Header Ads



பசில் ராஜபக்ஸ மீது, அஜித் பிரசன்ன பாய்ச்சல்

பொதுஜன பெரமுனவிலிருந்து தாம் விலகியுள்ளதாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அஜித் பிரசன்ன, தமது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஸவை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

பெஸில் ராஜபக்ஸ இரண்டு தடவைகள்  பெற்தரைக்கு வந்ததான குறிப்பிட்டுள்ள முன்னாள் தென் மாகாண சபை உறுப்பினர், மேஜர் அஜித் பிரசன்ன, அதற்கு தமக்கு  அழைப்பு விடுக்கப்படவில்லை எனவும்,பெந்தவர பிரதேச சபையின் தலைவர், உப தலைவர் தெரிவின்போதும் தமக்கு அழைப்பு விடுக்கவில்லை எனவும், இது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு தான் முயற்சி செய்தபோது, இந்த விடயம் தொடர்பில் பேச வேண்டாம் என பெஸில் ராஜபக்ஸ கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை,  இதனால் நாம் அதிகளவில் முடக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிபதி தேர்தலுக்கு தகுதியானவர் எனவும், அவரை வெற்றி பெறச் செய்வதற்கு பகிரங்கமாக பேசியமையாலும் பெசில் ராஜபக்ஸ இவ்வாறு நினைத்திருக்கலாம் எனக் கூறியுள்ள மேஜர் பிரசன்ன,  பெசில் ராஜபக்ஸவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக கூறப்படுவது தொடர்பிலும் கருத்து தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவதற்குப் பதிலாக வேறொருவரை இறக்கும் செயற்பாடு கட்சிக்குள்  இடம்பெறுவது, தெரிவதாகவும், அது திட்டமிட்ட செயற்பாடாகும் எனவும் அவர் விமர்சித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஸ தகுதியற்றவர் என குமார வெல்கம, தினேஷ் குணவர்தன, விமலவீர திசாநாயக்க ஆகியோர் பகிரங்கமாக கூறியுள்ளமையை நினைவு கூர்ந்துள்ள அவர், கோத்தாபய குறித்து தான் தெரிவித்த கருத்துக்களை அடுத்து பல்வேறு தரப்பிலிருந்து எனக்கு அழுத்தம் விடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

நான் கூறியது தவறு எனவும் அவ்வாறு பேச வேண்டாம் எனவும் சிலர் கூறியதாகவும், அதனால்,  பகிரமங்கமாக ஊடக சந்திப்பொன்றை நடத்த வேண்டியேற்பட்டது எனவும் மேஜர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜீ.எல். பீரிஸ் கட்சியின் தலைவராக இருந்தாலும் பெஸில் ராஜபக்ஸவே கட்சியை முன்னெடுப்பதாகவும், அதனால் தான் கட்சியிலிருந்து விலகுவதாகவும், அந்தக் கட்சியுடன் தனக்கு எவ்வித தொடர்புமில்லை எனவும், தான் சுயாதீனமாக செயற்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.