஆகிய இரு­வ­ரையும் தனித்­த­னி­யாக சந்­தித்து கலந்­து­ரை­யா­டல்­களை நடாத்­த­வுள்­ளது. இரு­த­ரப்­பி­ன­ரையும் ஓர் இணக்­கப்­பாட்­டுக்குள் கொண்­டு­வர முடி­யாது போனால் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவை முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்­டத்தில் திருத்­தங்கள் தொடர்பில் தனி­யான பரிந்­து­ரை­களை நீதி­ய­மைச்­ச­ரிடம் சமர்ப்­பிக்­க­வுள்­ள­தாக அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேர­வையின் பொதுச் செய­லாளர் சஹீட் எம்.ரிஸ்மி. ‘விடி­வெள்ளி'க்குத் தெரி­வித்தார்.

சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள அறிக்கையில் இரு­த­ரப்­பி­னரும் முரண்­பட்­டுள்ள  விட­யங்­களை ஆராய்ந்து தீர்­மானம் ஒன்­றினை எட்­டு­வ­தற்­காக எதிர்­வரும் செப்­டெம்பர்  9ஆம் திகதி கொழும்பில் முழுநாள்  மாநா­டொன்று ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. இம்­மா­நாட்டில் 50சட்­டத்­த­ர­ணிகள், 40 உல­மாக்கள் 20 புத்­தி­ஜீ­விகள் கலந்து கொள்­ள­வுள்­ளனர். இவர்கள் முரண்­பா­டான விட­யங்­களை ஆராய்ந்து தீர்­வொன்­றினை எட்­ட­வுள்­ளனர். முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில் திருத்­தங்­களை சிபா­ரிசு செய்­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்ட குழு பிள­வு­பட்டு சிபா­ரி­சு­களை முன்­வைத்­துள்­ளது. பிள­வு­பட்­டுள்ள இரு தரப்­பிலும் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேர­வையின் அங்­கத்­த­வர்கள் ஒருவர் வீதம் இடம்­பெற்­றுள்­ளனர். சலீம் மர்­சூபின் தலை­மை­யி­லான குழுவில் வை.எம்.எம்.ஏ.யின் முன்னாள் பொதுச் செய­லாளர் சட்­டத்­த­ரணி ரஸ்­மரா ஆப்­தீனும், ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி பாயிஸ் முஸ்­த­பாவின்  தலை­மை­யி­லான குழுவில் வை.எம்.எம்.ஏ.யின் முன்னாள் தேசிய தலைவர் சட்­டத்­த­ரணி நத்வி பஹா­வு­தீனும் இடம்­பெற்­றுள்­ளனர். அதனால் இரு தரப்­பி­ன­ரையும் இணக்­கப்­பாட்­டுக்குள் கொண்டு வரு­வ­தற்­கான வாய்ப்­புள்­ளது எனவும் அவர் கூறினார்.

எதிர்வரும் 9 ஆம் திகதி நடைபெறவுள்ள மாநாட்டினை நடாத்துவதற்காக அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் தேசிய தலைவர் எம்.என்.எம்.நபீல் முன்னாள் தேசிய தலைவர் கே.எம்.டீனின் தலைமையில் குழுவொன்றினை நியமித்துள்ளார்.
-Vidivelli

3 comments:

  1. The problem is how to make legal change in accordance with social changes....
    Do we agree on this ..
    Can clerics tell us what legal social changes take place and how it take place ?
    Rationale for this is very much clear ..
    Whether we like or not we see a lot of social change in life ..
    This started with time of prophet..
    Do we eat as project ate ?
    Do we travel as prophet did ?
    Do we do business as prophet did ?
    Yes moral and ethics are same but yet; some mechanism and ways changes ..
    So; changes must be some in law to accommodate social changes.
    Otherwise; some section of community will go away from Islam saying that Islam is not suitable to apply today at this time ..
    None Muslims will laugh at us ..for our backwardness in the name of Islam..
    When we say change we do not mean change in theology or Aqeeda or rituals..
    What we means is some flexible change and change in some rights of women with justice ..
    Today; ladies play big role in politics; economoc; education and all other fields.
    If some think to lock them up in house ..it is not practicable now .
    First thing what you need to do is we should teach clerics Islamic law from basic ..in light of its objectives and application in a country like ours ..
    Clerics think we could apply 100% of Islamic law ..
    Can they ?
    They need to educate in modern sciences to understand in modern context with texts

    ReplyDelete
  2. சில நாடுகளில் உள்ள சட்டத்தை போல திருமணத்திற்கு யாரும் அவசியமில்லை எப்படியும் குழந்தை பெறலாம் அதுபோல குழந்தயை வளர்பகத்திலும் வாளர்களாம் என்று மட்டும் முடிவெடுக்க வேண்டாம் வெக்கம் இல்லாத உலகில் வாழ்க்கிரோம் பழி தீர்க்கவா பர்தாவை கழட்டவா
    ஏதத்க்கு போராடுகிறார்கள் என்று விளங்குதில்லை 1000 தொழில்சார் ,பாதுகாப்புசார் ,ஒற்றுமை கருத்து முரண்பாடு பிரச்சினை இருக்க
    மத சுத்தந்திரம் உள்ள நாட்டில் உங்களுக்கு ஏன் வேண்டாத வேலை ??? 10 குருடிகளுக்காக 110 பேரா ?? பதுக்கப்புசார் பிரச்சினைகளில் சேர்ந்து முடிவெடுங்கள் நன்மையாவது கிட்டும் மார்க்கத்தை குறை காண ஆசைப்படாமல்

    ReplyDelete

Powered by Blogger.