July 01, 2018

"முஸ்லிம்கள் சுயநலவாதிகள் என, பௌத்தர்ககள் நம்புகின்றனர்"

முஸ்லிம்கள் தொடர்பாக பெரும்பான்மை சமூகத்தின் நிலவும் சந்தேகங்களுக்கு தெளிவுகளை முன்வைக்க வேண்டிய தருணம் உருவாகியுள்ளதாக பேருவளை ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும், பாதிஹ் கலாபீடத்தின் பணிப்பாளருமான கலாநிதி எச்.எல்.எம். ஹாரிஸ் தெரிவித்தார்.

உடுநுவர மீவலதெனிய மஸ்ஜிதுல் ஹுதா ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்ற பைதுல்மால் நிதியத்தின் அங்குரார்ப்பண வைபவத்தில் விசேட பேச்சாளராக் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார். பள்ளிவாசல் தலைவர் ஓ.எல்.ஏ. ஆதம்லெப்பை தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் வணிகத்துறை பயிற்சியாளரும் ஆலோசகருமான அல்-ஹாஜ் எம். பஹ்மி பாரூக் மற்றும் அக்குறனை பைதுல்மால் நிதியத்தின் தலைவர் அல்-ஹாஜ் ஈ.எஸ்.எச்.எம். இஸ்ஸதீன் ஆகியோரும் கலந்து கொண்டனர். இங்கு கலாநிதி எச்.எல்.எம். ஹாரிஸ் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
எனது கலாநிதி ஆய்வுக்காக நாட்டில் பல விகாரைகளுக்கு சென்று பௌத்த தேரர்களை சந்தித்தேன். இதில் நான் கண்ட அனுபவம் பௌத்தர்களில் பெரும்பான்மையானவர்கள் முஸ்லிம்கள் சுயநலவாதிகள் என்ற மனப்பாங்கைக் கொண்டுள்ளனர். இம்மனப்பாங்கை மாற்றியமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. நாம் பெரும்பான்மை சமூகத்தின் தேவைகளை நிறைவேற்றி அவர்களின் உள்ளங்களைக் கவர வேண்டும். இதன் மூலம் சகவாழ்வை சாத்தியப்படுத்தலாம். முஸ்லிம் சமூகம் குறுகிய வட்டத்திற்குள் வாழ முடியாது. இவ்வட்டத்திற்குள் இருந்து வெளியேறுவதற்கு பைதுல்மாலைப் பயன்படுத்துவோம்.

இந்நாட்டிற்கு வந்த அபுல் ஹஸன் அல் நக்வி என்ற அறிஞர் ‘இந்நாட்டில் தஃவாவுக்கான வாயில்கள் மூடப்பட்டாலும் அஹ்லாக்குடைய வாயில்கள் திறந்து விடப்பட்டுள்ளன’ என்று கூறினார். எமது நடத்தைகள் , பண்புகள் மூலம் இஸ்லாம் தொடர்பான பிழையான புரிதல்களை மாற்றியமைக்க முடியும். எனவே, பைதுல்மால் வேலைத்திட்டத்தில் முஸ்லிமல்லாதோரும்; கவனம் செலுத்தப்பட வேண்டும்.

சமூகத்தின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு பைத்துல்மால் நிதியம் அவசியம். இது சமூக மாற்றத்திற்கான ஒரு அடிப்படையாகும். சமூகத்தைப் பற்றி சிந்தித்து திட்டமிட்டு செயற்படும் நிறுவனங்களால் மட்டும் சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்கவும் சமூக மாற்றத்தை ஏற்படுத்தவும் முடியும். சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு சமூகத்தில் ஒரு சாரார் சமூகப் பிரச்சினைளை ஆராய்ந்து திட்டமிட்டு செயற்படுதல் அவசியம்.
சமூகப் பாதுகாப்பு அல்லது சமூக உத்தரவாதம் என்பது சமூகத்தின் அடிப்படைப் பணியாகும். இது பற்றி அல்குர்ஆனும் ஹதீஸும் அதிகளவில் பேசியுள்ளது. சமூகப் பாதுகாப்பு அல்லது சமூக உத்தரவாதத்தை உறுதிப்படுத்துவது சமூக கடமை மட்டுமல்ல சமூகப் பொறுப்புமாகும். சமூகத்தில் தனிமனிதர்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாது இறைசிந்தனை , தக்வா பூரணப்படுத்தப்பட மாட்டாது.

‘ஈமான் கொண்டவர்களே, நீங்கள் சுஜுத் செய்யுங்கள் நன்மையான காரியங்களில் ஈடுபடுங்கள், நீங்கள் வெற்றி பெறுவீர்கள்’ என்று அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது. எவருக்கு சமூகப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு கிடைக்கின்றவர்கள் அல்லாஹ்தஆலாவினால் தெரிவு செய்யப்பட்ட மனிதர்கள் ஆவர். சமூகப் பணிகளில் ஈடுபடுவது என்பது அல்லாஹ்தஆலா அருளிய அருளாகும்.
முஸ்லிம் சமூகத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டால் அவரின் துன்பங்களில் மற்றைய முஸ்லிம் பங்குகொள்வான். இதற்கு அடிப்படையாக பைத்துல்மால் நிதியம் அமைகின்றது. உலகில் ஒரு முஸ்லிம் மற்றைய முஸ்லிமுக்கு பிரயோசனமுள்ளவனாக வாழ்வது அவசியம். இப்பண்பு முஸ்லிமின் அடிப்படைப் பண்பாகும். நாம் மற்றவர்களுக்கு உதவும் போது அல்லாஹ்தஆலாவின் உதவி எமக்குக் கிடைக்கின்றது.

சமூகத்தை பைத்துல்மால் நிதியம் மூம் பராமரிக்க முடியும் என்பதால் பைதுல்மால் நிதியத்தில் சமூகம் கவனம் செலுத்த வேண்டும். ஒரு முஃமின் சமூகப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல் அவன் முஃமினாக இருக்க முடியாது என்று சூரத்துல் மாஊன் இயம்புகின்றது. அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டவன் சமூக விடயங்களில் கவனம் செலுத்துவான். ஒரு முஸ்லிம் நலல் காரியங்களில் தன்னால் செலவு செய்ய முடியாத சந்தர்ப்பத்தில் மற்ற மனிதனை செலவு செய்யத் தூண்டுவது அவசியம். அல்லாஹ்வை நம்புபவன் சமூகப் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவான்.

சமூகப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு அல்லாஹ்தஆலாவினால் தெரிவு செய்யப்பட்ட நல்ல மனிதர்களுடாக நடக்கும். அல்லாஹ் மனிதர்களுக்கு செல்வத்தை கொடுப்பதன் நோக்கம் செல்வம் அல்லாஹ்வின் அடியார்களின் நலனுக்கு செலவு செய்யப்பட வேண்டும் என்பதாலாகும். சமூகத்திற்கு பயன்படுத்தப்படும் செல்வம் தொடரும். இச்செல்வம் பயன்படுத்தப்படாத போது அவற்றை எடுத்து அல்லாஹ்தஆலா எம்மிடமிருந்து எடுத்து மற்றவர்களிடம் ஒப்படைப்பான். எமது செல்வம் எமது திறமைகளால் பெற்றுக் கொள்ளப்பட்டதல்ல. இச்செல்வம் அல்லாஹ்வினால் தரப்பட்டதாகும் என்பதை மனதிற் கொள்ள வேண்டும்.
சமூகத்தில் வாழும் பலவீன மனிதர்கள் தான் சமூத்திற்கு ரிஸ்க் கிடைக்க காரணமானவர்களாவர் என்பது இஸ்லாமிய கண்ணோட்டமாகும். இதில் ஏழைகள் , விதவைகள் , அனாதைகள் , வயோதிபர்கள், நோயாளிகள் ,விசேட உள்ளடங்குவர். எமக்கு அல்லாஹ்தஆலாவின் உதவிகள் கிடைக்க சமூகத்திலுள்ள பலவீனமானவர்களாவர் அடிப்படையாக உள்ளனர். பைதுல்மால் நிதி அடிப்படையில் பலவீனமானவர்களுக்கான நிதியாகும். இம்மனிதர்கள் புறக்கணிக்;கப்படும் போது அல்லாஹ்தஆலாவின் உதவி எவ்வாறு கிடைக்கும்; என்பது பற்றி சிந்திக்க வேண்டும். எனவே, பலவீனமான மனிதர்கள் பற்றி அதீத கவனம் செலுத்துவோம்.

மனிதர்களில் சிறந்தவன் மனிதர்களுக்குப் பிரயோசனமானவன் என்பது நபிமொழியாகும். ஒரு முஸ்லிமின் துன்பங்களை நீக்கும் போது அல்லாஹ்தஆலா அவனின் துன்பங்களை இம்மையிலும் மறுமையிலும் நீக்குவான். முஸ்லிம் சமூகத்தில் ஒருவருக்கு ஏற்படும் துன்பம் மற்றைய முஸ்லிம் பங்கெடுப்பான். ஒரு முஸ்லிமின் உடலில் ஒரு அங்கத்தில் ஏற்படும் பாதிப்பு ஏனைய அங்கங்களைப் பாதிக்கும். எமது நாளாந்த கருமங்களை சதகாவுடன் ஆரம்பிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது அவசியம். ஒரு முஸ்லிமின் அடிப்படை பண்புகளில் ஒன்று மற்றவர்களுக்குப் பிரயோசனமானவனாக வாழ்வது என்ற அடிப்படையில் பைதுல்மால் நிதியத்தின் செயற்பாடுகள் சிறந்ததொரு முன்மாதிரியாகும்.

இந்நாட்டு முஸ்லிம்கள் பல்லினங்கள் மத்தியில் வாழ்வதால் சகவாழ்வு என்ற விடயம் முக்கியத்துவம் பெறுகின்றது. எனவே எமது வாழ்வியலில் சகவாழ்வை உறுதிப்படுத்துவதற்கு பைதுல்மால் நிதியத்தைப் பயன்படுத்த முடியும்.
இஸ்லாம் மற்றவர்களில் தங்கி வாழ்வதை விரும்புவதில்லை. எமது தேவைகளுக்கு மற்றவர்களை எதிர்பார்ப்பதை விரும்புவதில்லை. இஸ்லாம் உழைப்பை ஊக்குவிக்கின்றது. நாம் கையேந்துபவர்களாக அன்றி கொடுப்பவர்களாக இருக்க வேண்டும். செல்வம் மற்றும் வசதிவாய்ப்புக்கள் இருந்தால் மட்டும் செலவு செய்வது என்பதல்ல. செல்வம் மற்றும் வசதிவாய்ப்புக்கள் இல்லாத வேளைகளிலும் மற்றவர்களுக்கு செலவு செய்தால் வசதி வாய்ப்புக்கள் வரும் போது செலவு செய்வதற்கான எண்ணம் ஏற்படும்.

பைதுல்மால் சதகா மூலம் நாம் பயன்பெறுவது எப்படி என்பது பற்றி சிந்திக்கக் கூடாது. சமூகத்தில் பலவீனமார்களை பலப்படுவத்துவதற்கும் பராமரிப்பதற்கும் பலமானவர்களை வளர்த்து விடுவதற்கும் பைதுல்மால் நிதியத்;தைப் பயன்படுத்த முடியும். இந்நாட்டு மஸ்லிம்கள் வெளிநாட்டு நன்கொடைகளை எதிர்பார்ப்பது மிக மோசமான பண்பாகும் என்று எண்ணுகின்றேன். எமது சமூகத்திலுள்ள செல்வந்தர்களின் நிதி எமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள போதுமானவையாகும்.

எமது சமூகம் செல்வந்தர்கள் மூலம் சமூகத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவில்லை என்பவதற்குச் சிறந்த உதாரணம் சமூகத்திற்குரிய ஊடகமொன்று இதுவரை உருவாக்கிக் கொள்ளாமையாகும். எமக்கு மத்தியில் நளீம் ஹாஜியார் போன்ற எத்தனையோ நளீம் ஹாஜியார்கள் உள்ளனர். ஆனால் நளீம் ஹாஜியாரிடம் காணப்பட்ட மனம் இவர்களிடம் இல்லை என்பது கவலைக்குரியததாகும்.

சமூகத்தின் வயிற்றுப்பசிக்கு மட்டும் பைதுல்மால் உதவாது சமூகத்தின் சகல தேவைகளையும் நிறைவு செய்வதில் பங்காற்ற வேண்டும். முஸ்லிம் சமூகத்தின் நோய்களில் ஒன்று போதைப்பொருள் பாவனையாகும். இப்போதைப்பொருள் பாவனையிலிருந்து இளைஞர்களை மீட்டெடுப்பதற்கு பைதுல்மாலைப் பயன்படுத்துவது அவசியம். பெரும்பான்மை சமூகத்திற்குள் வாழும் முஸ்லிம்கள் மு;னனேறுவதற்குரிய ஒரே ஆயுதம் கல்வி மட்டுமதாகும். எமது பொருளாதாரங்கள் அழிக்கப்படும் போது கல்வியால் மட்டும் எழுச்சியடைய முடியும் என்றார்.

எம்.எம்.எம். ரம்ஸீன்

6 கருத்துரைகள்:

This comment has been removed by the author.

Dear sheik.very good intension.
No need to worry.already ACJU PUBLISHED 5SEPTOR OF BOOK.
REGARDING OF YOUR CONCERN.
PLEASE TRY TO ISSUE THAT BOOK ENTIRE THE COUNTRY.TO GETHER ALL IF YOU SAKE OF ALLAH.MAY GUIDE US GOOD WAY

Iam sorry to .our success not only educated.education with islam.
Doctor with islam
Business with islam only can be success.

முஸ்லீம் வியாபாரிகளுக்கு ஊடக துறையில் முதலீடு செய்வது சம்பந்தமான தெளிவூட்டல் வழங்கப்பட வேண்டும் .

அரசாங்கம் 'சிங்களம் மட்டும்' என்ற மொழி வட்டத்திலிருந்து வெளியே வந்து,  நாட்டின் நாலா புறங்களிலும் செறிந்து வாழும்  பெரும்பாலான முஸ்லிம்களது தாய் மொழியாகிய தமிழிலும் சகல அரச பணிகளையும் பெற்றுக் கொள்ளக்கூடிய ஒரு நீதியும் சமத்துவமுமான ஒரு சூழலை  இந்நாட்டில் ஏற்படுத்திக்  கொடுக்க வேண்டும்.

அப்போது, பெளத்தர்கள் எதிர்பார்க்கும் 'சுயநலமற்ற இலங்கையர்'களாக இலங்கை முஸ்லிம்களைக் காணலாம்.  இது தமிழர்கள் விடயத்திலும் பொருந்தும்.

சக மக்களிடம் பரஸ்பர சமூக, தேசியக் கடமைகளை எதிர்பார்க்கும் ஓர் சமூகம் தம்மோடு வாழும் மக்களின் உரிமைகளை அளித்துவிடுவதுவும் ஓர் தார்மீக விதியாகும். 

முஸ்லிம் அரசியல்வாதிகளில் பலர் சிங்கள மொழியில் கற்றோர் ஆகையால், அவர்களுக்கு இந்த மொழிப் பிரச்சினை இல்லை என்பதனால் அவர்கள் இவ்விடயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து இதற்கான தீர்வைப் பெற்றுத் தர முயற்சி செய்ய மாட்டார்கள்.  

தவிரவும், மக்களின் சிங்கள மொழிப் பிரச்சினைகளையும் தற்காலிகமாகத்  தீர்த்து வைக்க தம்மை ஒவ்வொரு தடவையும் அண்டி வரவேண்டிய நிலைக்கு  மக்களை வைத்துக் கொள்வதை அவர்கள் அரசியல் லாபமாகக் கருதுகின்றனர்.

அத்துடன், சிறுபான்மையினருக்கு எதிரான இனவாத சக்திகளை பகிரங்கமாக எதிர்க்கும் ஓர் சூழலும் உருவாக்கப்படல் வேண்டும்.

அரசியல்வாதிகள் மூலமாக முயற்சித்து இதுவரை வெற்றி காணாத இந்தக் குறைகளுக்கான தீர்வுகளை,  பெரும்பான்மை பெளத்த மக்களோடு நல்ல நட்பைப் பேணும்  கலாநிதி ஹாரிஸ் போன்றவர்கள் சம்பந்தப்பட்டவர்களை அணுகி, பெற்றுத் தர முயற்சிப்பார்கள்  என்று எதிர்பார்ப்போமாக.

Sri Lanka is not a muslim coutry as some thiks and act . In all part of coutry we have depends coexistence a fundamental needs .we have many problems our community members face numerous problems on day to day life some places they were deprived doing business .
No action has been taken I agree with writer as so many others who writes about problems cropped up recently they not analysed remedies and how our brothers should act.
Preaching the problem without any solution not going to save our community immediately
We can agree problem similar very difficult to solve in its nature vary depending place times and many other social issues .
Our community should have own media We have to go to grassroot level to analyse problems. Thousands of our students studying in different environments .
Numerous crisis in day to day life of our people without any remedies specially Muslims living in Singhalese dominated areas
We earnestly appeal all concerned writer and other learned people ulemas politicians have some immediate solutions discussion on this matter rather than preaching more on this subject

Post a Comment