Header Ads



யாழ்ப்பாணம் கோட்டை பள்ளிவாசல், மூடப்பட்டிருப்பது ஏன்..? நிர்வாகத்தினர் யார்...??

-பாறுக் ஷிஹான்-

யாழ்ப்பாணம் கோட்டை பள்ளிவாசல் தொடர்பில் புதிய நிர்வாகிகள் என தெரிவு செய்யப்பட்டவர்களில் வெளியிடங்களை சேர்ந்தவர்களே தம்மை தாமே தெரிவு செய்து பிழையாக மக்களை வழிநடாத்துவதாக குற்றச்சாட்டு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலைமையை அறிவதற்கு ஊடகவியலாளராகிய நான் இது தொடர்பாக மேற்கொண்ட புலனாய்வு தகவல்களை சேகரித்துள்ளேன்.

அதன் அடிப்படையில் இன்று (9) குறித்த பள்ளிவாசலின் புதிய நிர்வாகம் என கூறிக்கொண்டவர்கள் குறிப்பிட்டபடி எந்தவித நிர்வாகமோ இங்கு இல்லை என்பதை தெரியப்படுத்துவதுடன் பள்ளிவாசல் நான் சென்ற போது 2 மணியளவில் பூரணமாக மூடியே காணப்பட்டது.

தொழுவதற்கு கூட அங்கு சென்ற சிலர் திரும்பி சென்றதை அவதானிக்க முடிந்தது(இவர்கள் யாழ்ப்பாணம் நீதிமன்றம் மற்றும் கோட்டையை பார்வையிட வெளி மாவட்டத்திலிருந்து வந்தவர்கள்)

புதிய நிர்வாகம் என கூறி துண்டுப்பிரசுரம் ஒன்றை போலியாக ஒட்டியவர்கள் அங்கு ஒழுங்கு செய்த மௌலவி கூட இங்கு இல்லை.பள்ளிவாசலோ ஒரு சூனிய பிரதேசமாக காணப்படுகின்றது.

இது தொடர்பில் யாழ்ப்பாணம் கிளிநொச்சி உலமா கிளைத் தலைவரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு கேட்டபோது புதிய நிர்வாகம் ஒன்று தெரிவு செய்யப்பட்டதாக அறிய முடிந்தது.ஆனால் எந்தவித தொடர்புமே இல்லாதவர்கள் உள்வாங்க பட்டுள்ளனர்.இதில் மகல்லா வாசிகள் எவரும் இல்லை.

இது தவிர முஸ்லீம் கலாச்சார திணைக்கள அதிகாரிகள் தான் தெரிவு செய்தனர் என அப்புதிய நிர்வாகிகள் என குறிப்பிட்டுள்ள நபர்கள் அடிக்கடி கூறித்திரிவது பெரும் சந்தேகத்திற்குரியது.காரணம் தெரிவு செய்யப்பட்டவர்கள் எவரும் மகல்லா வாசிகள் அல்லர்.என கூறினார்.

குறித்த பள்ளிவாசல் தினமும் மூடிக்கிடக்கின்றது என பல தடவை ஊடகங்களில் செய்தியாக வெளிவந்தள்ளதை யாவரும் அறிந்ததே.

ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளினால் மேற்கொள்ளப்படவில்லை என்பதை கூற விரும்புகின்றேன்.

பிரதான இடத்தில் அமையப்பெற்றுள்ள குறித்த பள்ளிவாசலை திட்டமிட்டு ஒரு குழு தாமே புதிய நிர்வாக குழு என கூறி அப்பள்ளிவாசல் இயங்கி செயற்படுவதாக மக்கள் மத்தியில் பிழையாக தெரிவித்திருக்கின்றது என்பதே உண்மையாகும்.

மேலும் பள்ளிவாசலை முற்பகல் 11.30 மணியில் இருந்து இரவு 8.30 மணிவரை திறந்திருக்கும் என புதிதாக தம்மை தாமே தெரிவு செய்த நிர்வாகக்குழு தெரிவித்துள்ளபோதும் குறித்த பள்ளிவாசல் மதியம் 2 மணியில் இருந்து தினமும் மூடியே கிடக்கின்றது.

இதற்கு யார் பொறுப்பு??????

1 comment:

  1. S. tna will reply for this question. I think Vijayakala is responsible for it.

    ReplyDelete

Powered by Blogger.