Header Ads



புலிகளை ஆதரித்த விஜயகலாவை விரட்டியடிக்க வேண்டும் - ஹேமகுமார

(அஷ்ரப் ஏ. சமத்)

விஜயகலா  அமைச்சுப் பதவியில்  மட்டுமல்ல அவா்  பாராளுமன்ற பதவியிலிருந்தும் வெளியேற்றப்படல் வேண்டும். இதற்காக சபாநாயகா்  உட்பட ஏனைய 224 பா.ம. உறுப்பிணா்களும் ஒருமித்துக் குரல் எழுப்புதல்  வேண்டும். இநத நாட்டின்  இறைமைக்கும், பாதுகாப்புக்கும் ஜக்கியத்துக்கும் சட்டம் ஓழுங்குக்கும் கட்டுப்பட்டே அவா் பாராளுமன்றத்திலும் , அமைச்சா் பதவியிலும் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டவா்.   அவா் வெளிநாடுகளில் உள்ள டயஸ் போராவிடமிருந்து  டொலா்களைப் பெற்றுக் கொண்டு தான்   இவ்வாறாக  கருத்துக்களைத்  தெரிவித்துள்ளாா். இவரது பாராளுமன்ற பதவியையும் கூட அகற்றுதல் வேண்டும் . இல்லாவிடில் விஜயகலாவிற்கு எதிராக மக்கள் தெற்கில் வீதிக்கு  இறங்குவாா்கள். என மேல் மாகாண ஆளுனா்  கேமக்குமார நாணயக்கார தெரிவித்தாா்.

மேல் மாகாண ஆளுனா்  கேமக்குமார நாணயக்கார  கொழும்பு அலுவலகத்தில் இன்று(5)  முன்னாள் இராஜாங்க அமைச்சா் விஜயகலா பற்றிய விசேட ஊடகமாநாட்டில் மேற்கண்ட தகவலைத்   தெரிவித்தாா்.


அவா் தொடா்ந்து அங்கு தகவல் தருகையில்

நான் ஜ.தே.கட்சிப் பாரளுமண்ற உறுப்பிணராக இருந்த காலத்தில்தான்  விஜயகலாவின்  கணவா் மகேஸ்வரனும் சக பாராளுமன்ற உறுப்பிணராக இருந்தாா்.  அவரின் தந்தை கம்பஹாவில் ஒரு பழைய இரும்பு பொருட்கள் வாங்கி விற்கும் கடையொன்றை வைத்திருந்தாா்.  அதன் பின்னா் மகேஸ்வரன் பாராளுமன்ற உறுப்பிணராகினாா்.  அவா் வடக்குக்கு பொருட்கள் கொண்டு செல்வதற்கு கப்பல் போக்குவரத்து கம்பணி திடிரென  ஆரம்பித்தாா். அதற்கும் விடுதலைப்புலிகளிடமே பணம் வந்திருக்கும். யாழ் பொருட்கள் ஏற்றி இறக்கினாா் சம்பாதித்தாா். பணக்காரா் ஆனாா்.    காலம் சென்ற மகேஸ்வரன் கொட்டேகேனையில் உள்ள ஒர் இந்துக் கோவிலில் வைத்து விடுதலைப் புலிகளினாலேயே சுட்டுக் கொல்லப்பட்டாா்.  நானே  முதன் முதலில் அவ்விடத்தில் சென்றவன்.  அவரது மரணச் சடங்குகளை செய்து வெள்ளவத்தையில் அவரது  வீட்டுக்கு மகேஸ்வரனைக் கொண்டு செல்லும்போது வீதியில் விழுந்து விழுந்து விடுதலைப்புலிகளைச் சாபம்மிட்டு  செய்து நிலத்தில் விழுந்து மண்னை வீசி அழுதவா் தான் இந்  விஜயகலா  அந்தச் சம்பவம் விஜயகலாவுக்கு மறந்து இருக்கலாம் . எனக்கு இன்னும் ஞாபகம் உள்ளது.

வடக்கில்  முன்னாள் ஜனாதிபதி தொட்டு இந்நாள் ஜனாதிபதி வரையும்  பாதை பாடசாலை தணியாா் காணி விடுவிப்பு போன்ற பல்வேறு அபிவிருத்திகள் நடைபெற்று வருகின்றன.  இவ்வாறு டயஸ்போராவின் சம்பளங்களைப் பெற்றுக் கொண்டு வடக்கின் வெள்ளை உடுப்பு அணிந்த ஒர் அரசியல்வாதியும் இவ்வாறு தான் பேசுகின்றாா்.  மற்றையவா் சிவாஜிலிங்கம் இவா்கள்  இந்த நாட்டின் இறைமைக்கு விரோதமான கருத்துக்களை தமிழ் மக்கள் மணதில் ஏற்படுத்தி மீண்டுமொறு யுத்தத்தையும் உருவாக்குவதற்கு முயற்சிக்கின்றாா்கள்.

வித்தியா கொலை வழக்கில்  இந்த விஜயகலாதான் குற்றவாளிகளை பாதுகாப்பதற்கு  பிரதிப் பொலிசாா் தொட்டு பொலிஸ் மாஅதிபரை கூட நாடி குற்றவாளிகளை விடுவிக்க முயற்சித்தவா்் . இவரது கணவரையே கொண்டு அழித்த மற்றும் தமிழ்மக்களை ஒர் இருண்ட பாதைக்குள் தள்ளிய விடுதலைப் புலிகளை மீள உயிருட்டுவதற்கு முயற்சிப்பதின் மா்மம் என்ன ? அவா் சத்தியப் பிரமாணம் செய்த அமைச்சர் பாராளுமன்ற உறுப்பிணருக்கும் பதவியை வைத்துக் கொண்டு அவா் இந்த நாட்டின் இறைமைக்கு விரோதமாகவே இயங்குகின்றாா். இதனை வன்மையாகக்  நாம் கண்டிக்கின்றோம். இந்த குற்றவாளிகளை உடன் கைது செய்து உரிய தண்டனையும் பெற்றுக் கொடுத்தல் வேண்டும். இதற்காக ஜனாதிபதி பிரதமா் உரிய நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

விஜயகலா போன்றவா்கள் முன்னாள் விடுதலைப்புலி போராளி  கமலி ஜெயக்குமாா் எழுதிய விடுதலைப்புலிகள் இருண்ட யுகம் புத்தகத்தை வாசித்தல் வேண்டும். அவா் அழகாக இந்த பிரபகரனின் யுத்ததினை தமிழ் மக்களின  அழிவினையும் எழுதிள்ளாா். வெளிநாடுகளில் உள்ள சில டயஸ் போராவுக்கு  மீண்டும் இலங்கையில் யுத்தமொன்று ஆரம்பித்தால்  அவா்கள் அங்குள்ள நாடுகளில்  சுகபோக வாழ்கை நடாத்த முடியும்.  அவா்கள் ஒன்றினைந்து இவ்வாறாக இலங்கையில் மீண்டும் ஒரு விடுதலைப்புலிகள் இயக்கத்தினை உயிா் கொடுக்க முயற்சிக்கின்றாா்கள். அதற்காக இவ்வாறான சில அரசியல் வாதிகள் துணை போகின்ற்னா்.  தற்போதைய ஜனாதிபதி முன்னைய ஜனாதிபதி வெளிநாடுகளுக்குச் சென்றால் இவா்கள் அந்த நாடுகளில் வீதியில் ்இறங்கி ஆர்பாட்டம் நடாத்துகின்றாா்கள். இதனை நாம் காண்கின்றோம்.  இதில் ்இருந்து விடுதலைப்புலிகள் இலங்கையில்  இல்லாவிட்டாலும்  வெளிநாடுகளில் உள்ளாா்கள்.  இலங்கையில் தற்பொழுது அமைதியான சூழ்நிலையை விரும்பாதவா்கள்களே இவ் வகையினா்.  புனா் வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் அண்மைய இரானுவ அதிகாரி ரத்வத்தை எவ்வாறு தமது உணா்ச்சிகளை வெளிப்படுத்தினாா்கள் ?  இந்த மக்கள் ஒருபோதும் மீண்டும் ஒரு இருண்ட யுகத்தினை விடுத்து ஒரு சமதான ஜக்கிய யுகத்தினையே உலகுக்கு எடுத்துக் கூறியிருக்கிறாா்கள்.

4 comments:

  1. பெரிய பருப்பு இவரு சொன்னதெல்லாம் நடந்திரும். கொழும்பில் அதிகரித்து வரும் இந்திய சீனர்களை கட்டுப்படுத்த வக்கில்லாமல் பிழைப்புக்கு மாகாண சபை நடத்திவரும் நீ எல்லாம் புத்திமதி பண்ண கூடாது. இதுக்கு பேசாம சிவப்பு துண்டை மாத்திட்டு கூட்டு எதிர்க்கட்சியில் போய் சேரலாம்

    ReplyDelete
  2. இவர் கூறுவதும் ஒரு கட்டத்தில் உண்மைதான்,இருந்தாலும் தேர்தல் காலங்களில் மக்கலை கவரும் வார்த்தைகலை அல்லி வீசுவதேன்பது எமது அரசியல் வாதிகளுக்கு சர்வ சாதாரனம்தான்.

    ReplyDelete
  3. அப்படியென்றால் பாராளுமன்றத்தை குண்டு வைத்து தகர்க்க வேண்டும் என்று சொன்ன விமல் வீர வன்சவை என்ன செய்யப்போகிறீர்கள் ?பாராளுமன்றத்தை தகர்த்தால் என்றால் அந்த இடத்தில் உள்ள அனைவரையும் கொள்வதே அவரது திட்டம் இதற்க்கு என்ன பதில் சொல்லப்போகிறார் இவர் !. ....?

    ReplyDelete
  4. Mr Nanayakkara,

    Can you give a portfolio for ‘Mannennai’ supplies to wijeyakala in your provincial council?

    ReplyDelete

Powered by Blogger.