Header Ads



பகலில் தானம், இரவில் கொள்ளை - அதிர்ந்துபோன பௌத்த பிக்குகள்

பலாங்கொட பிரதேசத்தில் பகலில் தானம் செய்து இரவில் திருட்டில் ஈடுபடும் நபர்கள் இருவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.

பகல் நேரங்களில், நவீன மோட்டார் வாகனத்தில் வரும் நபர்கள் இருவர் விகாரைக்கு முன்னால் உள்ள உண்டியலில் பணம் போட்டுவிட்டு கடவுளை வேண்டி விட்டு செல்வதனை வழக்கமாக கொண்டுள்ளனர்.

மீண்டும் அன்றைய தினம் இரவு நவீன மோட்டார் வாகனத்தில் வரும் இந்த நபர்கள் இருவரும் விகாரையின் உண்டியலை உடைத்து பணத்தை திருடி செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

அடுத்த நாள் காலை இந்த இடத்திற்கு தேரர் சென்ற போது, உண்டியல் உடைக்கப்பட்டிருந்ததை அவதானித்த தேரர் உடனடியாக சிசிடீவி கமராவை சோதனையிட்டுள்ளார்.

சிலர் ஆயுதம் பயன்படுத்தி இந்த நபர்கள் இருவரும் உண்டியலை உடைத்து திருடும் காட்சி அதில் பதிவாகியுள்ளது.

இதற்கு முன்னர் இரண்டு முறை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில் அதனையும் குறித்த இருவருமே செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய இந்த நபர்கள் பகலில் தானத்தில் ஈடுபட்டு, இரவில் திருட்டில் ஈடுபடுவதாக தெரியவந்துள்ள நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சினிமாவில் இவ்வாறான கதாப்பாத்திரங்களை வெளிக்காட்டப்பட்ட போதும், நிஜத்திலும் இவ்வாறு நடைபெறுவதாக பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.