Header Ads



தாய்லாந்துக்காக துடிதுடித்த, இலங்கையர்களின் மனிதாபிமானம் - உலகளவில் இடம்பிடித்தது

தாய்லாந்திலுள்ள குகையில் சிக்கியிருந்த பயிற்சியாளர் உள்ளிட்ட 12 சிறுவர்கள் நேற்று பத்திரமாக மீட்கப்பட்டனர்.

Tham Luang குகையில் சிக்கியிருந்த 13 பேரும் பாரிய மீட்பு நடவடிக்கையின் பின்னர் நேற்றைய தினம் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

மூன்று நாட்களாக முன்னெடுக்கப்பட்ட இந்த மீட்பு நடவடிக்கை காரணமாக 18 நாட்களாக குகையில் சிக்கியிருந்த தாய்லாந்து காற்பந்தாட்ட இளம் வீரர்கள் காப்பாற்றப்பட்டனர்.

மீட்பு நடவடிக்கை வெற்றியளித்ததை தொடர்ந்து தாய்லாந்து மக்கள் மாத்திரிமின்றி உலக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர்.

அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட பல நாடுகளின் அரசாங்க தலைவர்கள் பலர், சிறுவர்கள் காப்பாற்றப்பட்டமைக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த பாரிய செயற்பாட்டிற்கு உதவுவதற்கு அமெரிக்கா, பிரித்தானியா, ஜப்பான், சீனா, பிரேசில் உட்பட பல நாடுகளுகளின் சுழியோடிகள் மீட்பு பணிக்கு உதவ வந்துள்ளனர்.

எப்படியிருப்பினும், உலகத்தின் அவதானம் செலுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கை ஊடகங்கள் மற்றும் சர்வதேச ஊடகங்களில் பல செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையில் ThailandCaveRescue என்ற தேடுதல் மேற்கொள்ளப்பட்டது. கடந்த 24 மணித்தியாலங்களில் இவர்கள் தொடர்பில் அதிகம் தேடப்பட்ட நாடுகளில் இரண்டாவது இடத்தை இலங்கை பிடித்துள்ளது. இதன் ஊடாக இலங்கை மக்களின் மனிதாபிமான தன்மையை உலகிற்கு தெரியவந்துள்ளது.

இந்தப் பட்டியலின் முதல் இடத்தை சிங்கப்பூர் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.