Header Ads



கோத்தபாய அரசியலில், ஈடுபடுவார் என ஐ.தே.க. பீதி

கூட்டு எதிர்க்கட்சியின் சிலர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவாக செயற்பட்டு வருவதாக முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.

கொழும்பு உயர் நீதிமன்றில் விசாரணை செய்யப்பட்டு வரும் வழக்கு ஒன்றில் முன்னிலையாக நீதிமன்றிற்கு சென்றிருந்த போதே ஊடகவியலாளர்களிடம் அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

சஜித் பிரேமதாச, மனோ கணேசன் ஆகிய அமைச்சர்கள் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை ஹிட்லருக்கு நிகரானவரல்ல என கூறியுள்ளனர்.

எனினும், கூட்டு எதிர்க்கட்சியின் சில நபர்கள் கோத்தபாயவை ஹிட்லராக வர்ணித்து ரணிலுக்கு ஆதரவாக செயற்பட்டு வருகின்றனர்.

கோத்தபாய அரசியலில் ஈடுபடுவார் என்ற அச்சத்தினால் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி பீதியடைந்துள்ளது.

இதேவிதமாக கூட்டு எதிர்க்கட்சியின் சிலரும் கோத்தபாயவை ஹிட்லராக வர்ணித்ததால் அவர்கள் ரணிலின் ஆதரவாளர்களாகவே கருதப்பட வேண்டுமென மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. In a way it is good Gotta come to the power and bring peace among Tamil people.

    ReplyDelete

Powered by Blogger.