Header Ads



சுவிஸ் வங்கிகளில் பணத்தை பதுக்கியுள்ள, இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

சுவிஸ் வங்கியின் பணத்தை சேமித்து வைத்துள்ளவார்களின் பட்டியலில் 108ஆவது இடத்தில் இலங்கை உள்ளதாக தொரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2007ஆம் ஆண்டைக்காட்டிலும் அதிகமான இலங்கையர்கள் சுவிஸ் வங்கியில் பணம் வைப்பிலிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டு இலங்கை இந்த பட்டியலில் 112ஆவது இடத்திலேயே இருந்தது.

ஒரு வருடத்துக்குள் அது 5 புள்ளிகளால் முன்னிலைக்கு வந்துள்ளமையை அவதானிக்க முடிகிறது. இந்தியா 73ஆவது இடத்தில் உள்ள நிலையில் பாகிஸ்தான் 72ஆவது இடத்தில் உள்ளது.

இந்த நிலையில் தொடர்ந்தும் பிரித்தானியா இந்த வைப்பு விடயத்தில் முதன்மை நாடாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, சுவிஸ் வங்கி வைப்பு விடயத்தில் பங்களாதேஷ் இலங்கையையும் முந்தி 95ஆவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.