Header Ads



றிஷாட் மீது, தொடரப்பட்ட வழக்கு வாபஸ்

கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன் மீது மேன்முறையீட்டு நீதி மன்றத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்திருந்த சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்கு இன்று (20) தனது மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டார்.

மேன்முறையீட்டு நீதிமன்ற வழக்கு 
C/A/3/18 Contempt   எனும் இலக்கத்திலான இந்த வழக்கு மேன் முறையீட்டு நீதி மன்றத்தின் சமர்ப்பணத்துக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போது,  குறித்த சட்டத்தரணி இந்த அவமதிப்பு வழக்கை வாபஸ் பெற்றார். மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் பத்மன்சூரசேன நீதிபதி அர்ஜூன ஒபபேயசேகர ஆகியோர் முன்னிலையில் இந்த வழக்கு இன்று எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இம்மனு வாபஸ் பெறப்பட்டது.

விலத்திக்குளம் வனவளம் தொடர்பாக நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கொன்று தொடர்பில் அமைச்சர் றிஷாட் பதியுதீன் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த சத்தியக்கடதாசியில் பிழையான தகவல்களை வழங்கியதாகவே இந்த அவமதிப்பு வழக்கு அமைச்சர் றிஷாட் பதியுதீன் மீது தொடுக்கப்பட்டிருந்தது.

குறிப்பிட்ட இந்த அவமதிப்பு வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யக்கூடிய சூழலொன்று உருவாகியதை அடுத்தே குறித்த வழக்கை மனுதாரரான சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்கு வாபஸ் பெற்றார்.

நீதிமன்றத்தில் அமைச்சர் றிஷாட் பதியுதீனின் நலன்களை கவனிக்கவென சட்டத்தரணிகளான ருஸ்தி ஹபீப், ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் உட்பட பல சட்டத்தரணிகள் பிரசன்னமாகியிருந்தனர்.

No comments

Powered by Blogger.