Header Ads



இலங்­கையின் முத­லா­வது, பள்­ளி­வா­ச­ல் நூத­ன­சா­லையாகிறது - மாற்று மதத்தினரும் தினமும் பார்வையிடலாம்


பேரு­வ­ளையில் அமைந்­துள்ள இலங்­கையின் முத­லா­வது பள்­ளி­வா­ச­லான மஸ்­ஜிதுல் அப்­ராரை  முஸ்லிம் அல்­லாத ஏனைய சமூ­கத்­தினர் தினமும் பார்­வை­யி­டு­வ­தற்­கான ஏற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளன. அப்ரார் பள்­ளி­வா­சலில் முஸ்­லிம்­களின் சமயம், கலை, கலா­சாரம் என்­ப­வற்­றையும் பிர­தி­ப­லிக்கும் வகை­யி­லான நூத­ன­சா­லை­யொன்றும் நிறு­வப்­ப­ட­வுள்­ளது.

முஸ்­லிம்­க­ளுக்கும் ஏனைய சமூ­கங்­க­ளுக்­கு­மி­டையில் நல்­லி­ணக்­கத்தை பலப்­ப­டுத்தல், தேசிய ஒரு­மைப்­பாட்­டுக்கு வழி சமைத்தல் மற்றும் ஏனைய சமூ­கங்கள் இஸ்­லா­மிய கலை, கலா­சாரம் மற்றும் வர­லா­று­களில் தெளிவு பெறுதல் என்­ப­ன­வற்றை இலக்­காகக் கொண்டே மஸ்­ஜிதுல் அப்­ராரை ஏனைய சமூ­கத்­தினர் பார்­வை­யி­டு­வ­தற்­கான ஏற்­பா­டுகள் செய்­யப்­ப­ட­வுள்­ளன என முஸ்லிம் சமய விவ­கார அமைச்சின் பணிப்­பாளர் ஏ.பி.எம்.அஷ்ரப் தெரி­வித்தார்.

இது தொடர்­பான கலந்­து­ரை­யா­ட­லொன்று எதிர்­வரும் 31ஆம் திகதி அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் எம்.எம்.ஏ.ஹலீம் தலை­மையில் அப்ரார் பள்­ளி­வா­சலில் நடை­பெ­ற­வுள்­ளது. இக்­க­லந்­து­ரை­யா­டலில் பள்­ளி­வாசல் நிர்­வா­கிகள், பிர­தே­சத்தின் அர­சியல்வாதிகள், முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் அதி­கா­ரிகள் என்போர் கலந்து கொள்­ள­வுள்­ளனர். 

பேரு­வ­ளையில் அமைந்­துள்ள முத­லா­வது பள்­ளி­வா­சலை முஸ்லிம் அல்­லாத ஏனைய சமூ­கத்­தினர் பார்­வை­யி­டு­வ­தற்­காக திறந்­து­விடும் அங்­கு­ரார்ப்­பண நிகழ்வு எதிர்வரும் செப்டெம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் ஏற்பாடு செய்யப்படுமெனவும் நிகழ்வில் ஜனாதிபதியும் பிரதமரும் கலந்து கொள்வார்கள் எனவும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.