Header Ads



திரை அரங்குகளில், தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் - தீர்மானம் நிறைவேற்றம்

திரை அரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

அனுராதபுரம் மாநகர சபையில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் மாநகரசபை உறுப்பினர் ரஞ்சித் ராஜகருணாவினால் இந்த பிரேரணை நேற்றைய தினம் சமர்ப்பிக்கப்பட்டது.

அனைத்து திரையரங்குகளிலும் திரைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட முன்னதாக தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டுமென அவர் பிரேரணையில் முன்மொழிந்திருந்தார்.

இந்த பிரேரணை மாநகரசபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாட்டின் அனைத்து திரையரங்குகளிலும் தேசிய கீதம் இசைப்பதற்கு உத்தரவிடுமாறு ஜனாதிபதி மற்றும் கலாச்சார அமைச்சரிடம் கோரிக்கை விடுப்பது என தீர்மானத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

திரையரங்குகளின் உரிமையாளர்களுக்கு தேசிய கீதத்தை இசைக்குமாறு உத்தரவிடுமாறு கோரப்பட்டுள்ளது.

அநேகமான இலங்கையர்களுக்கு தேசிய கீதம் மறந்து விட்டதாகவும், இவ்வாறு திரையரங்குகளில் இசைப்பதன் மூலம் அதனை நினைவூட்ட முடியும் எனவும் மாநகரசபை உறுப்பினர் ரஞ்சித் ராஜகருணா தெரிவித்துள்ளார்.

7 comments:

  1. தேசிய கீதம் எங்கும் பாடலாம்.

    திரை அரங்குகள் இலங்கை பூராவும் மூடப்பட வேண்டும்.

    ReplyDelete
  2. We accept that, in tamil area, anthem must be sung in Tamil

    ReplyDelete
  3. பட்டி தொட்டி, மூலை முடுக்கு, குப்பை கொட்டுமிடங்கள் எல்லாம் புத்தர் சிலைகள் நிறுவப்பட்டுக்கொண்டிருக்கின்றது காரணம் மக்கள் புத்தரை மறந்து விடுவார்கள் என்பதற்காக.

    அதே போல் திரையரங்குகளிலும் புத்தர் சிலைகள் நிறுவி பிரித்தையும் சேர்த்து ஒதி விட்டு படத்தை ஆரம்பித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

    ReplyDelete
  4. இதை செய்தால் எல்லாம் சரியாகி விடுமோ?
    என்ன ஒரு கேவலமான நாடு இது.

    ReplyDelete
  5. இலங்கையில் அநேகமான திரையரங்குகளில் ஆபாச திரைப்படங்களே ஓட்டுகிறார்கள். எங்குபார்த்தாலும் ஆபாசப் போஸ்டர்கள்! இந்த நிலையில் நீங்கள் புனிதம் எனக்கருத்தும் தேசிய கீதத்தை போட்டுவிட்டு ஆபாசப் படங்களை காட்டப்போகிறீர்களா?நல்லா யோசிக்கிறீங்கடா.நாடு நல்லா வந்துரும் வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  6. செய்திகள் ஒன்றுக்கொன்று முரண்.
    யாழ் குளுவின் பிரச்சினைக்கு திரப்படங்கள் தான் காரணமாம்.அப்போ இந்த செய்தி அறிவுக்கு பொருந்த வில்லை.

    ReplyDelete
  7. மதுபான சாலைகளிலும், கழிவகற்றும் அறைகளிலும் இதனைப்பாட வைத்தால் இன்னும் மக்கள் மறக்க மாட்டார்கள் ஐயா, சேர்த்துகொள்ளவும்.

    ReplyDelete

Powered by Blogger.