Header Ads



ரஞ்சன் ராமநாயக்கா, பொய் சொன்னாரா...?

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சம்பந்தமாக அமெரிக்காவின் நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட செய்தி குறித்து பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க கூறியுள்ள கருத்துக்கு அந்த செய்தியை எழுதிய ஊடகவியலாளார் மாரியா ஹபீ ஹபீபி பதிலளித்துள்ளார்.

மாரியா ஹபீ ஹபீபி தனது டுவிட்டார் பக்கத்தில் இந்த பதிலை வெளியிட்டுள்ளார்.

நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையில் குறித்த செய்தியை எழுதிய பெண் ஊடகவியலாளருடன் தான் உரையாடியதாக பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க கூறியிருந்தார்.

அத்துடன் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் தகவல்களின் படியே அவர் அந்த செய்தியை எழுதியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

எனினும் பிரதியமைச்சர் கூறியுள்ளதை மறுத்துள்ள மாரியா ஹபீ ஹபீபி, பிரதியமைசர் கூறியதில் உண்மையில்லை எனவும், தான் குறித்த செய்தி சம்பந்தமாக எந்த நேர்காணல்களையும் நடத்தவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அரசியல் நிலைப்பாடுகளில் தலையிட முடியாது என்றும் தான் பிரதியமைச்சரிடம் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பல்வேறு தரப்பு மூலங்களை அடிப்படையாக கொண்டு தான் முன்னாள் ஜனாதிபதி சம்பந்தப்பட்ட செய்தி கட்டுரையை எழுதியதாகவும், எந்த காரணங்களின் அடிப்படையிலும் தனக்கு தகவல்களை வழங்கிய மூலங்கள் தொடர்பான விபரங்களை வெளியிடப் போவதில்லை எனவும் மாரியா ஹபீ ஹபீபி மேலும் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.