Header Ads



சிறிய நாடுகளான பெல்ஜியமும், குரேஷியாவும் எப்படி சாதிக்கின்றன தெரியுமா..?

பெல்ஜியம் அணி இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்றால், உலகப்கோப்பையை கைப்பற்றும் மிகச்சிறிய நாடு(நில அளவில்) என்ற பெருமையை பெறும்.

2018 கால்பந்து உலகக் கோப்பையில், உலகின் மிகப்பெரிய நாடுகளை வீழ்த்தி பெல்ஜியமும், குரேஷியாவும் அரையிறுதிக்குள் நுழைந்துள்ளன.

உலகப்கோப்பை கால்பந்தில் இதுவரை இந்த இரு நாடுகளும் இறுதிக்கட்டத்திற்கு நுழைந்ததில்லை. இந்நிலையில் இது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

பெல்ஜியம் அணி இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்றால், உலகப்கோப்பையை கைப்பற்றும் மிகச்சிறிய நாடு (நில அளவில்) என்ற பெருமையை பெறும். வெறும் 30,000 சதுர கிலோ மீட்டர்கள் பரப்பளவில் பெல்ஜியம் உள்ளது.

4.1 மில்லியன் மக்கள் தொகை கொண்ட குரேஷியா வெற்றி பெற்றால், 1950-ல் உருகுவே வெற்றி பெற்றதில் இருந்து கோப்பையை கைப்பற்றும் மிகச்சிறிய மக்கள் தொகை கொண்ட நாடு என்ற பெருமையை பெறும்.

மிகப்பெரிய நாடுகளில் திறமையானவர்கள் அதிகமாக இருப்பார்கள் என்ற நம்பிக்கைக்கு மாறாக, பெல்ஜியம் மற்றும் குரோஷியாவின் வெற்றி அமைந்துள்ளது.

முந்தைய உலகக் கோப்பை போட்டிகளை பார்த்தால், உருகுவே தவிர கோப்பையை வென்ற பெரும்பாலான நாடுகள் அதிக மக்கள் தொகையை கொண்டவை. பிரேசில்(207 மில்லியன்), ஜெர்மனி (83 மில்லியன்), பிரான்ஸ்(67 மில்லியன்), இத்தாலி(60மில்லியன்), இங்கிலாந்து(53மில்லியன்), அர்ஜண்டினா(43மில்லியன்) போன்ற அதிக மக்கள் தொகை நாடுகளே அதிகளவில் உலகக் கோப்பையை வென்றுள்ளன.

பெல்ஜியமும், குரேஷியாவும் இந்த போக்கை உடைத்துள்ளன- இந்த ஒரு முறை மட்டுமல்ல. கால்பந்து உலகப்கோப்பையை கைப்பற்றிய மிகக்குறைந்த மக்கள் தொகை கொண்ட நாடாக உருகுவே உள்ளது.

கால்பந்து உலகப்கோப்பையை கைப்பற்றிய மிகக்குறைந்த மக்கள் தொகை கொண்ட நாடாக உருகுவே உள்ளது.

கால்பந்தைவிட சாக்லேட், பியர், வறுத்த உணவுகளுக்குப் பெயர்போன பெல்ஜியம், 1986 உலகக் கோப்பையில் அரையிறுதிக்குள் நுழைந்தது. ஆனால், பெல்ஜியத்தின் வெற்றி மரடோனாவின் அர்ஜண்டினாவால் தடுத்து நிறுத்தப்பட்டது.

1998-ல் ஜெர்மனியை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்த குரேஷியா உலகை வியப்பில் ஆழ்த்தியது.
1990ல் நடந்த பால்கன் போரில் இருந்து மீண்டு வந்த குரேஷியாவின் வெற்றி அனைவரையும் கவர்ந்தது.

எவ்வாறு சாதிக்கின்றனர்?

சிறிய நாடுகள் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறுவது புதிய விஷயமன்று.

ஒரு உதாரணம் உசேன் போல்ட். வெறும் 2.1 மில்லியன் மக்கள் தொகை கொண்ட ஜமைக்காவை சேர்ந்த போல்ட், ஒலிம்பிக் போட்டிகளில் பல முறை தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

தங்களது சிறந்த வளங்கள் மீது கவனம் செலுத்துவதன் மூலமும், அவற்றை முழுவையாக பயன்படுத்திக்கொண்டதன் மூலமும் குரேஷியாவும், பெல்ஜியமும் வெற்றி பெற்றுள்ளன.

பெல்ஜியத்தில் வளம் என்பது பணமும், விளையாட்டின் புகழும் ஆகும்.

உலகின் முதல் 20 பணக்கார நாடுகளில் ஒன்றாக பெல்ஜியம் உள்ள நிலையில், பெல்ஜியம் மக்கள் தங்கள் விளையாட்டை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கின்றனர்.

2010 கணக்கின்படி பெல்ஜியத்தில் 17,000 கால்பந்து கிளப்புகள் உள்ளன. இதில் கிட்டதட்ட 1.35 மில்லியன் பேர் உறுப்பினராக உள்ளனர். இது அந்நாட்டு மக்கள் தொகையில் 10 சதவீதமாகும்.

இளம் வீரர்களை மேம்படுத்துதல்

நாடு முழுவதும் உள்ள கால்பந்து இளைஞர்கள் கிளப்பில், திறமை மேம்பாட்டுத் திட்டத்தை 2006ல் பெல்ஜியம் அதிகாரிகள் கொண்டுவந்தனர். இதன் விளைவு தற்போதைய உலகக் கோப்பையில் தெளிவாக தெரிந்தது.

பெல்ஜியத்தில் உள்ள முதல் மற்றும் இரண்டாம் தலைமுறை குடியேறி சமூகங்களை சேர்ந்த திறமைசாலிகளை ஊக்குவிக்கும் திட்டத்தை பெல்ஜியம் கொண்டுவந்தது. அரையிறுதியில் பிரான்ஸை எதிர்கொள்ள உள்ள பெல்ஜியம் அணியில், காங்கோ, மொராக்கோ, போர்ச்சுகல் மற்றும் கொசோவோ போன்ற நாடுகளைச் சேர்ந்த குடியேறிகள் உள்ளனர்.

பெல்ஜியம் நாட்டை போல நிதி வளம் குரோஷியாவுக்கு இல்லை என்றாலும், விளையாட்டுகளில் குரோஷியா தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. 2016 ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் 207 நாடுகளில் குரோஷியா 17வது இடத்தை பிடித்தது.

அரசு முதலீடு

யுகோஸ்லாவியா நாடாக குரோஷியா இருந்தபோது, விளையாட்டை மேம்படுத்த அரசின் முதலீடு குரேஷியாவுக்கு கிடைத்தது. இதன் மூலம் சிறந்த பயிற்சியை குரோஷியா அளித்தது.

விளையாட்டுகளில் பங்கு பெரும் வீரர்களில் எண்ணிக்கையும் இங்கு அதிகமாக உள்ளது. குரோஷியாவில் 12 லட்சம் பதிவு செய்யப்பட்ட கால்பந்து வீரர்கள் உள்ளனர். இது மக்கள் தொகையில் 3% ஆகும்.

இந்த சதவீதம் பிரேசில் நாட்டை விட அதிகம். பிரேசிலில் மக்கள் தொகையில் பதிவு செய்யப்பட்ட கால்பந்து வீரர்கள் 1% உள்ளனர்.

மேலும் பெல்ஜியம், குரோஷியா நாடுகளைச் சேர்ந்த நட்சத்திர வீரர்கள், தற்போது மிகப்பெரிய சர்வதேச கிளப்புகளில் விளையாடுகின்றனர். இதன் மூலமும் இருநாடுகள் பலன் பெறுகின்றன.

ரஷ்யாவில் நடந்து வரும் உலகக் கோப்பையில், இரு சிறிய நாடுகளும் ஆதிக்கம் செலுத்துவதற்கு இவையே முக்கிய காரணங்களாக உள்ளன.

1 comment:

Powered by Blogger.