Header Ads



விஜயகலாவின் விவகாரத்தை, இத்தோடு நிறுத்துங்கள் - ஹக்கீம் ஆவேசம்

நாட்டில் தீர்க்கப்படாத விடயங்கள் பல உள்ளன, அதை விடுத்து முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் நீண்ட உரையின் சிறு பகுதியை தூக்கிப்பிடித்துக்கொண்டு ஆடுவது வேடிக்கையாகவுள்ளது என  நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப்  ஹக்கீம் தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், 

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் எதிர்பாராத விதமாக ஒருவார்த்தை பிழையாக கூறியமையினால் அவரை தூக்கிலிட்டு கொல்லவா? இவர்கள் சொல்கிறார்கள். தனது கருத்தை சொல்வதற்கு இருக்கின்ற தனிமனித சிறப்புரிமைக்கு சில கட்டுப்பாடுகள் அவசியம்தான். 

ஆனால் இப்போது வடக்கில் இருக்கின்ற நிலவரத்தை நாம் சிந்திக்கவேண்டும். அங்கே  சட்டமும் ஒழுங்கும் சீரற்ற நிலையில் காணப்படுகின்றன.  அண்மையில் யாழ்ப்பாணத்தில்  விஜயகலா மகேஸ்வரனின் உறவுக்கார பெண் தனது கணவரின் முன்னாலேயே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். பெண்களுக்கு சரியான பாதுகாப்பு இல்லாத ஒரு நிலை அங்குள்ளது. சட்டவிரோத குழுக்களின் ஆளுகையும். செயற்பாடும் அங்கு அதிகளவாக இருப்பதனை காணமுடிகின்றது.

இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் அவரது மிக நீண்ட உரையின் ஒரு சிறு பகுதியை தூக்கிப்பிடித்துக்கொண்டு ஆடுவது வேடிக்கையாக இருக்கின்றது. அவர் என்ன பேசினார் எவ்வாறான நிலையில் பேசினார் என்கின்ற அடிப்படை அறியாதவர்களே இப்போது வீதிகளில் ஆர்ப்பாட்டம் செய்து மீண்டும் ஒரு பிரிவினைக்கு வழிகோலுகின்றனர்.

மேலும் இந்த நாட்டில் தீர்க்கப்படாத முக்கிய பிரச்சினைகள் பல இருக்கின்றன. எனவே விஜயகலா மகேஸ்வரனின் விடயத்தை இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள் என நான் பணிவுடன் கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.

11 comments:

  1. After very long time well said Mr. Hakeep. You are right she did nothing to punish her. Truly now it became JOB... Our country going toward hell...

    ReplyDelete
  2. After very long time well said Mr. Hakeem. You are right.. She did nothing to punish her. She is innocent. Truly now it became JOB... Our country going toward hell...

    ReplyDelete
  3. இக்கருத்து முஸ்லிம் சமுதாயத்தின் கருத்து அல்ல. ஹக்கீம் என்ற ஒரு தனி நபரின் கருத்தே. 2000 ஆண்டின் ஆரம்பங்களில் அவர் பெற்றுக் கொண்ட பணத்திற்கு இப்போது நன்றிக் கடன் செய்கின்றார் போல் தெரிகின்றது

    ReplyDelete
  4. தோழர் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களுக்கு நல் வாழ்த்துக்கள். விஜயகாலா சிக்கலின் அரசியல் பின்னணியை சரியாகச் சுட்டிக் காட்டியுள்ளீர்கள்.

    ReplyDelete
  5. விஜயகலாவின் சுயநல புலி நாடகத்திற்கு இவர் வக்காலத்து வாங்குவது வேடிக்கை. புலிகளின் இருண்ட காலத்தை மறுபடியும் கொண்டுவரவா இவர் விரும்புகிறார்!

    ReplyDelete
  6. Hon Mini Hakeem Excellent You have shown addressed very good politically matured statement when parliamentarian differently communally approached this
    What Min Wijayakala addressed is not acceptable we all should focus the situation why being a minister led her to make such a statement.
    Government should consider the situation prevailing not only north entire island faced by minorities and take some remedies at earliest

    ReplyDelete
  7. கிழக்கிலங்கை முஸ்லிம்கள் ஒன்றுகூடி, எப்போது ஹக்கீமை முஸ்லீம் காங்கிரசில் இருந்து ஓரங்கட்டுவார்களோ, அப்பொழுதுதான் முஸ்லிம்களுக்கு விடியல் உதயமாகும்.

    அதுவரைக்கும், முஸ்லிம்கள் அல்லல்பட வேண்டியதுதான்.

    ReplyDelete
  8. நம்மட CM விக்கி சொல்லாத statementய விஜயகலா சொல்லிவிட்டார்?.
    விக்கி இதை போல் 1000 statements, பேட்டிகள் என புலிகளை புகழ்ந்து சொல்லிவிட்டார். தற்போது கூட விஜயகலா சொன்னது “சரிதான்” என அறிக்கை கூட விட்டார். விக்கி எதிராக ஒன்றும் செய்ய இயலாது.

    ஏன் NPC இலங்கையின் ஒரு பகுதி இல்லையா?, அல்லது NPC இலங்கை அரசியல் அமைப்பு சட்டத்திற்குள் வரவில்லையா?
    இவர்கள் இடம் கண்ட இடத்தில் மடம் கட்டுற ஆட்கள்.

    விஜயகலா அரசாங்கத்தில் தொங்கி கொண்டிருப்பதால் தான் இனவாதிகள் இப்படி குலைக்குறார்கள்.
    அரசாங்கத்தில் தொங்கி கொண்டிருக்கும் சிறுபாண்மையினர் (தமிழ்/முஸ்லிம்) எல்லாருக்கும் இதே நிலமை தான். அரசில் தொங்குபவர்கள் எல்லாரும் சிங்களவர்களின் அடிமைகளாகவே நடாத்தபடுகிறார்கள்.

    அதனால் தான், புதிய தேர்தல் சட்ட மூலம் தமக்கு எதிரானது என அறிந்தும் கூட, அதற்கு ஆதரவாக 21 முஸ்லிம் MP களும் வாக்குகள்அளித்தார்கள்.
    மேலிடத்து கட்டளையை மறுபேச்சு பேசாமல் செய்வது தானே அடிமைகளின் கடமை.

    ReplyDelete
  9. @sampanthan tna, உங்கட 21 முஸ்லிம் MPகளும் விஜயகலா போன்ற அரசியல் அடிமைகள் தானே

    ReplyDelete
  10. Your Racist Vicky is a slave of Sinhala Parliamentarians.

    ReplyDelete
  11. However, Tamils will not kneel down before others like other communities for their needs. Tamils may be poor but not beggars.

    ReplyDelete

Powered by Blogger.