Header Ads



அவுஸ்திரேலிய தூதுவர் அம்பாறை முஸ்லிம்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தார் - ஜும்மா பள்ளிவாசலுக்கும் விஜயம்.


அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் ப்ரைஸ் ஹட்சஸனுக்கும் அம்பாறை மாவட்ட முஸ்லிம் சிவில் சமூக பிரதிநிகளுக்கும் இடையிலான உயர் மட்ட சந்திப்பு அம்பாறை மாவட்ட அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவர் டாக்டர் எஸ்.எம்.எ அஸீஸ் தலைமையில் சீ பிரீஸ் ரெஸ்டுரண்டில் நடைபெற்றது.

இச் சந்திப்பின் போது அண்மையில் நடைபெற்ற அம்பாறை ஜும்மா பள்ளிவாசல் மீதும்,முஸ்லிம்களின் வியாபார நிலையங்கள் மீதும் மேற்கொள்ளப்பட்ட  இனவாதிகளின் தாக்குதல் தொடர்பாகவும், கண்டி திகன போன்ற பிரதேசங்களில் முஸ்லீம் மக்கள் மீது இனவாதிகள் மேற்கொண்ட தாக்குதல் தொடர்பவும், அதன் இழப்புகள் தொடர்பாகவும், முஸ்லீம் மக்களுக்கு எதிராக சமூக ஊடகங்களில் மேட்கோள்ளப்பட்டு வரும் பொய்ப்பிரசாரங்கள் தொடர்பாகவும், இனவாத அமைப்புகளின் முஸ்லீம் விரோத சேயட்பாடுகள் தொடர்பாகவும், அம்பாறை மாவட்ட முஸ்லீம் மக்கள் எதிர்நோக்கிவரும் சமூக, பொருளாதார, அரசியல், கணிப்பிரசினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

மேலும் முஸ்லிம் மக்களை பெரும்பான்மையாக கொண்ட அம்பாறை மாவட்டத்தின் மாவட்ட செயலக அரசாங்க அதிபராக தகமையுள்ள முஸ்லிம் அதிகாரி ஒருவரின் நியமனம், நுரைச்சோலை சுனாமி வீட்டுத்திட்டத்தை அக்கரைப்பற்று பிரதேச விகிதாசார அடிப்படையில் வழங்க வேண்டும் எனவும், மட்டக்களப்பிலிருந்து பொத்துவில் வரையிலான ரயில் பாதை அமைக்கும் நடவடிக்கைள் குறித்தும், முஸ்லிம் மக்களின் கணிப்பிரசினைகள் உட்பட இன்னும் பல முக்கிய விடயங்கள் தொடர்பாகவும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரிடம்  சிவில் சமூக பிரதிநிதிகளினால் எடுத்துக்கூறப்பட்டதுடான் இனங்களுக்கிடையிலான நல்லுறவினை கட்டியெழுப்புவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இவ் உயர் மட்ட சந்திப்பில் அம்பாறை மாவட்ட அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவரும் கல்முனை முகைதீன் ஜும்மா பெரிய பள்ளிவாசலின் தலைவருமான டாக்டர் எஸ்.எம்.எ அஸீஸ் , அம்பாறை மாவட்ட சர்வ சமய சம்மேளனத்தின் தலைவர் வைத்தியர் எம்.ஐ.எம் ஜெமீல், தென்கிழக்கு பல்கலைகழகத்தின் சமூகவியல் துறைத்  தலைவர் கலாநிதி அபூபக்கர் ரமீஸ், அம்பாறை ஜும்மா பள்ளிவாசல் தலைவர்  எ.எல் ஹாரூன்,   உரையாடலுக்கும் ஆய்வுக்குமான மையத்தின் பணிப்பாளர் சிராஜ் மசூர், அம்பாறை மாவட்ட சர்வ சமய சம்மேளனத்தின்  தவிசாளர் வைத்தியர் எ.எல்.எம்  பாறுக், அக்கரைப்பற்று சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி எஸ்.எல்.எ ரஷீத்,  தென்கிழக்கு பல்கலைகழகத்தின் அரசியல் விஞ்ஞான துறைத் தலைவர் எம்.எம் பாசித், அம்பாறை ஜும்மா பள்ளிவாசல் பொருளாளர் வைத்தியர் எ.எம்.எம்.எ ரஷீத், சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஐ.எம் இப்ராகிம் உட்பட அவுஸ்திரேலிய தூதரக அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.   

இதேவேளை அம்பாறை ஜும்மா பள்ளிவாசலுக்கும் விஜயம் செய்த அவுஸ்திரேலிய தூதுவர் அங்குள்ள நிலைமைகள் மற்றும் சேத விபரங்களையும் கண்டறிந்தார்.    

நிப்ராஸ் மன்சூர்

No comments

Powered by Blogger.