Header Ads



விஜயகலா தொடர்பில், ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரனுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பது தொடர்பில் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

வடக்கில் நேற்றைய தினம் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன், தமிழ் மக்கள் பாதுகாப்பாக வாழ மீண்டும் விடுதலைப் புலிகள் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் இராஜாங்க அமைச்சர் பதவியில் உள்ள ஒருவர் அவ்வாறு கருத்து வெளியிட முடியாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அத்துடன் இது தொடர்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகத்தின் தகவல் வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

2 comments:

  1. மைத்திரி சார் உங்கள் ஆட்சியில் சட்டமும்,ஒழுங்கு, நீதி, நியாயம் சரியான முறையில் இல்லாததால் தானே கண்டவர்கள் எல்லாம் கண்டபடி பேச காரணம்.

    விஜயகலா மட்டுமல்ல ஒட்டு மொத்த தமிழர்களும் அதே கருத்தோடு தான் இருக்கிறார்கள் என்பது உமக்கு மட்டுமல்ல உமது அமைச்சரவை மரமண்டைகளுக்கு புரியாது.

    ReplyDelete
  2. Minorities nearly or above ninty persontage voted for Maithree for present rulers to demonstrate their opposition previous government neglected minorities and their actions policy were clearly against them
    We know some Muslim ladies who were not voted in their life as religious obligations used their vote against them.
    Under the good government also minorities face same difficulties what will be their reaction.
    Not only Hon Wijayakala almost all in the same mentality

    ReplyDelete

Powered by Blogger.