July 03, 2018

ஐ.நா.விடம் ஹக்கீம் முறைப்பாடு

சட்­டத்­தையும் ஒழுங்­கையும் நிலை­நாட்டக் கட­மைப்­பட்­ட­வர்கள் உட­ன­டி­யாக செயற்­பட்­டி­ருந்தால் அம்­பாறை, கண்டி இனக்­க­ல­வ­ரங்­களைக் கட்­டுப்­ப­டுத்­தி­யி­ருக்க முடி­யு­மெனத் தெரி­வித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம், அந்த இன­வாத வன்­செ­யல்­க­ளுக்குத் துணை­போ­ன­தாகக் கூறப்­பட்ட பொலிஸ் உய­ர­தி­கா­ரி­களை சுட்­டிக்­காட்டி அவர்­களை இட­மாற்றம் செய்­யு­மாறு வேண்­டுகோள் விடுத்த போதும்  அவ்­வாறு நடை­பெ­ற­வில்லை என  விசனம்

தெரி­வித்தார். அத்­துடன் வெறுப்­பூட்­டக்­கூ­டிய பேச்­சுக்­களை தடை­செய்­வ­தற்­கான சட்­டமும் கிடப்பில் போடப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர் தனது அதி­ருப்­தியை வெளி­யிட்டார்.

தற்­பொ­ழுது இலங்கை  வந்­துள்ள ஐ.நாவின் இடைக்­கால வதி­விடப் பிர­தி­நிதி  ரெரன்ஸ் டி.ஜோன்ஸ், இங்­குள்ள ஐ.நாவின் நல்­லி­ணக்­கத்­திற்கும் அபி­வி­ருத்­திக்­கு­மான ஆலோ­சகர் கீதா சப்­ஹர்வால் சகிதம் அமைச்சர் ஹக்­கீமை நகர திட்­ட­மிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சில் சந்­தித்து யுத்­தத்­திற்குப் பின்­ன­ரான சூழ்­நிலை தொடர்பில் கலந்­து­ரை­யா­டிய போதே அவர் இதனைத் தெரி­வித்தார்.  

நிலை­மாறு கால நீதி தொடர்பில் ஏற்­கெ­னவே மியன்மார், இந்­தோ­னே­சியா,மாலை­தீவு போன்ற நாடு­களில் பணி­பு­ரிந்து நீண்ட அனு­பவம் வாய்ந்த  ஐ.நாவின் இடைக்­கால வதி­விட பிர­தி­நிதி  ரெரன்ஸ் டி.ஜோன்ஸ் மூன்று மாத காலம் இலங்­கையில் தங்­கி­யி­ருந்து இங்­குள்ள கள­நி­லை­வரம் தொடர்பில் உரிய  கவனம் செலுத்தி வரு­வது குறிப்­பி­டத்­தக்­கது.

ரெரன்ஸ் டி.ஜோன்ஸ்,  கீதா சப்­ஹர்வால் ஆகியோர் யுத்­தத்­திற்குப் பின்­ன­ரான சூழ்­நி­லையில் நாட்டில் ஏற்­பட்டு வரும் மாற்­றங்கள் தொடர்­பிலும் நிலை­மா­று­கால நீதி தொடர்­பிலும் கேள்­வி­களை எழுப்­பி­ய­போது அமைச்சர் பின்­வ­ரு­மாறு பதி­ல­ளித்தார்.

இலங்­கையில் முன்னர் நீண்­ட­கா­ல­மாக அவ­ச­ர­கால சட்டம் நடை­மு­றையில் இருந்­த­தனால் சட்­டத்­தையும் ஒழுங்­கையும் நிலை­நாட்­டு­வ­தற்குப் பொறுப்­பா­ன­வர்கள் பொது­வான சட்­டங்­களின் கீழ் செயற்­ப­டாமல் குறுக்கு வழி­களை கையாள்­வ­தற்குத் தொடர்ச்­சி­யாக எத்­த­னித்து வரு­கின்­றனர். இதனால் நீதியை நிலை­நாட்­டு­வதில் தாம­தமும் முறை­கே­டு­களும் ஏற்­பட்டு வரு­கின்­றன. துர­திஷ்­ட­வ­ச­மாக தேசிய அர­சினுள் நில­வு­கின்ற முறுகல் நிலையின் கார­ண­மாக ஸ்திர­மற்ற தன்மை காணப்­ப­டு­வ­தான ஒரு தோற்­றப்­பாடு உள்­ளது. ஆயினும் முன்­னைய அர­சாங்­கத்­தை­விட இந்த ஆட்­சியில் குற்­றச்­செ­யல்­களை கட்­டுப்­ப­டுத்தும் பொறி­மு­றை­களில் குறிப்­பி­டத்­தக்க முன்­னேற்றம் அவ­தா­னிக்­கப்­ப­டு­கின்­றது.

அண்­மையில் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் புன்­னக்­கு­டாவில் பொது­மக்­க­ளுக்கு சொந்­த­மான காணியில் இரா­ணுவ ஆயு­தக்­க­ளஞ்­சியம் அமைக்­கப்­படும் விவ­காரம் சர்ச்­சையைக் கிளப்­பி­யது. யுத்தம் முடி­வ­டைந்­துள்ள போதிலும் கூட வடக்­கிலும் கிழக்­கிலும் பொது­மக்­க­ளுக்கு  சொந்­த­மான காணி­களில் படை­யி­னரின் பிர­சன்னம் பொது­மக்கள் மத்­தியில் சந்­தே­கத்தை உண்­டு­பண்­ணி­யுள்­ளது.

மன்னார், சிலா­வத்­து­றையின் நகர் பகுதி கடற்­ப­டை­யி­னரின் கட்­டுப்­பாட்­டி­லி­ருந்து முழு­மை­யாக விடு­விக்­கப்­ப­ட­வேண்­டு­மென்ற கோரிக்­கையை தொடர்ச்­சி­யாக முன்­வைத்து வரு­கின்றோம். திகன சம்­ப­வத்தில் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு உரிய முறையில் இழப்­பீ­டுகள் வழங்­கப்­ப­ட­வில்லை என்ற குறை நீடித்து வரு­கின்­றது.

இன­ரீ­தி­யான வன்­மு­றை­களின் போது கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­படும் கலகம் அடக்கும் பொலிஸ் படையில் மூவி­னத்­தி­னரும் இடம்­பெற செய்­யப்­ப­ட­வேண்டும் என்ற கோரிக்­கை­யையும்  நாங்கள் முன்­வைத்­துள்ளோம். ஒரு சம்­பவம் நடை­பெற்ற உட­னேயே போலி­சாரே அங்கு விரைய வேண்டி இருக்­கி­றது. பொலி­சா­ரினால் நிலை­மையை கட்­ட­ுப்­ப­டுத்த முடி­யா­த­ போதே படை­யினர்  வர­வ­ழைக்­கப்­ப­டு­கின்­றனர். பொலிஸ் திணைக்­க­ளத்தை பொறுத்­த­வரை சீர்­தி­ருத்­தங்கள் அவ­சி­ய­மாகும். குற்­றச்­செ­யல்­களை கையாளும் விதம் குறித்து புதிய சுற்­று­நி­ரு­பங்கள் ஊடாக அறி­வு­றுத்­தல்கள் வழங்­கப்­பட வேண்டும்.

குற்­றச்­செ­யல்கள் அதி­க­ரிப்­ப­தற்கும் இன­வாத வன்­செ­யல்கள் ஏற்­ப­டு­வ­தற்கும் சமூக வலைத்­த­ளங்­களும் பெருமளவு காரணமாகும்.அவற்றினூடாக பதிவேற்றம் செய்யப்படும் உணர்வுகளைத் தூண்டக்கூடிய தவறான செய்திகளை கண்டறிந்து அவற்றை வடிகட்டி முறையான விதத்தில் கையாள்வதற்கான வழிவகைகள் ஓரளவு மேற்கொள்ளப்படுவதாகத் தெரியவருகிறது என்றார்.

அமைச்சர் ஹக்கீம் கூறியவற்றை கவனமாக செவிமடுத்த ஐ.நா. அதிகாரிகள், அந்த விடயங்கள் தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படும் என்றனர். இந்த சந்திப்பில் அமைச்சரின் இணைப்பு செயலாளர் ரஹ்மத் மன்சூரும் உடனிருந்தார்.

2 கருத்துரைகள்:

சில வருடங்களுக்கு முன்னர் தான் “இலங்கை விடயங்களில் UN தலையிடகூடாது” என்று ஊர்வலங்கள், கையெழுத்துக்கள், முஸ்லிம்நாட்டு பயணங்கள் எல்லாம் செய்து தங்கள் நாட்டு பற்றை காட்டினார்கள்.

இப்போ தலையிடவேண்டும் என கெஞ்சுகிறார்கள்.

கடைசியாக ஞானசேர பிக்கு தானே இதை கண்டுபிச்சாரு, இவர்களின் நாட்டு பற்று என்பது உலக மகா நடிப்பு என்று.

நீங்கள் கூறுவது ஒன்றும் இடம்பெறாவிட்டால் என்ன பூனாவிக்கு அரசோடு இருக்கனும்.. சத்தியமும் சாணக்கியமும் இந்த சமூகத்தை காட்டிக்கொடுத்து கூட்டியும் கொடுக்கிறார்கள்...

Post a Comment