Header Ads



"மரண தண்டனையை அமுல்படுத்தும் இறுதி, அதிகாரம் ஜனாதிபதிக்கு மட்டுமே உண்டு"

மரண தண்டனை அமுல்படுத்துவது தொடர்பில் கைதிகளை பெயரிடுதல் மற்றும் மரண தண்டனை அமுலாக்கத் திகதி நிர்ணயம் என்பனவற்றை மேற்கொள்ள குழுவொன்றை நியமிக்க முடியாது என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

நாட்டின் அரச தலைவருக்கு உள்ள அதிகாரங்களை குழுவொன்றிடம் ஒப்படைக்கப்பட முடியாது.

மரண தண்டனைக் கைதி ஒருவருக்கு தண்டனை விதிக்கும் திகதியை நிர்ணயம் செய்தல் அல்லது மன்னிப்பு வழங்குதல் போன்ற தீர்மானம் எடுக்கும் அதிகாரம் நாட்டின் அரச தலைவரான ஜனாதிபதிக்கு மட்டுமே உண்டு.

இந்த அதிகாரங்களை அமுல்படுத்துவதற்கு குழுவொன்றை நியமிப்பது அரசியல் அமைப்பினை கடுமையாக மீறும் செயலாகும்.

சிற் சில அதிகாரங்களை குழுவொன்றிடம் ஒப்படைக்க முடியும் என்ற போதிலும் மரண தண்டனை விவகாரத்தில் ஜனாதிபதியின் அதிகாரங்களை வேறும் தரப்பினரிடம் ஒப்படைக்க முடியாது.

மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவர் தொடர்பில் நீதி அமைச்சர், சட்டமா அதிபர் மற்றும் தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஆகியோரிடம் இரகசிய அறிக்கை பெற்றுக்கொண்டு அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.