Header Ads



மனிதாபிமானம் காத்த JAFFNA MUSLIM இணையத்திற்கு கோடி நன்றிகளும் வாழ்த்துக்களும் (படங்கள்)


அஸ்ஸலாமு அலைக்கும் 

கடந்த 03.07.2018 அன்று என்னால் சமூக ஊடகங்களூடாக ஊனமில்லாத உடலையும், மனதையும் கொண்ட ஒவ்வொருவரும் வாசியுங்கள் என்ற தலைப்பிலான ஒரு தகவலை பதிவிட்டிருந்தேன்.

அந்த தகவலை jaffna muslim இணையத்தில் பதிவிட்டிருந்தீர்கள். பின்னர் எனக்கு வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் பலர் அழைப்புக்களை மேற்கொண்டு, நான் யார் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு எனது வங்கிக்கணக்கிற்கு பணத்தை அனுப்பி இருந்தார்கள்.

வாரத்தில் இரண்டு நாட்கள் விடுமுறை என்பதால், அவ்விரு நாட்களையும் மிகக்கட்சிதாமாக குடும்பத்துடன் பயன்படுத்துவது வழக்கம். ஆனாலும் கடந்த சனி மற்றும் ஞாயிரு தினத்தை அந்த குடும்பத்துக்காக பயன்படுத்தி வெற்றி கண்டுள்ளதில் தங்களுக்கும் உரிமையுண்டு என்பதை அறியத்தருகின்றேன்.

நீண்ட நாட்களாக ஊனமுற்றிருந்த மகளை பராமரிக்கும், அந்த தாய்க்கு தண்ணீர் வசதியை பெற்றுக்கொடுத்தது மட்டுமல்லாமல், அவர்களது அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன், அந்த குடும்பத்துக்கு மாதாந்தம் 5000 ரூபாய் பணம் வழங்கவும் ஒரு சகோதரர் முன்வந்திருக்கின்றார்.

அந்த தாயுடைய துயரத்தில் பங்கெடுத்தது மட்டுமல்லாமல் நம் சகோதரி சுமையாவின் புன்னகைக்கு ஒளியூட்டியதிலும் தங்கள் இணையத்திற்கு பங்குண்டு என்பதுடன் நன்றியும் சொல்லித்தான் ஆகவேண்டும்.
செய்திகளோடு மட்டுப்படுத்தப்பட்டுள்ள ஊடகங்களுக்குள், தங்களது ஊடகம் வெளிப்படுத்திய இந்த ஒரு பதிவு, ஒரு குடும்பத்தை வாழவைக்க உதவியது போல இன்னும் பல குடும்பங்களுக்கு உதவ நீங்கள் முன்வரவேண்டும் என்பது என்னுடைய எதிர்பார்ப்பாகும்.

கொடுப்பதை சரியாக கொண்டுசேர்க்க என்னால் முடியும். ஆனாலும் கொடுக்க உதவும் தகவலை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் மகத்தான பணியை நீங்கள் செய்தால், இன்னும் பல சுமையாக்களை அடையாளம் கண்டு வாழவைக்க முடியுமல்லவா.

செய்திகள் மாத்திரமின்றி சமூகப்பணிக்கும் உதவிய உங்களுக்கு, எனது மனமார்ந்த நன்றிகளும் பிரார்த்தனைகளும்.

தொடர்ந்தும் பயணிப்போம்.

அன்புடன் - சர்ஜான்
10.07.2018

பிற்குறிப்பு - இதனுடன் தொடர்புடைய சகோதரிக்கும், அந்தக் குடும்பத்திற்கும் உதவிய அத்தனை உள்ளங்களுக்கும் நன்றிகள். யா அல்லாஹ் எமது நல்ல நோக்கங்களை ஏற்றுக்கொள்வாயாக...!

www.jaffnamuslim.com


4 comments:

  1. "அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது: ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது; அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்; இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். "
    (அல்குர்ஆன் : 2:261)
    www.tamililquran.com

    ReplyDelete
  2. Alhamdulillah, great job may Allah bless those who put their afford to help this family.

    ReplyDelete

Powered by Blogger.