Header Ads



தடுப்பூசியை ஏற்கமறுப்பதையும், வீட்டிலே பிள்ளை பெறுவதையும் தடுப்போம்..!!

"சுகாதாரத்துறைக்கு சவால்விடும், மூட நம்பிக்கையாளர்கள்"

ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் சுமார் 40 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருவதாக ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்துள்ளார். 

பிரதேச சுகாதார அதிகாரி தாரிக் தெரிவித்துள்ள இத்தகவல் சுகாதாரத் துறை அமைப்பு எதிர்நோக்கியுள்ள ஒரு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. 

பல முஸ்லிம் பிரதேசங்களில் புதிதாக உருவாகி வரும் இப்போக்கு பற்றியே டாக்டர் தாரிக் சுட்டிக்காட்டியுள்ளார். 

முஸ்லிம் சமூகத்தில் அண்மைக்காலமாக ஓரிரு உலமாக்கள் நிகழ்த்தி வரும் போதனைகள் காரணமாகவே இந்த போக்கு காணப்படுகின்றது. 2009ஆம் ஆண்டு காலப் பகுதியில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவரே தடுப்பூசி ஏற்றுவதற்கு மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். ஒன்பது வருடங்களுக்குள் அது 40 ஆக அதிகரித்துள்ளது. இந்தப் போக்கு நீர்கொழும்பிலும் சில காலத்துக்கு முன் காணப்பட்டு பிரதேச சுகாதாரத் துறை அதிகாரிகள் பள்ளிவாசல் நிர்வாகிகளை அறிவூட்டிய பின்னர் நிலைமையில் சிறிது மாற்றம் ஏற்பட்டுள்ளது. 

தடுப்பூசி ஏற்றுவது மட்டுமன்றி பாதுகாப்பான மகப்பேற்றினையும் சிலர் நிராகரித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தம் காலடியில் வைத்திய வசதிகள் இருக்கும் போது ஏறாவூரிலிருந்து நான்கு மணித்தியாலத் தூரப் பயணமுள்ள பொத்துவிலுக்குச் சென்று பாரம்பரிய மகப்பேற்று உதவியைப் பெற்றுக்கொண்ட சம்பவம் ஒன்று பற்றியும் டாக்டர் தாரிக் குறிப்பிட்டுள்ளார். இதேபோன்ற ஒரு சம்பவம் பதுளை பிரதேசத்திலும் இடம்பெற்றதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. 

தாய், சேய் இறப்பு மற்றும் சுகாதார நலன்களைக் கருத்தில் கொண்டு வீட்டுப் பிரசவங்கள் இடம்பெறக்கூடாது என்பதே சுகாதாரத் துறையின் கொள்கையாக இருக்க, அதற்கு முற்றும் சவாலாக முஸ்லிம் சமூகத்தில் சிலர் நடந்து வருகின்றனர். 

அரசாங்கம் மக்களது சுகாதார நலனுக்காகப் பல கோடி ரூபா செலவு செய்வதற்கு காரணம் ஆரோக்கியமிகு சமுதாயம் ஒன்றை நாட்டில் உருவாக்குவதாகும். இப்படியிருக்க படித்த சிலர் முன்னின்று மக்களை தவறாக வழிநடத்துகிறார்கள். 

இந்த விடயம் குறித்து முஸ்லிம் சமூகத் தலைவர்கள் தீவிரமாகக் களத்தில் இறங்க வேண்டும். குறிப்பாக அகில இலங்கை ஜம்மியதுல் உலமா இவ்வாறான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள உலமாக்கள் பற்றி சமூகத்துக்கு அறிவூட்ட வேண்டும். அதேபோன்று முஸ்லிம் வைத்தியர்களுக்கும் இந்த விடயத்தில் ஒரு பெரும் பொறுப்புள்ளது. 

21ஆம் நூற்றாண்டில் முஸ்லிம் சமூகத்தில் சிலர் மூடத்தனமான கொள்கைகளால் வழிநடாத்தப்படுவது கவலைக்குரியது. இவ்வாறான தவறான கருத்துக்களை எடுத்துக்கூறுவதற்கு முஸ்லிம் சமூகத்தின் பள்ளிவாசல்களை பயன்படுத்த இடமளிப்பது குறித்து பள்ளிவாசல் நிர்வாகிகள்  மீளச் சிந்திக்க வேண்டும். 

சுகாதார அமைச்சு இந்த விடயத்தில் உடனடியாகத் தலையிட வேண்டும். மூட நம்பிக்கைகளை நாடிச் செல்லும் மக்கள் வாழும் பிரதேசங்களில் மக்களை அறிவூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

(04.07.2018 நவமணி பத்திரிகையில்வெளியாகியுள்ள ஆசிரியர் தலையங்கம்)

9 comments:

  1. சும்மா கத்திகிட்டு இருக்காம,முடியுமென்றா குறைய்த கட்டணம் அறவிடக்கூடிய 40/50 VOG (பெண்)Doctors மார்களை உருவாக்க பாருங்கள்,இதுதான் சமூகத்திற்கு செய்யும் மிகப்பெரிய தொன்று்்்

    ReplyDelete
  2. The Secretary to the Ministry of Muslim cultural affairs should take action to stop the use of Jumma Mimber to spread to spread personal foolish beliefs to people. The pregnant women , and the newborn baby, both are in danger. Since these people don't vaccinate neighbor s are also in danger. If Eravur reports first Polio case ( Sri Lanka has eradicated), ACJU should take resposresponsibility for being silent.

    ReplyDelete
  3. அப்படியானால் முப்பது வருடங்களுக்கு முன் இல்லாத சீசர் முறை இப்போது ஏன் எல்லாப் பெண்களுக்கும் செய்யப் படுகிறது. இது தானா அந்த சுகாதாரம் . இதனால் பெண்களின் ஆரோக்கியம் கேட்டுப் போகிறதல்லவா . சனத்தொகையைக் கட்டுப்படுத்துவதற்கான சதி போல் தென்படவில்லையா இந்த சீசர் நடைமுறை. முறையாக அறிவுரைகைப் பின்பற்றும் பெண்களுக்கே சீசர் நடைபெறுகிறது . இதற்கு என்ன தீர்வு ?

    ReplyDelete
  4. ACJU mufthi களின் வழிகாட்டல் மற்றும் ஆசிர்வதத்துடனேயே இந்த ?உலமாக்கள் செயட்படுகின்றனர்; இவர்களின்(ACJU வின்)
    அட்டகசத்தை அடக்காத வரை சமூகம் சீர்குலைந்து கொண்டே போகும்

    ReplyDelete
  5. 20276: Ruling on childhood immunizations and vaccinations
    What is the Islamic perspective on childhood immunizations or vaccinations? There is evidence to prove that they can be harmful to the body, but they are required in many countries. This is a very important topic that many do not have an adequate understanding of.
    Published Date: 2003-03-11
    Praise be to Allaah.
    Shaykh ‘Abd al-‘Azeez ibn Baaz (may Allaah have mercy on him) was asked:

    What is the ruling on giving treatment before sickness occurs, such as vaccinations?

    He replied:

    There is nothing wrong with giving treatment if there is the fear that the disease may occur because of the presence of an epidemic or other factors which may cause disease. There is nothing wrong with giving medicine to ward off the feared disease, because the Prophet (peace and blessings of Allaah be upon him) said, according to the saheeh hadeeth, “Whoever eats seven dates of Madeenah in the morning will not be harmed by witchcraft or poison.” This is a kind of warding off a problem before it happens. So if there is the fear of sickness and a person is vaccinated against an infection that is present in the land or elsewhere, there is nothing wrong with that, because it is a kind of protection. But it is not permissible to wear or hang up amulets etc against sickness, the jinn or the evil eye, because the Prophet (peace and blessings of Allaah be upon him) forbade that, and explained that this is a kind of minor shirk [associating others in worship with Allaah], so it must be avoided.

    Fataawa al-Shaykh Ibn Baaz, 6/21

    With regard to the harm suffered by those who are given some vaccinations, namely a short-lived fever or other side-efects, these drawbacks may be overlooked when compared with the great harm that is warded off, namely the diseases that may kill or cause great harm to a person’s health.

    This is similar to the case of circumcising boys by cutting off a piece of skin and the intense pain that is caused to the infant; this is outweighed by the great benefits that are served by this action, serving the religious interest of purity (tahaarah) and numerous worldly benefits.

    The general shar’i principle with regard to this matter is that the lesser of two evils may be done in order to ward off the greater evil, if it is necessary to do one of them. Al-Ashbaah wa’l-Nazaa’ir by al-Subki, 1/45.

    But if it is medically proven that a specific vaccine causes harm to the body or that its harmful effects outweigh its effects of warding off disease, then it is not permissible to use it in that case, because the Prophet (peace and blessings of Allaah be upon him) said, “There should be neither harm nor reciprocating harm.”

    And Allaah knows best.

    ReplyDelete
  6. ஒரே ஒரு கேள்வி

    தடுப்பூசியில் உள்ள மருந்து எதனால் செய்யப்படுகிறது ?

    வைத்தியர்களின் பதில் மௌனம்

    ReplyDelete
  7. There are many high qualified Doctors like Doctor David ayub, Doctor Macola, Doctor Suzanne, David Miller, Doctor Paul Thomas (Only few mentioned here) are speaking the adverse effects of Vaccination in international level. There are many anti Vaccination societies in Europe, Australia, Canada etc.. . Recently in Rome there was mass protest against mandatory Vaccination. Anti Vaccination propaganda is new to Srilanka. That's the problem.
    டாக்டர் டேவிட் அயூப், டாக்டர் மகோலா, டாக்டர் போல் தோமஸ் ( சில உதாரணங்கள் மட்டும். பல டாக்டர்கள் இருக்கிறார்கள் ) போன்றவர்கள் பல வருடங்களாக தடுப்பூசிக்கு எதிராக சர்வதேச அளவில் பேசி வருகின்றனர். அவுஸ்திரேலியா, ஜரோப்பிய நாடுகளில் தடுப்பூசிக்கு எதிராக பல குழுக்கள் டாக்டர்களாலே வழி நடாத்த படுகின்றன. அண்மையில் 15 ஆஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இதாலி ரோம் நகரில் கட்டாய தடுப்பூசிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர். தடுப்பூசிக்கு எதிரான பேச்சு இலங்கைக்கு புதிதாக இருந்தாலும் சர்வதேச ரீதியில் இது பொதுவான விடயமாகும்.

    ReplyDelete
  8. பொத்துவிலுள்ள பாரம்பரிய (சலபுக்களுடைய) மகப்பேற்று நிலையத்தின் முகவரியை எல்லோறுக்கும் அறிவியுங்கள்.

    ReplyDelete
  9. Re-posting the same article again???

    Btw
    @ Aboo Rahid & @Unknown Well said!


    @Ins Vaccination is not a Medicine, it contains the same virus of that concern disease but not in fully active stage. Many kids were there who died due to this vaccination.

    The Sad story is Most of the public doesn't understand the tactics of this Medical Mafia.

    ReplyDelete

Powered by Blogger.