Header Ads



ஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்

நடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று சாதித்துள்ளார் 19 வயது கிலியான் பாப்பே.

ஃபிபா உலகக் கிண்ணம் கால்பந்து போட்டியில் பிரான்ஸ் 4-2 என்ற கணக்கில் குரேஷியாவை வீழ்த்தி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. குரேஷியா அணி செய்த சில சிறிய தவறுகளை கூட பிரான்ஸ் கோலாக மாற்றி சாதித்து காட்டியுள்ளது.

இந்த போட்டியில் பிரான்ஸ் வீரர் கிலியான் பாப்பே சிறப்பாக விளையாடி உள்ளார். அவரை அந்த நாடே கொண்டாடிக்கொண்டு இருக்கிறது.

கிலியான் பாப்பே, கடைசி நேரத்தில் ஒரு கோல் அடித்து பிரான்சின் வெற்றியை உறுதி செய்தார். இவர் அடித்த அந்த கடைசி நான்காவது கோல், அத்தனை பிரமாதமான கோல் இல்லை என்றாலும், அவரின் அந்த கோலுக்கு பின், அந்த வெற்றி கொண்டாட்டத்திற்கு பின் பெரிய கதை உள்ளது.

காலம்காலமாக கருப்பின மக்கள் விளையாட்டு துறைகளில் பட்டுவந்த கஷ்டங்களை எல்லாம் இவரும் அனுபவித்து வந்திருக்கிறார்.

இவர் பிறந்து வளர்ந்தது எல்லாமும் போண்டி என்ற சிறிய பிரான்ஸ் கிராமம். அதீத போதை பொருள் பயன்பாடு தொடங்கி ஆயுத கலாச்சாரம் வரை, இந்த போண்டி கருப்பின நகரத்தை தொடர்ந்து வந்திருக்கிறது.

தான் வாழ்ந்த பகுதியின் சூழ்நிலைதான் சரியில்லை என்றாலும், தன்னுடைய குடும்ப சூழ்நிலையும் இவருக்கு சரியில்லை.

பள்ளி அணியில் விளையாடியது, தேர்வில் ஷு இல்லாமல், ஷு வாங்க வழியில்லாமல் விளையாடியது, பின்னர் கல்லூரி அணியில் சில நாட்கள் விளையாடியது, சிறு சிறு குட்டி கிளப்புகளில் விளையாடியது என்று இவரது வாழ்க்கையும், ஜாம்பவான் பீலேவின் வாழ்க்கையும் கிட்டத்தட்ட ஒன்றுதான்.

இவர் கருப்பின வீரர் என்பதாலேயே பல முறை சக வெள்ளை வீரர்களால் நிராகரிக்கப்பட்டு இருக்கிறார்.

கிளப்புக்களில் கொஞ்சம் கொஞ்சமாக புகழை அடைந்த பாப்பே, தன்னுடைய ஆக்ரோஷமான விளையாட்டால், பெரிய நட்சத்திரமாக மாறினார்.

பாரிஸ் செயின்ட்-ஜெர்மெய்ன் என்ற இவரது, கிளப் இவரை குழந்தை போல வைத்து கொண்டாடிக்கொண்டு இருக்கிறது.

இந்த நிலையில்தான் தற்போது போதையில் சுற்றித்திரிந்த போண்டி மக்களுக்கு, புதிய புத்துணர்ச்சி கிடைத்து இருக்கிறது.

அவர்கள் பகுதியை தவறாக பார்த்தவர்களுக்கு, பாப்பே ஒரு புதிய அழகிய அடையாளத்தை கொடுத்து இருக்கிறார்.

இதுவரை தவறாக சுற்றி திரிந்தவர்களுக்கு, சூழ்நிலை உங்கள் வாழ்க்கை போக்கை மாற்றாது என்பதை இவர் நிரூபித்து இருக்கிறார்.

பீலே போலவே வாழ்க்கை வரலாற்றை கொண்டுள்ள இவர், பீலே போலவே சாதனை செய்துள்ளார்.

60 வருடத்திற்கு முன்பு உலகக் கிண்ணம் இறுதி போட்டியில் பீலே கோல் அடித்தார். அப்போது அவர்தான் இளம் வீரர்.

தற்போது அந்த சாதனையை 19 வயதே நிரம்பிய பாப்பே முறியடித்துள்ளார். அதேபோல் இந்த தொடரில் சிறந்த வீரர் என்று விருதையும் பெற்று இருக்கிறார்.

2

பிரான்ஸ் அணியின் இளம் வீரரான கைலன் மேபே உலகக்கோப்பை போட்டியில் தனக்கு வந்த முழு வருமானத்தையும் ஊனமுற்றோர் குழந்தைகளுக்காக வழங்கியுள்ளார்.

ரஷ்யாவில் நடைபெற்ற உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணி வெற்றி பெற்று சாதனை படைத்தது. இந்த தொடரில் பிரான்ஸ் அணியில் இளம் வீரர்களில் ஒருவராக Kylian Mbappé இருந்தார்.

பிரான்ஸ் அணி இந்த உலகக்கோப்பை வெல்வதற்கு முக்கிய காரணமும் இவர் தான், இந்நிலையில் இவர் உலகக்கோப்பை போட்டியில் தன்னுடைய சம்பளம் மற்றும் வெற்றிபெற்றதற்காக கொடுக்கப்பட்ட போனஸ் சம்பளம் 550,000 டொலர்(இலங்கை மதிப்பில் 8,78,95,500 கோடி) என மொத்த தொகையையும் இலவசமாக விளையாட்டு சொல்லி கொடுக்கும் தொண்டு நிறுவனம் மற்றும் ஊனமுற்ற நிலையில் விளையாடி வருபவர்களுக்கு கொடுத்துள்ளார்.

இந்த இளம் வயதில் இவரின் செயலைக் கண்டு பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

2 comments:

  1. God bless bro. Wish you all the best in bright future .

    ReplyDelete
  2. God bless you bro. Wish you all the best in bright future.

    ReplyDelete

Powered by Blogger.